இந்திய நடனங்கள் பற்றிய குறும்படம் – மூன்று நிமிடங்களில்
Apr 24th, 2008 by இரா. செல்வராசு
டுபுக்கார் கதவு பார்த்த பிறகு, இதனைக் குறும்படம் என்று சொல்லத் தயக்கமாகத் தான் இருக்கிறது. நான் குறும்படம் எடுக்கலாம் என்று கதை சொன்னால், என் வீட்டுக் கண்மணிகள் கதை cheesy ஆக இருக்கிறது என்று கிண்டல் தான் அடிக்கிறார்கள். ஆக, என்னால் முடிந்தது இந்த வெட்டி ஒட்டல் படம் தான். வேண்டுமானால், குறும் ஆவணப் படம் என்று சொல்லிக் கொள்ளலாமா என்று யோசிக்கிறேன்.
எடுத்துக்கொண்ட பணி இது தான். மூன்று நிமிடங்களில் இந்திய நடனங்களைப் பற்றிச் சொல்லவேண்டும், அதுவும் அமெரிக்க ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு. சென்ற வருடம் இந்தியாவைப் பற்றிய பொதுவான தகவல்கள் கொண்ட ஒரு படம் ஆறு நிமிடத்தில் எடுத்திருந்தோம். அந்த அனுபவத்தில் களத்தில் இறங்கினாலும், சென்ற வருடம் போல் இந்தத் தயாரிப்பில் ஈடுபட அவ்வளவு நேரம் ஒதுக்கமுடியவில்லை.
ஆலோசனைக் குழுவில் இருந்த சிலருக்கு வெறும் நடனங்கள் என்றில்லாமல் இன்னும் கொஞ்சம் தகவல்கள் சேர்த்துச் சென்ற ஆண்டைப் போல இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்ற, சரி அங்கிருந்தே வெட்டி ஒட்டிவிடுவோம் என்று போன வருடத்துப் படத்தில் தீபாவளி, தசரா, ஹோலிப் பண்டிகைகளை வெட்டிவிட்டு இந்த நடனங்களை இணைத்து இறுதியாய் ஆறு நிமிடங்களில் இன்னொரு படம் செய்தோம்.
தமிழக கிராமிய நடனங்களை இன்னும் கொஞ்சம் புகுத்தலாம் என்று நான் நினைக்க, “அதுக்கு வேறயா இன்னொரு படம் பண்ணிக்குங்க” என்று பதில் வந்தது. எனக்குப் பிடித்திருந்த ஒயிலாட்டம் பற்றிய ஒரு படத்தில் இருந்து கொஞ்சமே கொஞ்சமாய் ஒட்டலாம் என்று நினைக்க, “ஒத்துக்க முடியாது” என்று ஒதுக்கிவிட்டார்கள், அந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் ஆண்குலத்தின் சாதனையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் ஆங்கொருவரைப் போல 🙂 . அதனால் என்ன, மொத்தமாய் இங்கே இணைத்துக் கொள்கிறேன். வாழ்க பனைநில மறவர்கள்!
எங்கள் படங்கள் தயாரிக்கப் பாவித்த மென்பொருட்கள்: Windows Movie Maker, Audacity
:))
குழு கலக்கியிருக்கிறது. வாழ்த்துக்கள்! குழந்தைகளின் பின்னணிக் குரல் நடனங்களுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.
சென்ற ஆண்டு ஃபெட்னாவில் இதே பாட்டுக்கு ஆடினார்கள். அதனையும், வேறு சில நல்ல ஆட்டங்களையும் இதிலே பார்க்கலாம்:
http://video.google.com/videoplay?docid=-2757746257774699207&q=fetna&ei=wJsRSND4KozYrQKa5uyrAg