Feed on
Posts
Comments

Category Archive for 'கண்மணிகள்'

“அப்பா… இன்னிக்கு நான் ஒண்ணு கண்டு பிடிச்சிருக்கேன்…” “என்னம்மா?” “பன்னண்டுக்குள்ள வரிசையா மூணு நம்பர் எடுத்துக்குங்க” “ம்ம்… 10, 11, 12…” “அதுல நடுவுல இருக்கற நம்பர அதனாலயே பெருக்குனா வர விடையில ஒண்ணு கழிச்சீங்கன்னா, முதல் நம்பரையும் மூணாவது நம்பரையும் பெருக்குனா வர்ற விடைக்குச் சமமாயிடும்” “எப்படி எப்படி… 11*11=121; 121-1=120; 120=10*12… அட! ஆமாம்!” “இப்படி எந்த மூணு எண்ண எடுத்தாலும் வரும்” “பரவாயில்லயே… எப்படிடா இதக் கண்டு பிடிச்சே?” “அப்படியே யோசிச்சுப் பாத்துட்டு […]

Read Full Post »

‘புதையல் வேட்டை’ என்று சில சமயம் நிவேதிதா எங்களுக்கு சவால் விடுப்பதுண்டு. இன்னும் சிலசமயம் சங்கேத மொழியில் ஏதேனும் எழுதிக் கண்டுபிடிக்கச் சொல்வதுண்டு. சுவாரசியமாகவும் சிலசமயம் சவாலாகவும் சிலசமயம் வியப்பாகவும் இருக்கிறது. “எங்கிருந்துடா இதெல்லாம் கத்துக்கற?” “நான் நிறைய மிஸ்டரி புக்ஸ் படிப்பேன் அப்பா!” பலசமயம் சில துப்புக்கள் கொடுத்து வேலையை இலகுவாக்குவாள். கீழிருப்பது என்னவோ கிழக்கு ஐரோப்பிய மொழி போன்று என்னை நன்கு விழிக்க (முழிக்க 🙂 ) வைத்துவிட்டது. ஊஹும் தலைகீழாக நின்றும் கண்டுபிடிக்க […]

Read Full Post »

“ஏனோ எந்தக் காரணமும் இன்றி நான் இன்று மகிழ்வாக உணர்கிறேன் அப்பா”, என்றாள் நந்திதா, ஆங்கிலத்தில். (Somehow, for no reason, I feel very happy today appaa!). சின்னவளின் இந்தச் சந்தோஷத்திற்கு என்ன காரணம் என்று எனக்கும் புரியவில்லை. பெரியவள் நிவேதிதா இதைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் தன்பாட்டுக்குப் பல்துலக்கிக் கொண்டிருந்தாள். ஆறு மணிக்குக் கடிகாரச் சத்தம் வைத்துத் தாமாக எழுந்து ஆர்வத்துடன் அவர்கள் நாளைத் தொடங்குவதே ஒரு நிறைவான விஷயம். பின்னிரவின் இணைய உலா […]

Read Full Post »

ராக்சுபரி தத்துவம் (தமிழில்: செல்வராஜ்) ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமாகவும், தம் திறமைகளில், ஆர்வங்களில், அனுபவத்தில் ஒருவருக்கொருவர் பெரிதும் வேறுபட்டவர்களாகவும் இருக்கலாம். குழந்தைகளின் தொடர் வளர்ச்சிக்கு அவர்களுக்கென்று தேவைகள் இருக்கின்றன என்பது இனங்கண்டு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். இத்தேவைகளுள் உடல் நலத்திற்கானதும், அன்பு, பாதுகாப்பு, நம்பிக்கை, வெற்றி, சக வகுப்பினரினதும் ஆசிரியர்களினதுமான கவனிப்பு எல்லாம் அடக்கம். குழந்தைகளின் நல் மனநலத்திற்கும், அவர்களுக்கு ஒரு சாதனையுணர்ச்சியை உண்டாக்குவதற்கும் சாதகமான ஒரு கட்டமைப்பு அவசியம். பல குழந்தைகளுள் ஒவ்வொருவரும் ஒரே மாதிரியான குறிக்கோள்களை எய்துவதற்கு […]

Read Full Post »

வெஜினி அங்க்கிள் -நிவேதிதா (தமிழில்: செல்வராஜ்) முன்ன ஒரு காலத்தில ஒரு குட்டிபூதம் இருந்துச்சாம். அது எப்பப் பாத்தாலும் காய்கறில்லாம் சாப்பிட மாட்டேன்னு அடம் புடிச்சுட்டே இருக்குமாம். அவுங்கம்மா அதுக்கிட்ட, “சாப்பிடுரா செல்லம். காய்கறில்லாம் உன் உடம்புக்கு ரொம்ப நல்லது” ன்னு சொன்னாங்களாம். அறிவுக்குறும்பு பண்றதுக்கு ரொம்பப் புடிச்ச குட்டிபூதம் ஒரு ‘ஜீபூம்பா’ போட்டுத் தன்னயே மொத்தமா காய்கறிகளா மாத்திக்கிச்சாம். “ஆமாம்மா! காய்கறில்லாம் என் உடம்புக்கு நல்லாத் தான் இருக்கு” 🙂 🙂 ஒரு குட்டிபூதம் (ஜீனி) […]

Read Full Post »

« Prev - Next »