இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 4

Entries Tagged as 'கடிதங்கள்'

நல்லவனா கெட்டவனா?

September 23rd, 2008 · 10 Comments

அன்புள்ள அம்பரா, திருப்போரூர்க் கந்தசாமிக் கோயிலின் உட்சுற்றுச் சுவரில் தள வரலாறு படித்து நின்றிருந்த போது, ‘நீ நல்லவனா? கெட்டவனா?’ என்றாற்போல என்னிடம் நீ திடுதிப்பென்று கேட்டாய் – ‘நீ ஆத்திகனா, நாத்திகனா?’ என்று. கேள்வி எளிதானதாக இருக்கலாம். ஆனால், என்னிடம் அதற்கான பதில் இல்லை, அம்பரா. அல்லது எளிதான பதில் இல்லை. எல்லாக் கேள்விகளுக்குமே பதில்கள் இருக்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பை நான் எதிர்க்கிறேன். ஒன்றற்கொன்று தொடர்புடையனவாய், பலக்கியதாய் இருக்கும் வினை, எதிர்வினைச் செயலாக்கங்களுக்கெல்லாம் ஆதார […]

[Read more →]

Tags: கடிதங்கள்

பழைய கடிதம் ஒன்று

January 30th, 2006 · 11 Comments

கடிதங்களுக்கென்று ஒரு தனிக் கவர்ச்சி உண்டு. அதிலும் சின்ன வயதில் இருந்து பள்ளி நண்பன் எழுதிய கடிதத்தில் இருந்து பெரும்பாலானவற்றை இன்னும் சுமந்து திரியும் என்னைப் போன்றவருக்கு அதுவும் ஒரு அசையாச் சொத்துப் போல. இந்தியாவில் இருந்து திரும்பி வந்த இந்த முறை பழைய இரும்புப் பெட்டிக்குள் பொக்கிசமாய்ச் சேர்த்து வைத்திருந்த கட்டுக்களை எடுத்து வந்துவிட்டேன். வேண்டும் போது மீள்சென்று பார்வையிடலாம் என்கிற எண்ணமே ஒரு சுகந்தான். இத்தனையும் வைத்து என்ன செய்வது என்று எண்ணிச் சிலவற்றை […]

[Read more →]

Tags: கடிதங்கள்

ஜப்பான் கொரியா பழங்கதை

January 25th, 2006 · 4 Comments

மடத்துவாசல் பிள்ளையார் கானாபிரபா மூன்று வருடங்களுக்கு முன்சென்று வந்த ஜப்பான் பயணம் பற்றி அருமையான ஒரு பதிவு எழுதி இருக்கிறார். நல்ல படங்களுடன் உணவு, கலாச்சாரம், எழுத்து, பழக்க வழக்கங்கள் என்று சகலமும் தொட்டு எழுதியிருப்பது சுவாரசியமாக இருக்கிறது. அது சுமார் பதின்மூன்று வருடங்களுக்கு முன் ஜப்பான்/கொரியாவிற்கு நான் சென்று வந்த ஒரு பயணத்தை நினைவுபடுத்தி விட்டது. நினைவுகளின் மூலையைச் சுரண்டி ஒரு பதிவு எழுதலாம். அதைவிட, திரும்பி வந்தபின் நண்பர்களுக்கு எழுதிய கடிதத்தில் அந்தப் பயணம் […]

[Read more →]

Tags: கடிதங்கள் · பயணங்கள்

“இனிய தோழி சுனந்தாவிற்கு…!” – வலைப் பதிவுரை

February 29th, 2004 · 6 Comments

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் (1993 ஆகஸ்ட்) நான் எழுதிய இந்தக் கடிதத் தொடர் முதலில் Soc.Culture.Tamil என்னும் தமிழுக்கான யூஸ்நெட் செய்திக் குழுமம் ஒன்றில் வெளிவந்தது. என்னுடைய எழுத்து முயற்சியின் வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய மைல்கல். அப்போதெல்லாம் தமிழ் எழுத்துருக்கள் பரவலாய்க் கிடைக்கவில்லை. கணிணிகளில் தமிழின் ஆரம்ப நடை. தமிழில் இந்தக் குழுமத்தில் எழுத romanized முறையும் பின்னர் மிகச் சிறு மாற்றங்களுடன் கூடிய மதுரை எழுத்து முறையும் தான் இருந்தது. இரண்டு வருடங்கள் […]

[Read more →]

Tags: கடிதங்கள்

இனிய தோழி சுனந்தாவிற்கு…! – 1/06 –

July 1st, 1993 · Comments Off on இனிய தோழி சுனந்தாவிற்கு…! – 1/06 –

இனிய தோழி சுனந்தா, “இந்த ஊரில் உள்ள கோயில் அர்ச்சகர் ஒரு கதை சொன்னார் சுனந்தா – அதைப் பற்றி…” இந்த ஊரில் உள்ள இந்திய மக்களெல்லாம் சேர்ந்து சின்னதாய் ஒரு கோயில் கட்டி உள்ளனர் சுனந்தா. கூட்டு முயற்சிக்குச் சிறந்த எடுத்துக் காட்டு அது. இவ்வளவு தொலைவு வந்த போதும், நம்முடைய கலாச்சாரத்தோடு இன்னும் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்னும் இவர்களின் ஆவல் அதில் நன்கு வெளிப்படுகிறது.

[Read more →]

Tags: கடிதங்கள்