Feb 28th, 2004 by இரா. செல்வராசு
“சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…”
பாரத நாட்டு ஒருமைப்பாட்டிற்காக ஒரு பாட்டைப் பாடி வைத்தான் பாரதி ! ஆனால் சில நிமிடங்களுக்கு முன் இந்தப் பாட்டைத் தான் என் பெண்களுக்குத் தாலாட்டாய்ப் பாடி (!) உறங்கத் தயார் செய்து விட்டு வந்தேன். பாட்டும்தாலாட்டும்தெரியாதஎனக்குஅவ்வப்போதுகைகொடுப்பதுபாரதிதான். இது ஒரு தாலாட்டுப் பாட்டின் இலக்கணங்களுக்கு உகந்ததாய் இல்லாதிருக்கலாம். ஆனால் எனக்கும் என் பெண்களுக்கும் இடையேயான அந்தச் சிறு உலகத்தில் அந்தச் சில நிமிடங்களுக்கு இதுவே எங்கள் தாலாட்டு.
Continue Reading »
Posted in வாழ்க்கை | 5 Comments »
Feb 26th, 2004 by இரா. செல்வராசு
சமீபத்திய இந்தியப் பயணத்தில் ஒருநாள். அது ஒரு ஞாயிற்றுக்கிழமையின் மதிய வேளை. ஏதோ சாமான் வாங்கிவரக் கடைவீதிப் பக்கம் சென்று மூன்று மணிக்கே மூடஇருந்த ‘சங்கீதா’வில் வாங்கிக் கொண்டு அந்தச் சாலை முக்கில் திரும்பும் போதுதான் அவரைப் பார்த்தேன். ‘ஸ்கூட்டி’ மாதிரி இருந்த ஒரு வண்டியை ஓட்டிச் சென்று கொண்டிருந்த அவரைத் துரத்திப் பிடித்து நிறுத்தியபோது உடனே என்னைத் தெரிந்துகொண்டார்.
Continue Reading »
Posted in வாழ்க்கை | 4 Comments »
Feb 22nd, 2004 by இரா. செல்வராசு
கடந்த வாரத்தில் எனது பெரிய பெண்ணை இவ்வருடம் பள்ளியில் சேர்க்கப் பதிவு செய்யும் நாள் என்று போயிருந்தேன். நல்லதொரு அமைப்பு முறையும் அனுபவமுமாய் இருந்தது. ஒருவாரம் முன்னரே அறிமுகநாள் என்று ஒரு கூட்டம் போட்டு அதிலேயே விவரங்கள், படிவங்கள் எல்லாம் கொடுத்துப் பெயர் வரிசைப்படி இரண்டு நாட்களாய்ப் பிரித்து அதன்படி எல்லோரையும் வரச்சொல்லி இருந்தார்கள். ஒரு பெரிய அறையில் நான்கைந்து நிலையங்கள் அமைத்து வரிசையாய் ஒவ்வொரு இடத்திலும் ஒரு விஷயம் சரிபார்த்து வாங்கி வைத்துக்கொண்டு, கேள்விகளுக்குப் பதில் சொல்லி, மொத்தம் சுமார் பத்து நிமிடத்தில் வேலை முடிந்தது. இந்த நாட்டின் இது போன்ற அமைப்பு முறையும் செயல்திறனும் ஒவ்வொரு முறையும் வியப்பைத் தருகிறது. நாளோட்டத்தில் இது சற்றுப் பழகியும் போய், அவ்வாறு இல்லாமல் சில இடங்களில் சிறு குறை கண்டாலும் பொறுமை இழக்கச் செய்வதையும் உணரமுடிகிறது.
சென்ற வருடமே கூட இவளைப் பள்ளியில் சேர்த்திருக்கலாம். ஆனால், அவர்கள் குறிப்பிட்ட செப்டம்பர் தேதியில் ஐந்து வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். அக்டோபரில் பிறந்த இவளுக்கோ முன்று வாரங்கள் பற்றவில்லை.
Continue Reading »
Posted in கண்மணிகள், வாழ்க்கை | 2 Comments »
Feb 18th, 2004 by இரா. செல்வராசு
இத்தனை நாட்களாய் bloggerல் குடி இருந்து விட்டு இப்போது வீடு மாறி இங்கு வந்தாயிற்று. இது இரண்டாவது மாற்றம், மூன்றாவது வீடு. ஒவ்வொரு முறை மாறும் போதும் சற்றுக் கடினமாகத் தான் இருக்கிறது. ஆனாலும் இங்கு கொஞ்சம் சுதந்திரம் அதிகம் என்று தோன்றுகிறது.
