Feed on
Posts
Comments

Category Archive for 'யூனிகோடு'

தமிழில் எத்தனை எழுத்துக்கள் என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? நீங்கள் எந்த ஊர்க்காரராக இருந்தாலும், எந்தப் பள்ளியில் தமிழ் பயின்றிருந்தாலும், இந்தக் கேள்விக்குப் பதிலாக 247 எழுத்துக்கள் (மற்றும் சில வடமொழி எழுத்துக்கள் ~ கிரந்தம்) என்று தான் படித்திருப்பீர்கள். உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு, உயிர்மெய் இருநூற்றுப் பதினாறு, ஆய்தம் ஒன்று சேர்த்து ஆக மொத்தம் இருநூற்று நாற்பத்தியேழு. இருநூற்று நாற்பத்தியேழு எழுத்துக்கள். இந்தக் கொத்தில் (set) சொல்லப்பட்ட ஒவ்வொன்றும் முழுதாய் ‘எழுத்து’ என்றே […]

Read Full Post »

“It’s a consonant, vowel, vowel, consonant… நந்து”, என்று தங்கைக்கு துப்புக் கொடுக்க முயன்றாள் நிவேதிதா. நெடுந்தொலைவு பயணம் சென்றால் பெண்களின் அயர்வு தெரியாதவண்ணம் இருக்க ஏதேனும் கேட்டு அவர்களின் மனதைச் சுவாரசியமாக வைத்திருக்க முயல்வதுண்டு. சில சமயம் கணக்கு. சில சமயம் ஆங்கிலம். சில சமயம் கதை, இப்படி. அப்படியொரு பயணமொன்றில் ஒரு வருடத்திற்கும் முன்பு நடந்த கதை தான் இது. ஆங்கிலச் சொற்களுக்கு எழுத்துவரிசை சொல்லச் சொல்லி அன்று சின்னவளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். […]

Read Full Post »

செருப்பிற்காகக் காலை வெட்டு என்று இராம.கி அவர்கள் சும்மா சொல்லவில்லை என்பதைச் சற்றுப் பொறுமையாக ஆய்ந்து பார்ப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். திரு.விஜய் செருப்பைத் தவறாக மாட்டிக்கொண்டு, செருப்பைக் குறை சொல்ல வேண்டாம் என்று கருத்துத் தெரிவிப்பதற்கு முன் வாய்ஸ் ஆன் விங்ஸின் கீதா கயீதா ஆன கதை போன்றவற்றைப் பார்த்திருக்கலாம். இராம.கி அவர்கள் இட்ட தேட்டைச் சிக்கல் பதிவிற்கும் அங்கிருந்து சுட்டி இருக்கிறது. யூனிகோடு சம்பந்தப்பட்ட வேலைகளில் ஈடுபட்டிருப்பவர் என்னும் முறையில் விஜய் போன்றவர்கள் இராம.கி அவர்கள் கூறும் […]

Read Full Post »

தமிழ்-உலகம் யாஹூ மின்குழுமத்தில் யூனிகோடு பற்றிய கலந்துரையாடல் நடக்கிறது என்று அறிந்து நானும் சென்று அங்கு உறுப்பினனாய் ஆனேன். யூனிகோட்டிற்கு மாற இன்னும் தயக்கம் நிறையப் பேருக்கு இருக்கிறது. ஆனால் சிலர் சொல்லும் காரணங்கள் சரியானதாக இல்லை. உதாரணத்திற்கு அகர வரிசைப் படுத்த இது சரியில்லை என்று ஒரு கருத்து. ஆனால், யூனிகோடு என்பது சகலத்திற்கும் தீர்வான ஒரு சர்வ நிவாரணி அல்ல. இது அடிப்படையாய் எழுத்துக்களுக்கு(உண்மையில் எழுத்து வடிவங்களுக்கு) ஒரு எண்ணைச் சமன்படுத்தும் ஒரு அட்டவணை தான். […]

Read Full Post »

பல திசைகளாய் இருந்து மூன்று கோடுகளாகி இன்று தமிழ்க் கணினியுலகம் யூனிகோடு என்னும் ஒரே முறையை நோக்கி வெகு விரைவாய் நகர்ந்து கொண்டிருக்கிறது. பல ஆர்வலர்கள் அந்தத் திசையை நோக்கிச் செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள். உஷாவும் அருணாவும் எளிமையாய் கணினித் தமிழ் பாவிக்கும் நாள் எந்த நாளோ என்று ஆதங்கப் பட்டிருந்தார்கள். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. சிறு சிறு குறைகள் இருந்தாலும், மற்ற பல வசதிகள் மற்றும் ஆதாயங்கள் காரணமாக எல்லோரும் இனி யூனிகோடையே […]

Read Full Post »

Next »