Feed on
Posts
Comments

தமிழ்வலைப் பதிவுகள் இன்னும் சிலமேலானநுட்ப விஷயங்கள் கொண்டு வளர்ந்து கொண்டிருக்கின்றன. கருத்துக்கள்(அ) பின்னூட்டங்கள் பகுதிகளோடு விளையாடிய கூட்டம், பிறகு செய்தியோடைத் தொழில்நுட்பத்தில் நுழைந்து பார்த்துக் கொண்டிருந்தது. பல பதிவுகள் செய்தியோடைகளை அமைத்து விட்டாலும், இன்னும் சிலவற்றில் சில சிக்கல்கள் இருக்கின்றன. சில பதிவுகள் மட்டுமே இருந்த காலத்தில் தமிழ் வலைப்பதிவுகள்பக்கம் வந்து எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. பக்கங்கள் அதிகமாக அதிகமாகRSS என்னும் செய்தியோடைகள் மிகவும் அவசியமாகின்றன. வலைப்பதிவுகள் படிக்க எனக்கு இனி ஷார்ப்ரீடர்போன்ற திரட்டி நிரலிகளே பிரதான இடைமுகமாக இருக்கப் போகிறது. பலரும் இது போன்ற நிரலிகளையே பாவிக்க ஆரம்பித்துள்ளனர். பார்க்க வெங்கட், காசி, பரி, பத்ரி

Continue Reading »

RSS பற்றிப் பல காலமாய்ப் படித்து ஆய்ந்து கொண்டிருந்தாலும், இத்தனை நாட்களாய் ஒரு திரட்டியைப் பயன்படுத்தாமல் இருந்தேன். ஒரு நல்ல திரட்டியாக வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருக்கையில் குமரகுரு SharpReaderன் புதிய வெளியீடு பற்றி எழுதி இருந்தார். Atom ஓடைகளையும் அது இப்போது படிக்கிறது என்றார். BlogSpot இப்போது இலவசப் பதிவுகளுக்கு Atom ஓடையைத் தருவதால் இனி SharpReaderஐப் பாவித்துப் பெரும்பாலான தமிழ்ப் பதிவுகளைப் பார்க்க முடியும் என்று இன்று தான் இறக்கிக் கொண்டேன்.

எனக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் எந்த பைட்-குதறல்களுக்கும் ஆளாகாமல் அழகாக வருகிறது. அதோடு ஒவ்வொரு தளத்திற்காகச் சென்று பார்க்காமல் ஒரே இடத்தில் பார்த்துக் கொள்ள முடிவதில் எவ்வளவு நேரம் மிச்சமாகிறது ! WBeditor என்று ஒரு சொருகல்-நிரலியும் கிடைக்கிறது. இதை வைத்துக் கொண்டு இந்தத் திரட்டியில் இருந்தே வலைப்பதிய முடியுமாம். நான் பாவிக்கும் movableType தளத்திற்கு எப்படி இணைப்பது என்று இன்னும் துருவிப் பார்க்க வேண்டும்.


குறிப்பு 1: SharpReader பெருவதற்கு முன் மைக்ரோசாஃப்டின் .Net Framework 1.1 என்பதை முதலில் இறக்கிக் கொள்ள வேண்டும்.


குறிப்பு 2: RSS பற்றி எளிமையாய் ஒரு பதிவைக் காசியும் இன்று எழுதி உள்ளார்.

