Posted in இலக்கியம், திரைப்படம் on Mar 26th, 2021
வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்திற்கு இந்த வாரம் நடுவண் அரசின் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. படம் வந்தபோது பார்த்து, அதனால் உந்தப்பட்டு அதன் மூலக்கதையான பூமணியின் வெக்கையைப் படித்து, அதுபற்றிய ஒரு பதிவையும் எழுதிவிட்டு, ஏனோ வெளியிடாமல் இருந்துவிட்டேன். 2020ஆம் ஆண்டின் போக்கு இப்படியாகத் தான் இருந்தது. ஆனால், விருது அறிவிக்கப்பட்ட இந்தக் காலத்தின் பொறுத்தப்பாட்டை எண்ணி அதனை இப்போது வெளியிட்டு விடலாம் என்று துணிந்துவிட்டேன். * * * * ‘கையைத்தான் வெட்ட நினைத்தான். ஆனால் […]
Read Full Post »
Posted in திரைப்படம், வாழ்க்கை on Jun 22nd, 2008
‘டிரேடர் ஜோ’வில் இருந்து ரெண்டேகால் டாலருக்கு வாங்கிய ‘பஞ்சாபிச் சோலே’வும், வேறு கடையொன்றின் ‘நேச்சுர் வேளி’ ‘டொர்ட்டியா’வில் ரெண்டும் நுண்ணலை அடுப்பில் சூடுபடுத்திக் கொண்டு தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னமர்ந்து ‘நெட்பிலிக்சில்’ இருந்து வந்திருந்த ‘அன்பே சிவம்’ படத்தைப் போட்டுக் கொண்டு ஆற அமர்ந்திருந்தேன். மனைவி மக்கள் தூர தேசத்தில். தொடர்ந்த ஓட்டத்தின் இடையே இன்று சிறு ஓய்வு. பாரடைம் (Paradigm) என்னும் சொல்லைச் சில ஆண்டுகள் முன்னர் சிடீவன் கோவியின் பேச்சு ஒன்றின் மூலம் அறிந்து கொண்டேன். […]
Read Full Post »
Posted in திரைப்படம் on Apr 24th, 2008
டுபுக்கார் கதவு பார்த்த பிறகு, இதனைக் குறும்படம் என்று சொல்லத் தயக்கமாகத் தான் இருக்கிறது. நான் குறும்படம் எடுக்கலாம் என்று கதை சொன்னால், என் வீட்டுக் கண்மணிகள் கதை cheesy ஆக இருக்கிறது என்று கிண்டல் தான் அடிக்கிறார்கள். ஆக, என்னால் முடிந்தது இந்த வெட்டி ஒட்டல் படம் தான். வேண்டுமானால், குறும் ஆவணப் படம் என்று சொல்லிக் கொள்ளலாமா என்று யோசிக்கிறேன். எடுத்துக்கொண்ட பணி இது தான். மூன்று நிமிடங்களில் இந்திய நடனங்களைப் பற்றிச் சொல்லவேண்டும், […]
Read Full Post »
Posted in கணிநுட்பம், திரைப்படம் on Jun 16th, 2007
ஆறு நிமிட நேரம். ஆறு முதல் பன்னிரண்டு வயதுள்ளான ஆரம்பப்பள்ளி மாணவப் பார்வையாளர்கள். International Fair என்னும் பன்னாட்டுத் திருவிழாவில் இந்திய தேசம் பற்றி ஒரு அறிமுகப் படம் காட்டவேண்டும் என்றபோது, வெறும் சடத்துவப் படங்காட்டல் அல்லாது சிறிதாய் ஒரு குறும்படமாய்த் தயார் செய்ய முடியுமா என்று ஒரு முயற்சியில் இறங்கினோம். ஹோலி மற்றும் தீபாவளிப் பண்டிகைகளுக்கும் முக்கியத்துவம் தருவதாய் இருக்கவேண்டும் என்னும் இந்தியக் குழுவினரின் விருப்பத்தையும் கருத்தில் கொண்டு, அதோடு முடிந்தவரை பல அம்சங்களையும் காட்டவும் […]
Read Full Post »
Posted in திரைப்படம் on May 30th, 2006
அடிப்படையில் நான் ஒரு ரஜினி ரசிகன் என்பதை வெளி வந்து 400 நாட்களுக்கு மேலான நிலையில் அண்மையில் வீட்டில் மகள்களுடன் பார்த்த சந்திரமுகி படத்தின் போது மீண்டும் உணர்ந்து கொண்டேன். படம் வந்த முதல் நாளோ முதல் வாரமோ கிழித்துப் போட்ட காகிதப் பூச்சொரியலின் பின்னணியில் பார்த்துக்கொண்டு சீக்கியடிக்கிற தீவிர ரசிகன் இல்லையென்றாலும், வாய்ப்புக் கிடைக்கிற போது தவறவிடாமல் பார்த்ததுண்டு. பாபா வந்தபோது கூடப் பல நாட்கள் கழித்துத் தான் பார்த்தேன் என்றாலும் அது அவ்வளவாகப் பிடிக்காமல் […]
Read Full Post »