இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 4

Entries Tagged as 'பொது'

வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை

September 11th, 2020 · 3 Comments

"வங்கிகளின் திருட்டு வேலை" என்று வீட்டுக்கடன் பற்றிய ஒரு பதிவும் ஒலிப்பதிவும் சில நாள்களாகக் கண்ணில் பட்டுக்கொண்டிருந்ததை இன்றுதான் கேட்க நேர்ந்தது. எச்சு.டி.எப்.சி வங்கி மேலாளர் ஒருவருக்கும் கடன் வாங்கிய மருத்துவர் ஒருவருக்கும் இடையே நடந்ததாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒரு ஒலிக்கோப்பு. இப்படி ஒரு பதிவைச் சமூக ஊடகத்தில் போடவேண்டும் என்ற முன்முடிபுடன் மருத்துவர் பேச்சை அமைத்துக் கொள்வதைக் கவனிக்க முடிகிறது. என் கருத்தில் இது ஒரு அயோக்கியத்தனமான பதிவு. கடுஞ்சொற்களுக்கு வருந்துகிறேன். குறைந்தபட்சம், படித்த மக்களாய் இருந்தாலும் […]

[Read more →]

Tags: சமூகம் · பொது · பொருட்பால்

அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்

August 7th, 2020 · 2 Comments

எண்பத்தேழில் அழகப்பர் நுட்பியல் கல்லூரியில் வேதிப்பொறியியல் படிக்க முதல் பட்டியலிலேயே இடம் கிடைத்தது எனக்கு. அறுபது இடங்கள் தான் என்றாலும் குவிந்துவிடும் விண்ணப்பங்களின் காரணமாய் இங்கு இடம் கிடைப்பதில் பெரும்போட்டி இருக்கும். பன்னிரண்டாவது பொதுத்தேர்வும் நுழைவுத்தேர்வுமான மதிப்பெண் புள்ளிகளில் 250க்கு 240க்கும் மேல் பெற்றிருந்தும், திறந்த ஒதுக்கீட்டில் கிடைக்காமல் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தான் இடம் கிடைத்தது. ஆனாலும், திறந்த ஒதுக்கீட்டில் கிடைக்கப்பெற்றவர்கள் மருத்துவப்படிப்போ, பிற நல்ல கல்லூரிகளோ என்று சென்றுவிட்டதில், அன்று அறுபதுக்கு அஞ்சு பேர் மட்டும்தான் […]

[Read more →]

Tags: சமூகம் · பொது

நூற்றாண்டுத் தலைவன்

August 7th, 2019 · Comments Off on நூற்றாண்டுத் தலைவன்

அவர் இன்றிருந்தால் கலைஞர் தொலைக்காட்சியை அழைத்து, "ஏய்யா தப்புத் தப்பா எழுதறீங்க? என்னை ‘நூறாண்டு தலைவன்’னு எழுதக்கூடாது. ‘நூற்றாண்டுத் தலைவன்’னு எழுதணும்", என்று ஒருவேளை திருத்தம்சொல்லிக் கடிந்துகொண்டிருக்கக்கூடும். சிறுசிறு விவரங்களின்வழி பலரின் வாழ்வை அவர் தொட்டிருந்ததைப் புகழஞ்சலிக் கூட்டங்கள்வாயிலாக அறியமுடிந்தது. எப்படியும் நூறு ஆண்டுகளை அவர் பார்க்கவேண்டும் என்னும் சிறு ஆசை என்னுள் இருந்தது. அரசியல்சார்ந்த செயல்பாடுகள் ஒருபுறம் இருப்பினும் அதைத்தாண்டிப் பன்முக ஆளுமையை அவர் கொண்டிருந்ததும், குறிப்பாகத் தமிழ்சார்ந்த செயல்பாடுகளில் ஒளிர்ந்ததும் காரணம். ஆறாண்டுகள் மிச்சமிருக்கும் […]

[Read more →]

Tags: சமூகம் · பொது

அலுக்கம்

May 5th, 2019 · Comments Off on அலுக்கம்

“அலுக்கம்னு ஓரிடத்துல பயன்படுத்தியிருக்கீங்க. அதற்குச் சரியான பொருள் என்னங்க?”, என்று கேட்டு எழுதியிருந்தார் நண்பர் சுந்தர். அதன் இடத்தைப் பொருத்து ‘வாய்ப்பு’ என்று பொருள் கொள்ளலாமா என்று தோன்றியது என்றிருந்தார். ‘இனிக்காதது’ என்னுமொரு கட்டுரையில் 2006இல் எழுதியிருக்கிறேன். https://blog.selvaraj.us/archives/218  (வழி வழியாய் என் மூதாதையருக்குக் கிடைத்த தலைமுறைச் சீதனம் – அது எனக்கும் கிடைத்திருக்கக் கூடிய அலுக்கம் ஓரிரு முறை இருந்த போதும் இன்னும் கிட்டவில்லை). கொங்கு வட்டாரத்தில் அலுக்கம் என்பது அன்றாடம் புழக்கத்தில் இருக்கும் சொல். […]

[Read more →]

Tags: இணையம் · தமிழ் · பொது

சித்திரைப்பெண்ணே வருக!

April 14th, 2019 · Comments Off on சித்திரைப்பெண்ணே வருக!

நான் கவிஞனல்லன். ஆனால் அதுபோல ஏதேனும் அவ்வப்போது முற்காலத்தில் எழுதியதுண்டு. சிலநாள் முன்பு எனது ஆசிரியை சரசுவதி ஐயை ஒரு செய்தி அனுப்பியிருந்தார்கள். ‘சித்திரைப் பெண்ணே வருக’வென்று ஒரு கவிதை எழுதியனுப்பு என்று பணித்திருந்தார். ‘எழுதி நாளாச்சுங்க’ என்று மன்னிப்புக் கேட்டுவிடலாமா என்று முதலில் தோன்றினாலும், எனக்குள்ளும் ஓரார்வம் பற்றிக் கொள்ள, 2019இன் சித்திரையாளை வரவேற்க இதோ ஒரு ‘கவிதை’ 🙂 * * * * சித்திரைப்பெண்ணே வருக! கந்தனோ கதிர்வேலனோ கடவுளை யாரறிவார் காலந்தான் […]

[Read more →]

Tags: பொது