பேச்சுத்தமிழில் ‘சுத்தியும் முத்தியும் பாத்தேன்’ என்று சொல்வதை எழுத்தில் எப்படிக் காட்டுவது என்னும் சிக்கல் எழுந்தது எனக்கு. வேறொன்றுமில்லை. புத்தாண்டை முறித்துக் கொண்டு தயங்கியே வந்த முதற்சனிக்கிழமை. என்ன செய்யலாம் என்று ‘சுற்றும் முற்றும்’ (சரிதானா?) பார்த்தேன். பல மாதங்களுக்கு முன்னர் வாங்கி வந்த இராகிமாவு கொஞ்சம் கண்ணில் பட்டது. ஆரோக்கியவாழ்வுக்கு அரிசியைக் குறைக்கச் சொல்கிறார்களே என்று இன்று இராகிக்களி செய்துவிடுவோம் என்று இறங்கிவிட்டேன். இணையத்தில் ஒரு கண்ணம்மாவிடம் -kannammacooks- ஆலோசனை கேட்டுவிட்டுச் செய்து பார்த்தேன். ஆனால் […]
Category Archive for 'கண்மணிகள்'
அனிடோரி-கிளாட்ரா டாலியாண்ணா இசிலீ என்கின்ற அழகு இளவரசியைப் பற்றி எப்போதாவது நீங்கள் அறிந்திருந்தால் உங்களுக்கு நிச்சயமாய் முன்பதின்ம வயதில் பெண்கள் இருந்திருக்க வேண்டும். அதோடு, அவர்கள் படிக்கின்ற ஆங்கிலப் புனைவுகளை நீங்களும் படிக்க எத்தனித்திருக்கலாம் என்பதும் புலனாகும். பிறக்கும் போதே தம் நாவில் தமக்கான பெயர்களைத் தாங்கி வருகிற குதிரைகளும், அக்குதிரைகளோடு பேசத் தெரிந்த இளவரசியுமாக அப்புனைவுலகம் அழகான ஒன்று. அப்படியானதொரு புனைவுலகில் நுழைந்து பார்க்க எனக்கொரு வாய்ப்பினை என் மகள்கள் கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்திக் […]
அனைவருக்கு இனிய பொங்கல்/புத்தாண்டு வாழ்த்துகள். வெண் பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும் வடை பாயசமுமாகக் கொண்டாடியதில் நேற்றே வாழ்த்தினைச் சொல்ல ஒணாமல் (!) போய்விட்டது. வாழ்க என் மனைவியார். (வயிற்றுக்கு நல் உணவுண்டு என்றால் மரியாதை மட்டற்று வருகிறது!). எல்லா ஆண்டுகளும் இப்படியாக இருப்பதில்லை. இரண்டாண்டுகளுக்கு முந்தைய இதே பொங்கல் நாளில் பொங்கலை நான் வைக்கிறேன் என்று இறங்கி நானும் என் பெரிய மகளும் சர்க்கரைப் பொங்கலுக்கான செய்முறைக் குறிப்பைத் தேடி இணையத்தில் அலைந்தோம். பெரியவளுக்குத் தான் சர்க்கரைச் […]
2012இன் தை முதல் வாரத்தின் தமிழ்மணம் நட்சத்திரமாக இருக்க வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கும், அன்புடன் வரவேற்று, படித்து, பின்னூட்டமிட்டும், உரையாடலில் கலந்து கொண்டும், உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி. இவ்வாரம் எழுத எண்ணிய இன்னும் பல இருக்கின்றன. அவற்றை வரும் நாட்களில் தொடர்வேன் என்னும் நம்பிக்கை உண்டு. அன்றாட வாழ்வின் இழுபறிகளுக்குள் ஆர்வப் பணிகளுக்கும் ஆர்வலப் பணிகளுக்கும் நேரச்சிக்கல்கள் எல்லோருக்கும் இருப்பது தான். ஒன்றைக் கவனிக்க மற்றொன்று கவனமற்றுப் போகும் என்றாலும் இயன்றவரை இவற்றில் ஈடுபட்டிருக்க முயலப் போகிறேன். வலைப்பதிவு […]
புவியீர்ப்பு விசையின்றி மிதக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று தன் விருப்பமொன்றை முன்பொரு நாள் வெளிப்படுத்தினாள் நிவேதிதா. "It will be so cool! " பள்ளியில் ஏதேனும் விண்வெளி வீரர் விண்கலத்தினுள் மிதக்கும் அசைபடங்கள் காட்டப் பட்டிருக்கலாம். இல்லை அவளாகவே எங்காவது படித்திருக்கலாம். அப்போலா-13 படத்தை வலுக்கட்டாயமாகப் பார்க்க வைத்த அன்று கூடக் குப்புறப் படுத்துத் தூங்கினார்களே இருவரும்? ஒருவேளை வான்வெளியில், விண்கலத்தினுள் ஆள்களும் பொருள்களும் மிதக்கும் அக்காட்சி வரும்போது விழித்துத் தான் இருந்தார்களோ? "அந்த […]