இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 4

Entries Tagged as 'பொருட்பால்'

வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை

September 11th, 2020 · 3 Comments

"வங்கிகளின் திருட்டு வேலை" என்று வீட்டுக்கடன் பற்றிய ஒரு பதிவும் ஒலிப்பதிவும் சில நாள்களாகக் கண்ணில் பட்டுக்கொண்டிருந்ததை இன்றுதான் கேட்க நேர்ந்தது. எச்சு.டி.எப்.சி வங்கி மேலாளர் ஒருவருக்கும் கடன் வாங்கிய மருத்துவர் ஒருவருக்கும் இடையே நடந்ததாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒரு ஒலிக்கோப்பு. இப்படி ஒரு பதிவைச் சமூக ஊடகத்தில் போடவேண்டும் என்ற முன்முடிபுடன் மருத்துவர் பேச்சை அமைத்துக் கொள்வதைக் கவனிக்க முடிகிறது. என் கருத்தில் இது ஒரு அயோக்கியத்தனமான பதிவு. கடுஞ்சொற்களுக்கு வருந்துகிறேன். குறைந்தபட்சம், படித்த மக்களாய் இருந்தாலும் […]

[Read more →]

Tags: சமூகம் · பொது · பொருட்பால்

வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு

February 23rd, 2008 · 4 Comments

முதலில் ‘பரத்தீடு’ சொல்விளக்கம் தந்துவிடலாம். சிலசமயம் சாதாரணமாகப் பாவிக்கும் ஆங்கிலச் சொற்களுக்குக் கூட ஈடான தமிழ்ச்சொற்கள் தெரியாமல் உறுத்தும். Presentation என்னும் சொல்லை அன்றாடம் பலமுறை பயன்படுத்தினாலும் அதற்கு நிகரான தமிழ்ச்சொல் என்ன என்று தெரியாமல் இருந்தது. தெரியாத சொற்களுக்கு முதல் முயற்சியாக இராம.கி அவர்களின் பெயரைச் சேர்த்துக் கூகுளில் தேடுவது என் வழக்கம். காட்டாக இன்று தேடியது presentation இராம.கி என்னும் சொற்றொடர். 🙂 வேறு யார் என்ன முன்வைக்கிறார்கள் என்றும் அதன் பிறகு சில […]

[Read more →]

Tags: சமூகம் · பொருட்பால்

ராசா வேசம் கலைஞ்சு போச்சு

February 20th, 2008 · 30 Comments

பட்டக்காரர் தோட்டத்துக்குப் பின்னாடி இருக்குற முட்டக்கடையில ஒடஞ்ச முட்டையப் பாதி வெலைக்கு வாங்கிச் சாப்பிட்ட கதையப் போன மாசம் ஒருநா எம்பொண்ணுங்க கிட்டச் சொல்லிக்கிட்டிருந்தேன். ரொம்ப ஒடைஞ்ச முட்டைன்னா ஒரு தூக்குப் போசில ஒடச்சு ஊத்துவாங்க. அதுக்கு இன்னும் கொஞ்சம் வெல கம்மி. இந்த ஒடஞ்ச முட்டை வாங்குற சொகுசும் எப்பவாச்சியுந்தான் கெடைக்கும். நெனச்சப்பவெல்லாம் பிரிஜ்ஜத் தொறந்து ரெவ்வெண்டு முட்டை ஒடச்சு, சுட்டோ வறுத்தோ சாப்பிட முடியற இந்தக் காலத்துல எதுக்கு அந்தப் பழங்கதை எல்லாம் சொல்லோணும்னு […]

[Read more →]

Tags: கொங்கு · சமூகம் · பொருட்பால்