உதாரணத்திற்கு, பின்னூட்டப் பகுதிக்கு மூன்றாம் ஆள் யாரையும் நம்ப வேண்டியதில்லை. (மொத்த வீடே இன்னும் மூன்றாம் ஆளை நம்பித் தான் இருக்கிறது என்பது வேறு விஷயம்!).
செய்தியோடை அழகாய் வேலை செய்கிறது. Atom ஓடை வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். உண்மையில் அதுவும் ஏற்கனவே இருக்கிறது. தேவைப்பட்டால் பிரசுரித்துக் கொள்ளலாம்.
பதிவுப் பகுதிகள் அமைத்துக் கொள்ளலாம். அவற்றை இன்னும் முழுமையாய் அமைக்கவில்லை.
இந்தப் புதிய வீட்டின் மற்ற சீரமைப்பு விஷயங்களை ஓரளவு செய்து விட்டேன். இன்னும் இருப்பதை நாளடைவில் பார்த்துக் கொள்கிறேன். இதையே செய்து கொண்டிருந்தால் வேறு எதுவும் படைக்க (!!) இயலாது போய்விடும்.
அதனால், இனிமேல் எல்லோரும் இந்தப் புது வீட்டுக்கு வாங்க. பழைய பதிவுகளையும் பின்னூட்டங்களையும் இங்கு எடுத்துப் போட்டிருக்கிறேன். அதிகம் இருக்கவில்லை. ஆனாலும் ஒரு இடத்திலேயே எல்லாம் இருப்பதும் ஒரு சௌகரியம். பதிவுகளுக்குச் சரியான தேதியைப் போட முடிந்தாலும், பின்னூட்டங்களுக்குத் தேதியைச் சரி செய்ய முடியவில்லை. தெரியவில்லை. அதனால் அப்படியே விட்டு விடப் போகிறேன்.
புது வீடு MovableType கொண்டு தயாரானது. இன்னும் சற்றுக் கடினமாக இருந்தாலும், இதில் இருக்கும் ஒரு சுதந்திரம் நன்றாக இருக்கிறது. புது நுட்பங்கள் கற்றுக் கொள்ள இது ஒரு வாய்ப்பாகவும் அமைகிறதே என்று ஒருபக்கம் எனக்கு ஆர்வ மிகுதியும் ஏற்படுகிறது.
இந்தப் பக்கம் வந்து போகும் அனைவருக்கும் நன்றி. மீண்டும் விரைவில் சந்திப்போம்.
Posted in பொது | 6 Comments »
Feb 9th, 2004 by இரா. செல்வராசு
தமிழ் வலைப் பதிவுகளுக்காக அ/கே/கே அல்லது வ/கே/கே என்று அடிக்கடியும் வழக்கமாகவும் கேட்கப்படும் கேள்விகளையும் அதற்கான பதில்களையும் தொகுத்து வைக்கும் வேலையில் இறங்கச் சிலர் சில மாதங்கள் முன்னர் முன்வந்தோம். அதில் கருத்துக்கள், பின்னூட்டங்கள், மறுமொழிகள், விமரிசனங்கள், என்று பலவாறாகக் கூறப்படும் பகுதி பற்றி நான் தயார் செய்ய முன்வந்திருந்தேன். ஒரு நீண்ட விடுப்பில் செல்ல நேரிட்டதால் முன்னரே இதனை முடிக்க முடியவில்லை. அதுவே எனது அதிகாரபூர்வமான சாக்கு !!
அதனை இப்போது முடித்து முதல் படியை வலையில் ஏற்றி உள்ளேன். அது பற்றிக் கருத்துக்களோ, திருத்தங்களோ இருந்தால் எனக்கோ, காசிக்கோ, ஒரு மின்னஞ்சல் தட்டி விடுங்கள். இல்லையெனில் இங்கு கருத்துக்கள் இட்டுச் செல்லுங்கள்.
காசி ஐயா, வேலையை முடிச்சிட்டேனுங்க. ஒழுங்கா இருக்குதுங்களா ?
Posted in கணிநுட்பம் | 4 Comments »