வலையில் வலம் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று எனக்கு உரைத்தது. கம்ப்யூட்டரின் தமிழ்ப்பதத்தை நான் கணிணிஎன்று தான் இத்தனை நாட்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் பலர் அதனைக் கணினிஎன்று ஈற்றெழுத்தை இரண்டு சுழியாக்கி இருந்தார்கள். எதுசரி? எங்கிருந்து எப்போது ஏன் நான் மூன்று சுழி’ணி’ யைப் பாவித்து வருகிறேன்? தெரியவில்லை. ஒரு சின்னத் தேடல் ஆய்வு செய்வோம் என்று கூகிளில் சென்று இரண்டு வடிவத்தையும் உள்ளிட்டுத் தேடினேன். ஆகா, இதுதான் யூனிகோட்டின் சுகம். இரண்டு வடிவங்களும் பயன்பாட்டில் இருந்தாலும் பெரும்பாலும் கணினி என்பது தான் அதிகமாக உள்ளது. மூன்று சுழிக் கணிணிக்கு கூகிள்இரண்டு பக்கங்களும், இரண்டு சுழிக் கணினிக்குஇருபத்தெட்டுப் பக்கங்களும் தந்தது. இதற்கிடையில் இன்னும் சிலர் கணனி என்றும் கணணி என்றும் பாவிக்கின்றனர் என்றும் தெரிந்தது. ஆனாலும், இவ்விரண்டிற்கும் கூட கூகிள் இரண்டு பக்கங்களைத் தாண்டவில்லை. இந்தக் கடைசி இரண்டும் சரி என்று எனக்குத் தோன்றவேயில்லை.

Continue Reading »

குதிரைக்குப் பிடிக்கும் என்பார்கள். ஆனால் நான் குதிரை இல்லையே ! சிலருக்குச் சில வகைகளில் சமைத்தால் தான் இது பிடிக்கும் என்று கேட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு எந்த வடிவமானாலும் கொள்ளுப் பருப்புப் பிடிக்கும். சமைப்பதற்காக வேக வைத்திருப்பார்கள். தண்ணீரை இறுத்து ஊத்தி விட்டுக் குழம்பு செய்யவென்று தனியே வைத்திருக்கும் பருப்பைத் திருடி இளஞ்சூட்டோடு வாயில் போட்டுக் கொள்ளச் சுவையாய் இருக்கும். முழுவதுமாய் வடியாதமெலிதாய் உப்புக் கலந்த கொள்ளு வெந்தநீர் நாவின் நுனியில் முதலில் பட்டு அப்படியே ஓரங்களில் படர்ந்து போவது தனிச் சுவை. ‘பொருபொரு’ (அ) ‘நறநற’என்று அரைத்து வைத்தாலும் சரி, பசையாய் ‘நெகுநெகு’ வென்று சட்டினியாய் அரைத்தாலும் சரி எனக்குப் பிடிக்கும். இறுத்த தண்ணீரில் ரசம் வைத்தாலும் சுவை. எதுவும் செய்யாமல் சும்மா ரெண்டு வெங்காயம் வெட்டிக் கடுகு போட்டுத் தாளித்துக் கொடுத்தாலும் சரி, அப்படியே சாப்பிடலாம்.

Continue Reading »

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் (1993 ஆகஸ்ட்) நான் எழுதிய இந்தக் கடிதத் தொடர் முதலில் Soc.Culture.Tamil என்னும் தமிழுக்கான யூஸ்நெட் செய்திக் குழுமம் ஒன்றில் வெளிவந்தது. என்னுடைய எழுத்து முயற்சியின் வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய மைல்கல்.

அப்போதெல்லாம் தமிழ் எழுத்துருக்கள் பரவலாய்க் கிடைக்கவில்லை. கணிணிகளில் தமிழின் ஆரம்ப நடை. தமிழில் இந்தக் குழுமத்தில் எழுத romanized முறையும் பின்னர் மிகச் சிறு மாற்றங்களுடன் கூடிய மதுரை எழுத்து முறையும் தான் இருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து அந்த ஆங்கில உருவைத் தமிழ் எழுத்துக்களாக மாற்றும் வாய்ப்புக் கிட்டியது. LibTamil என்னும் நிரலித் தொகுப்பும் m2t (மதுரை To Tex) உருமாற்றியையும் பயன்படுத்தி LaTeXல் வாஷிங்டன் தமிழ் எழுத்துருக்கள் கொண்டு தமிழ் வடிவத்தைக் கொண்டு வந்தது பெரும் வேலையாய் இருந்தது. அப்படி வந்ததை ஒரு புத்தகமாக்கி என்னைச் சுற்றிய வட்டத்திற்கு மட்டும் தந்திருந்தேன்.

Continue Reading »

« Newer Posts - Older Posts »