இந்தியா – ஒரு குறும்படம்
Jun 16th, 2007 by இரா. செல்வராசு
ஆறு நிமிட நேரம். ஆறு முதல் பன்னிரண்டு வயதுள்ளான ஆரம்பப்பள்ளி மாணவப் பார்வையாளர்கள். International Fair என்னும் பன்னாட்டுத் திருவிழாவில் இந்திய தேசம் பற்றி ஒரு அறிமுகப் படம் காட்டவேண்டும் என்றபோது, வெறும் சடத்துவப் படங்காட்டல் அல்லாது சிறிதாய் ஒரு குறும்படமாய்த் தயார் செய்ய முடியுமா என்று ஒரு முயற்சியில் இறங்கினோம். ஹோலி மற்றும் தீபாவளிப் பண்டிகைகளுக்கும் முக்கியத்துவம் தருவதாய் இருக்கவேண்டும் என்னும் இந்தியக் குழுவினரின் விருப்பத்தையும் கருத்தில் கொண்டு, அதோடு முடிந்தவரை பல அம்சங்களையும் காட்டவும் விழைவு.
பெரும்பாலும் இணையத்தில் இருந்து சேகரித்த துண்டுகளை வெட்டி ஒட்டித் தயார் செய்த படம். Fair Use என்னும் முறையில் பயன்படுத்தி இருப்பதால் காப்புரிமைப் பிரச்சினை ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன்.
விழா முடிந்த பிறகு மாலை பள்ளியில் இருந்து வீடு வந்த மகளின் (மகள்களின்) முகத்து முறுவலையும் பெருமிதத்தையும் பார்த்தது இதற்காகச் செலவிட்ட பல மணி நேரங்களைப் பயனுள்ளதாக ஆக்கிவிட்டது.
குறும்பட ஆர்வம் தொற்றிக் கொண்டதும் ஒரு சுவாரசியமான பக்க வினை.
awesome work!
Great effort! Kudos to all in the family:-)
நல்ல முயற்சி. விரிவான படம் ஒன்றையும் எதிர்பார்க்கின்றோம்.
அன்புடன்
இராசகோபால்.
செல்வராஜ்,
அருமையாக வந்திருக்கிறது! 🙂
படத்தொகுப்புக்கும் ஒலிச்சேர்க்கைக்கும் எந்த மென்பொருள் பயன்படுத்தியுள்ளீர்கள்?!
செல்வா, அருமையாகத் தொகு(டு)த்திருக்கிறீர்கள்.
//குறும்பட ஆர்வம் தொற்றிக் கொண்டதும் ஒரு சுவாரசியமான பக்க வினை. //
மேலும் எதிர்பார்க்கிறேன்.
நன்றி – சொ. சங்கரபாண்டி
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது இதுதானோ? மிக அருமை.
இளவஞ்சி கேட்ட கேள்வி எனக்குள்ளும் வந்தது. Studio 8 என்று ஒன்று கேள்விப்பட்டதுண்டு; அதுதானோ?
ஒரே ஒரு சிறு குறை/தவறு கணணில் பட்டது; தனித்து சொல்ல முகவரி தேடினேன்;கிடைக்கவில்லை.
Wow!!! கலக்கல்.
(தனுஷ்… தீபாவளி ஸ்பெசலா ;))
நண்பர்களுக்கு நன்றி.
இளவஞ்சி, ஒலிப்பதிவை Audacity என்னும் திறமூல நிரல் கொண்டு செய்தோம். படத்தொகுப்பும், ஒலிச்சேர்ப்பும் Windows Movie Maker மூலம் தான் செய்தோம். அடோபியில் இன்னும் நல்ல நிரல் ஒன்று இருக்கிறது என்று நண்பர் சொன்னார்.
தருமி, ஸ்டுடியோ8 பற்றி எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு மடல் அனுப்புகிறேன். நிறையத் தவறுகள் இருக்க வாய்ப்புண்டு என்று உணர்கிறேன். என்னவென்று மடல் அனுப்புங்கள். திருத்திக் கொள்ள உதவும்.
பாலா, பரவாயில்லை, நீங்கள் தனுஷைக் கவனித்துவிட்டீர்கள்:-)
Well done!! especially the Writer/Director.
உங்களை எட்டு தொடர்வினையாட்டத்திற்கு அழைத்திருக்கிறேன். உங்களுக்கு வசதியான நேரத்தில் பங்கெடுப்பீர்கள் என நம்புகிறேன்.
[…] மாணவர்களுக்கு. சென்ற வருடம் இந்தியாவைப் பற்றிய பொதுவான தகவல்கள் … ஆறு நிமிடத்தில் எடுத்திருந்தோம். […]