Feed on
Posts
Comments

Category Archive for 'வேதிப்பொறியியல்'

முன்குறிப்பு: 2010 ஏப்ரல்-இல் பிரிட்டிசு பெட்ரோலியம் நிறுவனத்தின் மெக்சிக்கோ வளைகுடா விபத்தும் எண்ணெய்க் கசிவும் ஏற்பட்டு இன்றோடு சரியாக இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன.  அச்சமயத்தில், இது பற்றிய விரிவான ஒரு கட்டுரையைப் புதிய இணைய இதழ் ஒன்று கேட்டுக் கொண்டதன் காரணமாக  எழுதி அனுப்பி இருந்தேன். ஆனால், அவ்விதழ் வெளிவரவே இல்லை என்பதால் இவ்விடுகை இத்தனை மாதங்களாய் வெளியுலகம் அறியாமல் உறங்கிக் கொண்டிருந்தது. அதனைச் சற்று இற்றைப் படுத்தி இங்கே இடுகிறேன். * * * * […]

Read Full Post »

அதரி, மூடிதழ், ஓரதர், தடுக்கிதழ், வாவி, ஊடிதழ், அடைப்பிதழ், மடிப்பிதழ் என்று நான் அடுக்குவதைப் பார்த்து ஏதோ திட்டுகிறேன் என நினைத்துவிடாதீர்கள். அண்மையில் தமிழ் விக்கிப்பீடியாவில் சில கட்டுரைகள் எழுதப் போன நான், valve என்பதற்கான கட்டுரை ஒன்றை எழுத எண்ணித் தேடியபோது வந்து விழுந்த சொற்கள் தாம் இவை. தஞ்சைப் பல்கலைக்கழக அருங்கலைச்சொல் அகரமுதலி அதரி என்பதை முன்வைக்கிறது. முதலில் இது எனக்குப் புரியவில்லை என்றாலும், கனடாவில் உள்ள பேரா.செல்வா ‘அதர்’ என்றால் வழி என்பதை […]

Read Full Post »

முதல் முறையாகக் கரட்டுநெய் (Crude Oil) விலை இன்றைய சந்தையில் ஒரு பீப்பாய்க்கு நூறு டாலர் அளவைத் தொட்டிருக்கிறது. கச்சா எண்ணெய் வள உச்சம் என்று நான் முன்பு எழுதிய இடுகையின் போது விலை ஐம்பது டாலர் அளவில் இருந்தது. நாள் முடிவில் சற்றே கீழிறங்கி $99.62 என்று முடிந்தாலும், சுமார் மூன்றே வருடங்களில் இதன் விலை இரட்டிப்பாகி இருக்கிறது. பலவித எரிபொருட்களுக்கும் இயல்பொருளாய், ஆரம்ப மூலப்பொருளாய்க் கரட்டுநெய் அமைந்திருப்பதால், அதன் விலை உயர உயரப் பிற […]

Read Full Post »

பகுதி-1 |பகுதி-2 | பகுதி-3 வேதிப்பொறியியல் கோட்பாடுகளும் நுட்பங்களும் காரணமாக விளையும் இன்னும் சிலவற்றைப் பார்ப்போம். எண்ணெய் விள்ளெடுப்பு ஆலைகளில் தொடங்கிய பயணத்தைத் தொடர்ந்தால், பலவித வண்டிகள், ஊர்திகள், பறனைகள் இவற்றின் எரிபொருளைத் தருவது தவிர, இன்னும் பல வேதிப்பொருட்களுக்கு அவை ஆரம்பமாய் இருப்பது புலப்படும். பல்வேறு பாறைவேதி ஆலைகளுக்கு (petrochemical plants) மூலப்பொருட்கள் தருவனவாய் அவை அமைகின்றன. விள்ளெடுப்புக் கோபுரங்களின் உச்சியில் வெளிவரும் வாயுக்கள் வழியே தான் வீட்டில் சமையலுக்குப் பயன்படும் இழிக்கிய பாறைநெய் வாயு […]

Read Full Post »

பகுதி-1 | பகுதி-2 |பகுதி-3 வேதிப்பொறியியல் நுட்பங்கள் நமது அன்றாட வாழ்வை எப்படித் தொட்டிருக்கின்றன என்று பார்க்க, காட்டாக, நமது நாளொன்றைக் கருத்தில் கொள்வோம். காலை எழுந்து சற்றே சோம்பல் முறித்துவிட்டுக் குளியலறைக்குள் செல்வோம். அங்கே பல் துலக்கப் பயன்படுகிற பசையில்(பேஸ்ட்டு) இருந்து குளிக்கும் போது பயன்படும், சோப்பு, ஷாம்பூ, கண்டிஷனர், லோஷன் போன்ற சகல தைலங்களும் களிம்புகளும் வேதிப் பொருட்களே. வேதிப்பொறியியல் முறைகளில் தயாராவது தான். நல்ல மென்மையான துண்டில் ஈரத்தைத் துவட்டிக் கொள்கிறீர்களா? அதிலே […]

Read Full Post »

Next »