இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 4

Entries Tagged as 'சிறுகதை'

நுரை மட்டும் போதும்: கதையின் கதை

January 19th, 2012 · 13 Comments

எங்கிருந்து எப்படிப் போய் ஒரு இசுப்பானியக் கதையைப் பிடித்து, அதன் ஆங்கில வடிவத்தில் இருந்து தமிழாக்கம் செய்திருக்கிறேன் என்பது பற்றிய கதையின் கதையாகக் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது எனக்கு. Espuma y nada más கதையின் மூல வடிவத்தை எழுதிய எர்ணான்டோ டேய்யசு (Hernando Tellez) தென்னமெரிக்காவில் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர். இலக்கியத்திற்கு நோபல் பரிசு வாங்கிய காப்ரியல் கார்சியா மார்க்குவேசும், இடைகள் பொய் சொல்லாப் பாப்பிசைப் புகழ் சக்கீராவும் கூட இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தாம் […]

[Read more →]

Tags: இலக்கியம் · சிறுகதை · தமிழ்

நுரை மட்டும் போதும் – எர்ணான்டோ டேய்யசு

January 18th, 2012 · 16 Comments

மூலம்: Espuma y nada más  -எர்ணான்டோ டேய்யசு (Hernando Tellez) ஆங்கிலத்தில்: Just Lather, That’s All  -டானல்டு யேட்சு (Donald A. Yates) தமிழில்: நுரை மட்டும் போதும் -இரா. செல்வராசு (R. Selvaraj)       உள்ளே நுழைந்தபோது அவன் ஒன்றும் சொல்லவில்லை. அப்போது நான் என்னுடைய சவரக்கத்திகளில் இருப்பதிலேயே நன்றான ஒன்றைத் தோல் வாரில் முன்னும் பின்னும் தேய்த்துத் தீட்டிக் கொண்டிருந்தேன். வந்தவன் யாரென்று உணர்ந்தவுடன் எனக்கு நடுங்க ஆரம்பித்துவிட்டது. […]

[Read more →]

Tags: இலக்கியம் · சிறுகதை

உறவுகள் தொடர்கதை

September 30th, 2009 · 13 Comments

இத்தனை நாள் இல்லாமல் இப்போ மட்டும் எதுக்கு இந்த உறவு என்று ‘வாழத்தோட்டத்து’ப் பெரியப்பாவைப் பார்க்கத் தான் வருவதாயில்லை என்று அடம் பிடித்தான் சிவக்குமார். பெரியப்பா என்று கூடச் சொல்ல அவனுக்குப் பிடிப்பதில்லை. ‘வாழத்தோட்டத்தார்’ என்று தான் குறிப்பிடுவான். வருடம் ஒருமுறையேனும் அவர்கள் குலதெய்வம் கோயிலுக்குச் சென்றுவிட்டு, அருகே இருந்த சொந்த ஊருக்குச் சென்று பங்காளி சொந்தமெல்லாம் பார்த்து வருவது இப்போது வழக்கமாகி இருந்தது. ஈரோட்டில் இருந்தவரை சிவக்குமாரும் தவறாமல் எல்லா வருடமும் ஊருக்கு வந்து போயிருக்கிறான். […]

[Read more →]

Tags: சிறுகதை

மீசை மொளச்சு முன்னுக்கு வந்தவன்

August 31st, 2009 · 8 Comments

“அதெல்லாம் நீ கேக்கக்கூடாது. பொம்பளைங்க சமாச்சாரம் பேசிக்கிட்டிருக்கிற எடத்துல ஆம்பிளப்பையனுக்கு என்னடா வேலை? போடா அந்தட்டம்”னு குமார அவங்க அம்மாவே தொரத்தி உட்டாங்க. குமாருக்குக் கோவம் கோவமா வந்துச்சு. ஊற வச்ச கொட்டமுத்த உறிச்சுக் குடுறான்னு அவங்களே கூப்பிட்டுட்டு இப்பத் தொரத்தராங்க. ‘அப்படி என்ன நான் கேட்டுட்டேன், இல்லாததையும் பொல்லாததையுமா? இவங்க பேசிக்கிட்டிருந்ததப் பத்தித் தானே கேட்டேன்’னு நெனச்சுக்கிட்டு மொறச்சுப் பாத்தான். கீழ துணி சுத்தியிருந்த மொளக்குச்சிய ஆட்டாங்கல்லுக் குழிக்குள்ள ஒரு வட்டக்கல்லு வச்சு அடிச்சு தெரமாக்கீட்டு, […]

[Read more →]

Tags: சிறுகதை

வாடாத மல்லி

July 25th, 2009 · 10 Comments

வாசிங்டனைச் சுற்றும் ஐ-495 என்னும் ‘பெல்ட்வே’யிற்குச் சற்று வெளியே, ‘ரவுட் 50’ஐ ஒட்டிய சிறு குன்றொன்றின் உச்சியிலே அமைந்திருந்தது ‘சன்ரைஸ் அசிஸ்டடு லிவிங்’ என்னும் அந்த முதியோர் இல்லம். புதிதாக வெட்டப்பட்ட புல்தரையைப் பார்த்துக்கொண்டு ஒரு சனிக்கிழமைக் காலையில் தேநீர் அருந்திக் கொண்டு இருந்த போது அவருக்குச் செம்மண்காட்டுவலசு ஆத்தாவைப் பற்றிய ஞாபகம் வந்தது. வெளிர் நீலச் சீருடை அணிந்த பணிப்பெண்களில் ஒருத்தி அன்றலர்ந்த வண்ணமலர்கள் சிலவற்றைக் கொய்து வந்து மேசைக் குடுவையினுள் வைத்துவிட்டுத் தினமும் போலவே […]

[Read more →]

Tags: சிறுகதை