வணிகப்பெயர்களையும் நிறுவனங்களின் பெயர்களையும் தமிழ்ப்புலத்தில் சொல்லும்போது அவற்றை மொழிபெயர்க்கலாமா கூடாதா என்னும் கேள்வி குறித்துச் சிலநாள் முன்னர் ‘பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்’ என்று எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. ஒரு குறிப்பிட்ட பெயரை எடுத்து அலச இருப்பதால், ஒரு கட்டின் ஆய்வு அல்லது அலசல் என்போம். [Case என்னும் சொல்லுக்குத் தமிழில் கட்டு என முன்வைத்திருந்தார் இராம.கி. அதையொட்டி, Case analysis என்பதற்குக் கட்டு+ஆய்வு எனக் கட்டாய்வு என்று கொண்டேன். கட்டலசல் என்றும் கூறலாமோ?]. வேற்றுமொழி […]
Category Archive for 'தமிழ்'
Brand என்னும் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் பொரிம்பு என்றொரு சொல்லைப் பல்லாண்டுகளுக்கு முன்னரே முன்வைத்திருந்தார் இராம.கி ஐயா. அவர் முன்வைக்கும் சொற்கள் சிலசமயம் ஆங்கிலச் சொல் ஒலிப்புக்கு நெருக்கமாக இருப்பதையொட்டிச் சிலர் அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், பிற தமிழ்ச்சொல் மூலங்களிலும் வேர்களிலும் இருந்து அவர் அவற்றை வருவித்துக் காட்டும்போது அவற்றில் பிடித்தவற்றை ஏற்றுக் கொள்வதில் எனக்குச் சிக்கலில்லை. பொரிம்பும் அப்படியான ஒன்றுதான். பொரித்தல் என்னும் வினை தமிழில் தீயிலிட்டோ, சூடுவைத்தோ, வறுத்தோ செய்யும் ஒரு செயலைக் குறிப்பது […]
"குந்தவை என்னும் பெயருக்குக் குறிப்பாக ஏதேனும் பொருள் இருக்கிறதா?", என வினவியிருந்தார் நண்பரொருவர். சோழப்பேரசில் புகழ்வாய்ந்த ஒரு பெண்ணும், மாமன்னன் இராசராசனின் தமக்கையும், வந்தியத்தேவனின் மனைவியுமானவரின் பெயருக்குக் காரணம் என்னவென்று இதுகாரும் நான் சிந்தித்ததில்லை. ஆனால், இப்படியொரு புதிய தேடல் பலவாறாக என்னைச் செலுத்தியதன் விளைவே இப்பதிவு. குந்தவையின் பெயர்க்காரணம் என்ன? ஒரு பகுபதமாய்க் கொண்டு அப்பெயரைப் பிரித்து எழுதினால் ‘குந்தம்+ஐ’ என்றோ, ‘குந்தம்+அவ்வை’ என்றோ கருத இடம் இருக்கிறது. தமிழில் ‘ஐ’ என்னும் பெயர்ச்சொல்லுக்குத் தலைவன் […]
“அலுக்கம்னு ஓரிடத்துல பயன்படுத்தியிருக்கீங்க. அதற்குச் சரியான பொருள் என்னங்க?”, என்று கேட்டு எழுதியிருந்தார் நண்பர் சுந்தர். அதன் இடத்தைப் பொருத்து ‘வாய்ப்பு’ என்று பொருள் கொள்ளலாமா என்று தோன்றியது என்றிருந்தார். ‘இனிக்காதது’ என்னுமொரு கட்டுரையில் 2006இல் எழுதியிருக்கிறேன். https://blog.selvaraj.us/archives/218 (வழி வழியாய் என் மூதாதையருக்குக் கிடைத்த தலைமுறைச் சீதனம் – அது எனக்கும் கிடைத்திருக்கக் கூடிய அலுக்கம் ஓரிரு முறை இருந்த போதும் இன்னும் கிட்டவில்லை). கொங்கு வட்டாரத்தில் அலுக்கம் என்பது அன்றாடம் புழக்கத்தில் இருக்கும் சொல். […]
ஒரு விசயேந்திரர்(ன்) எழுந்து நிற்கவில்லை என்பதால் தமிழ்த்தாய்க்கு ஓர் இழுக்கும் இல்லை. தமிழின் சிறப்புக்கும் செழுமைக்கும் ஒரு பங்கமும் இல்லை. சிறுமைப்பட்டுப் போனதென்னவோ சின்னவர், காஞ்சியின் மடத்தலைவர் தான். நிற்காத காரணமாய் முன்னும் பின்னும் முரணாய்க் கருத்துகளை வெளியிடுவதில் இருந்தே தவறு செய்துவிட்ட அவர்களின் தடுமாற்றம் தெரிகிறது. ஆனாலும் அதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும், வருத்தம் தெரிவிக்கவும் அவர்களின் அகந்தை இடந்தராது. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டும் என்பது வெளிப்படையான சட்டமில்லை தான். ஆனால், அதுவே பொது […]