“எங்கங்க? நாம தமிழ்ல பேசினாலும் அவன் இங்கிலீசுல தாங்க பதில் சொல்றான்” — என்று சொல்லி அவர்கள் இன்னொரு மொழி கற்க இருக்கும் சிறந்த வாய்ப்பை பாழாக்காதீர்கள். உங்கள் குழந்தைகளை தமிழ்(ழில்) பேச வைப்பது உங்கள் கடமை” என்று ஒரு நண்பர் மடலில் எழுதியிருந்தார். இந்தத் தடுமாற்றமும் குற்றுணர்ச்சியும் எனக்கும் உண்டு. மூன்று வயது வரை அழகாகத் தமிழ் பேசிய குழந்தை வெளியுலகம் செல்லத் தொடங்கியபோது அயல் சூழலுக்கு அவளுடைய மொழி பலியாவதைப் பார்த்துக் கொண்டு ஆவண […]
Category Archive for 'கண்மணிகள்'
“அம்மா, அப்பா, உங்க கிட்ட நான் ரொம்ப முக்கியமான ஒரு விசயம் சொல்லணும்”, உறங்கச் செல்லும் முன் மகள் வந்து தீவிர முகத்துடன் சொன்னாள். நிமிர்ந்து பார்த்தோம். ஒரு பெருமிதமும் பொறுப்புணர்ச்சியும் அவள் முகத்தில் பொங்கி வழியக் கண்டு ஆர்வம் பொங்க, “என்னடா?” என்றோம். “எனக்குத் தெரியும், நீங்க மேலறையில் இருந்து வந்து அஞ்சு நிமிசம் தான் ஆச்சுன்னு. இருந்தாலும், நீங்க உபயோகிக்காதப்போ கொஞ்சம் விளக்கை எல்லாம் அணைச்சுட்டு வந்தீங்கன்னா மின்சாரம் எல்லாம் வீணாகாது பாருங்க!” என்று […]
ஒருங்குறியும் ஓகாரக் கொம்பும்
Posted in கணிநுட்பம், கண்மணிகள், யூனிகோடு on Oct 27th, 2007
“It’s a consonant, vowel, vowel, consonant… நந்து”, என்று தங்கைக்கு துப்புக் கொடுக்க முயன்றாள் நிவேதிதா. நெடுந்தொலைவு பயணம் சென்றால் பெண்களின் அயர்வு தெரியாதவண்ணம் இருக்க ஏதேனும் கேட்டு அவர்களின் மனதைச் சுவாரசியமாக வைத்திருக்க முயல்வதுண்டு. சில சமயம் கணக்கு. சில சமயம் ஆங்கிலம். சில சமயம் கதை, இப்படி. அப்படியொரு பயணமொன்றில் ஒரு வருடத்திற்கும் முன்பு நடந்த கதை தான் இது. ஆங்கிலச் சொற்களுக்கு எழுத்துவரிசை சொல்லச் சொல்லி அன்று சின்னவளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். […]
“அப்பா, எனக்கு மூணு வரம் கெடச்சா நான் என்ன கேப்பேன்னு உங்களுக்குத் தெரியுமா?”, சிறு நடையாய்க் கடையொன்றுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புகையில் ஒரு கதையொன்றைச் சொல்லிமுடித்த என்னிடம் நிவேதிதா கேட்டாள். “என்ன கேப்பே? சொல்லுமா” * * * * இன்றைய என் கதை அப்படியொன்றும் சுவாரசியமாய் இருக்கவில்லை. மனம் வடிவானவள் வாடியிருந்த நாளொன்றில் கண்ணிலே இரண்டு சொட்டுவிட்டு அழுத கணம் நினைவில் வந்தது. ‘நீங்க இப்போ கதையெல்லாம் சொல்லுரதேயில்ல’ என்ற குற்றச்சாட்டு ‘என் கதையையும் விரும்பிக் […]
“அப்பா…”, குரல் கேட்டுத் திரும்பினேன். “திடீர்னு ஒருநாள் நான் செத்துப் போயிட்டா, என்னோட பொருள்லாம் என்னப்பா பண்ணுவீங்க?”, எப்போதும் போன்ற சாதாரண நாளொன்றின் மாலைப்பொழுதில் நிவேதிதாவிடம் இருந்து வந்த கேள்வி கேட்டுத் துணுக்குற்றுப் போனேன். “என்னம்மா, என்ன சொல்றே?” “சும்மா ஒரு பேச்சுக்குப்பா. ஒரு உதாரணத்துக்கு நம்ம கார் ஒரு மரத்து மேல மோதி விபத்து நடந்துடுச்சுனா… அதுல நான் செத்துப் போயிட்டா, என் கிட்ட இருக்குற பொருள் எல்லாம் என்ன பண்ணுவீங்க?” மரணத்தை இவர்களிடம் இருந்து […]