ஒருவாரம் பத்துநாளாய்ச் சளி இருமல் தொல்லை நம்மைப் பிடித்துக்கொண்டது. ”கோழிக் கொழம்பு வச்சுக் குடிப்பா”, என்றார் அம்மா. “விடுங்கம்மா, நான் பாத்துக்கறேன்”, என்று அவர் கவலையைத் தவிர்த்துவிட்டு அந்த யோசனையைப் பிடித்துக் கொண்டேன். உண்மையிற் சொல்லப் போனால், சென்ற வாரமே இவ்யோசனை நமக்குத் தோன்றியிருக்கத் தான் செய்தது. செயற்படுத்தத்தான் நேரம் வாய்க்கவில்லை. அம்மாவின் கோழிக் குழம்பு அருஞ்சுவையாய் இருக்கும். மல்லித்தூள், மசாலா வகையறா சற்று, மிகச்சற்று, தூக்கலாய் இருக்கும். அக்குழம்பைச் சுடுசோற்றில் ஊற்றிப் பிசைந்து உண்டு எழுந்தால், […]
Category Archive for 'பொது'
பேச்சுத்தமிழில் ‘சுத்தியும் முத்தியும் பாத்தேன்’ என்று சொல்வதை எழுத்தில் எப்படிக் காட்டுவது என்னும் சிக்கல் எழுந்தது எனக்கு. வேறொன்றுமில்லை. புத்தாண்டை முறித்துக் கொண்டு தயங்கியே வந்த முதற்சனிக்கிழமை. என்ன செய்யலாம் என்று ‘சுற்றும் முற்றும்’ (சரிதானா?) பார்த்தேன். பல மாதங்களுக்கு முன்னர் வாங்கி வந்த இராகிமாவு கொஞ்சம் கண்ணில் பட்டது. ஆரோக்கியவாழ்வுக்கு அரிசியைக் குறைக்கச் சொல்கிறார்களே என்று இன்று இராகிக்களி செய்துவிடுவோம் என்று இறங்கிவிட்டேன். இணையத்தில் ஒரு கண்ணம்மாவிடம் -kannammacooks- ஆலோசனை கேட்டுவிட்டுச் செய்து பார்த்தேன். ஆனால் […]
அனைவருக்கும் சனவரிப் புத்தாண்டு வாழ்த்துகள். சனவரி ஒன்றின் இப்புத்தாண்டை ஆங்கிலப் புத்தாண்டு என்று நானும் முன்பு சொன்னதுண்டு. ஆனால் முகப்புத்தகத்தில் முகநூலில் பேரா. செல்வா இது ஆங்கில உலகம் மட்டும் கொண்டாடும் புத்தாண்டு அன்று என்றும் உலகின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுவது என்பதால் வேண்டுமானால் கிரிகோரியன் புத்தாண்டு என்று சொல்லலாம் என்றும் கருத்துச் சொல்லியிருக்கவே பொதுவாய்ச் சனவரிப் புத்தாண்டு என்று குறித்து வைப்போமே என்று தான் அப்படிக் குறிப்பிட்டுவிட்டேன். ஃபேஸ்புக் (பேசுபுக்கு) தளத்தை ஒரு வணிகப் […]
"பழச விட்டுடு; புதுசா புடிச்சுக்கோ" என்று போகித்தருமர் என்று ஒருவர் சொல்லி இருக்கிறார்; அவர் நினைவாகத் தான் போகிப் பண்டிகை கொண்டாடுகிறோம் என்று போகிற போக்கில் கதை விடலாமா என நினைத்தேன். ஆனால், அதுதான் அன்றே தமிழன் "பழையன கழிதலும் புதியன புகுதலும் வலுவல கால வகையினானே" என்று நன்னூலில் எழுதி வைத்திருக்கிறானே! மிகவும் பரவலாய் அறியப்பட்ட நன்னூல் வாசகம் இதுவாகத் தான் இருக்கும். இணையத் தேடலில் இதற்குப் பற்பல ஆயிரம் தேடல் முடிவுகள்! அதனால் எனது […]
தமிழ்மணம் நட்சத்திர வாரப் பொங்கல்
Posted in பொது on Jan 16th, 2012
தமிழ் இணைய நண்பர்களுக்கு வணக்கம். இது ஏதடா, எங்கேயோ கேட்ட குரல் போல் இருக்கிறதே என்று உங்களுக்குத் தோன்றலாம். இவனிங்கு நட்சத்திரமாகவா என்று தோன்றினாலும் அதுவும் மிகவும் நியாயமான ஒன்றே. வாருங்கள்… வருடத்திற்கு ஒன்று இரண்டு என்னும் கணக்கில் இடுகை(கள்) எழுதிக் கொண்டிருந்தவனைத் தமிழ்மணத்தின் நட்சத்திரமாக்கி இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்று எனக்கும் கேட்க வேண்டும். இருப்பினும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நன்னம்பிக்கையின் வழி வந்த தமிழர் நாமெல்லோரும். அதனால் ஏதோ ஒரு […]