ஒரு தமிழ்மீடியப் பையனின் பீட்டர் ஸாங்க்ஸ் அனுபவத்தை விட ஆங்கில மிடையவழி வந்த எனது ஆங்கிலப் பாடல் கேள்விஞானம் மிகவும் குறைவு. சற்றேறக்குறையச் சுழி என்றே சொல்லலாம். அமெரிக்கா வந்தபின் சதா பாட்டுக்களில் திளைத்திருந்த அறைத்தோழர்களும் நண்பர்களும் காரணமாய் அங்கங்கு ஒட்டிக் கொண்ட சில பாடல்களில் இரண்டு மட்டும் குறிப்பிடத் தக்கவை. நினைவில் நிற்பவை. ஒன்று மடோன்னாவின் ‘இது என் விளையாட்டரங்காய் இருந்தது’ (This used to be my playground). இரண்டாவது, பாப் மார்லியின் ரெக்கே […]
Category Archive for 'கவிதைகள்'
வாழ்க்கை வீரன் கல்லறை
Posted in கவிதைகள் on Mar 2nd, 2006
கொடும்பகை அவற்றொடு கடும்போர் புரிந்திடக் குதிரை யானையேறிக் கைவேலெறிந்து கூர்வாள் சுழற்றிச் சமராடுகையிற் கிழிந்து வலித்ததென் உடல் மட்டும் தான். கூடவிருந்த கூட்டம் ஒன்று காலடிக் கம்பளமுருவிக் காய்ந்த வஞ்சங்கொண்டு குறுவாள் பின்னெழுப்பிக் குத்துகையில் நறுக்கென்று வலிக்கும் உள்ளமுஞ் சேர்ந்து. இடிந்து போயினுமிவை இச்சகத்தில் இயற்கையெனக் காயங்கள் சுயமாற்றித் துயர் துச்சமென் றுதறியெழுந்து நிலைத்து நிற்க முயலுகையில் அச்சோ பாவமென இச்சுச்சுக் கொட்டியொரு கூட்டம் இரக்கக்கழிவு காட்டியே கொன்றுவிட்டதென் உயிரை. இருந்தும் என் கல்லறையில் எழுதிவைத்தேன் இவனொரு […]
சொல்லாத காதல்
Posted in கவிதைகள் on Feb 27th, 2006
என் மோனம் சொல்லாத காதலையா என் வார்த்தைகள் சொல்லி விடப் போகின்றன? வார்த்தைகள் மட்டுமல்ல அன்று புதிதாய்க் கொய்த வண்ண மலர்கள் கூடச் சொல்ல உதவாது என் காதலை. கருகும் நீரின்றித் துவளும் நாட்பட உலரும் ஒரு மலரைப் போன்றதல்ல என் காதல். மலர்கள் சுமக்கும் நுரை ததும்பியோடும் நதிநீர்க் கடியில் நிரந்தரமாய் ஆழக் கிடக்கும் கறுவெண் மணல் போன்றது. கங்குப்பொறியல்ல தோழி அது ஒரு கால நிகழ்ப்பு.
வெள்ளிக் கெழம வெளக்கு வச்சு எல்ல மாரிக் கெண்ண ஊத்தி சனிக் கெழம வாரா வாரம் சனீசு வரனுக் கொம்போது சுத்து. முக்குச் சந்துப் புள்ளை யார்க்கு மறக்கா மப்பாலு ஊத்தி – ஊரச் சுத்தி இருக்கும் மலை எல்லாம் சூடம் வச்சேன் முருக னுக்கு. கொல தெய்வங் கோயி லுக்கு கொடுமுடித் தீத்தம் வருசம் ஒருக்கா பழனி மலைச் சாமிக்கு நெத்திப் பட்டை யோடே பூசை. தொண்டத் தண்ணி வத்திப் போகக் கத்தி வச்சேன் அரோ […]
காட்டு வேலியில மொளச்ச கொவ்வாப் பழமும் – வெல்லம் போட்டு இடிச்சுத் தின்ன புளியங் கொழுந்தும் மாட்டு வண்டி லாரியில உருவுன சக்கரக்கரும்பும் உலுக்குன மரத்துக் கடியில பொறுக்குன கோணப் புளியங்காவும் கன்னம் பூராஇலுக்கிக் கிட்டு ஈச்ச பனம் பழமும் இன்னும் பெருவெரலு உட்டு உறுஞ்சுன எளநொங்கும் எதுவுமே தெரியாம எம்புள்ளைக வளருது எல்லாமுங் கெடைக்குற அமெரிக்கத் தேசத்துல. * * * *