இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 4

Entries Tagged as 'கணிநுட்பம்'

ஒருங்குறியும் தமிழ் எழுத்தும்

November 11th, 2007 · 10 Comments

தமிழில் எத்தனை எழுத்துக்கள் என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? நீங்கள் எந்த ஊர்க்காரராக இருந்தாலும், எந்தப் பள்ளியில் தமிழ் பயின்றிருந்தாலும், இந்தக் கேள்விக்குப் பதிலாக 247 எழுத்துக்கள் (மற்றும் சில வடமொழி எழுத்துக்கள் ~ கிரந்தம்) என்று தான் படித்திருப்பீர்கள். உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு, உயிர்மெய் இருநூற்றுப் பதினாறு, ஆய்தம் ஒன்று சேர்த்து ஆக மொத்தம் இருநூற்று நாற்பத்தியேழு. இருநூற்று நாற்பத்தியேழு எழுத்துக்கள். இந்தக் கொத்தில் (set) சொல்லப்பட்ட ஒவ்வொன்றும் முழுதாய் ‘எழுத்து’ என்றே […]

[Read more →]

Tags: கணிநுட்பம் · தமிழ் · யூனிகோடு

ஒருங்குறியும் ஓகாரக் கொம்பும்

October 27th, 2007 · 13 Comments

“It’s a consonant, vowel, vowel, consonant… நந்து”, என்று தங்கைக்கு துப்புக் கொடுக்க முயன்றாள் நிவேதிதா. நெடுந்தொலைவு பயணம் சென்றால் பெண்களின் அயர்வு தெரியாதவண்ணம் இருக்க ஏதேனும் கேட்டு அவர்களின் மனதைச் சுவாரசியமாக வைத்திருக்க முயல்வதுண்டு. சில சமயம் கணக்கு. சில சமயம் ஆங்கிலம். சில சமயம் கதை, இப்படி. அப்படியொரு பயணமொன்றில் ஒரு வருடத்திற்கும் முன்பு நடந்த கதை தான் இது. ஆங்கிலச் சொற்களுக்கு எழுத்துவரிசை சொல்லச் சொல்லி அன்று சின்னவளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். […]

[Read more →]

Tags: கணிநுட்பம் · கண்மணிகள் · யூனிகோடு

இந்தியா – ஒரு குறும்படம்

June 16th, 2007 · 11 Comments

ஆறு நிமிட நேரம். ஆறு முதல் பன்னிரண்டு வயதுள்ளான ஆரம்பப்பள்ளி மாணவப் பார்வையாளர்கள். International Fair என்னும் பன்னாட்டுத் திருவிழாவில் இந்திய தேசம் பற்றி ஒரு அறிமுகப் படம் காட்டவேண்டும் என்றபோது, வெறும் சடத்துவப் படங்காட்டல் அல்லாது சிறிதாய் ஒரு குறும்படமாய்த் தயார் செய்ய முடியுமா என்று ஒரு முயற்சியில் இறங்கினோம். ஹோலி மற்றும் தீபாவளிப் பண்டிகைகளுக்கும் முக்கியத்துவம் தருவதாய் இருக்கவேண்டும் என்னும் இந்தியக் குழுவினரின் விருப்பத்தையும் கருத்தில் கொண்டு, அதோடு முடிந்தவரை பல அம்சங்களையும் காட்டவும் […]

[Read more →]

Tags: கணிநுட்பம் · திரைப்படம்

ஐப்பீ

April 20th, 2007 · 30 Comments

இணையத்தில் ஓரளவிற்குக் குப்பை கொட்டியிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் இந்த ‘ஐப்பீ’ என்பது பற்றிக் கேட்டிருக்கக் கூடும். இது உலகெங்கும் உள்ள கணினிகளை இணைக்கும் வலையாகிய இணையத்தின் செயலாற்றலுக்கு முக்கியமான ஒரு நுட்பம் என்றாலும், ஆழத்தில் இருக்கிற அது பற்றி அறியாதிருப்பது சாதாரணமானது தான். ஆனாலும், அந்த அறியாமையைத் தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தி, ஏதாவது சில அரசியற்சிக்கல்களாலோ அரைவேக்காட்டுத்தனத்தாலோ, (இல்லை அறியாமையாலோ கூட இருக்கலாம்) பயமுறுத்தும் சில(ர்) எழுத்துக்களையும் கூட நீங்கள் ஆங்காங்கே கண்ணுற்றிருக்கலாம். கணினி வல்லுனர்கள் பலருக்கும் […]

[Read more →]

Tags: கணிநுட்பம்

ஃபோர்ட்ரான் உருவாக்கிய ஜான் பேக்கஸ்

March 29th, 2007 · 6 Comments

நவீன கணிமைக்கும் அதில் குறிப்பாக மென்பொருள் வளர்ச்சிக்கும் ஒரு பெரிய மைல்கல்லாக இருந்த ஃபோர்ட்ரான் (Fortran) என்னும் கணிமொழியை உருவாக்கிய குழுவின் தலைவர் ஜான் பேக்கஸ் (John Backus), தனது 82ஆவது வயதில் சென்ற வாரத்தில் (மார்ச் 17) மறைந்து போனார். ஜாவாவும், சி++உம், சி-ஷார்ப்பும் இன்ன பிற இக்காலக் கணிமொழிகளில் விளையாடும் நிறையப் பேருக்குப் ஃபோர்ட்ரான் என்னும் ஒரு மொழியைத் தெரியாமலே இருக்கலாம். அல்லது பெயரளவில் மட்டும் ‘எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதே’ என்னும் தூரத்துச் […]

[Read more →]

Tags: கணிநுட்பம்