“நாங்க வர்றப்போ தரையெல்லாம் பச்சையா புல் இருந்துச்சு. மரத்துல இலை இருந்துச்சு. இன்னிக்குக் கிளம்பிப் போனா வெள்ளையா பனி தான் இருக்கும். குளிரும். இருந்தாலும் எனக்கு ஜாலி தான்” இந்தப் பட ஓவியர் நந்திதா. என் மகளே. பெரியவளின் படத்துக்குப் போட்டியாக இவளும் வரைவேன் என்று கிளம்பி MSPaint வழியாய் இப்படி ஒன்றைப் படைத்தது எனக்கும் ஆச்சரியமே. ஆரோக்கியமான போட்டி என்பதை வரவேற்கலாம் தான். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Category Archive for 'கண்மணிகள்'
ஒரு நீல வண்ணக் கட்டியை எடுத்து நந்திதா படம் வரைந்திருந்தாள். எலிக்குட்டி நன்றாக இருக்கிறது என்று நல்ல வண்ணப் பேனா ஒன்றைக் கொடுத்து மீண்டும் வரைந்து தருமாறு கூறினேன். மீண்டும் வரைந்த எலியோ உட்கார்ந்து கொண்டது. “இல்ல நந்து. எனக்கு அதே மாதிரி வேணும்” இப்போது எலி எழுந்து நின்றது. இருந்தாலும் முதல் எலி மாதிரி இல்லை. “நந்து. இதுவும் நல்லா இருக்கு. ஆனா எனக்கு இன்னொன்னும் வேணுமே” இது உங்களுக்கு; இது அம்மாவுக்கு; இது சகோதரிக்கு […]
மாமரத்தச் சுத்துவோம்
Posted in கண்மணிகள் on Jun 15th, 2005
முன்னொரு நாள் ஒரு சுந்தரப்பா(!) தன் அப்பாவின் பாட்டுக்கள் கொண்டு வந்து போட்டிருந்தார். குழந்தைகளுக்கும் தெரிந்த “மல்பரி புஷ்” இசைக்கும் சுட்டியையும் தந்திருந்தார். இங்கொரு அப்பாவும் பெண்களும் அதில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு சுற்றினோம். ஒரு பத்தி மட்டுமே பாடினாலும் இப்போது இங்கு இரண்டு பெண்களுக்குத் “துலக்குவோம்” என்கிற தமிழ்ச் சொல் தெரியும். ஒவ்வொரு சொல்லாய்க் கடக்கிறோம். இணையத்திற் சுட்ட இந்த மாமரத்தைச் சுட்டினால் பாட்டருவி எம்பிக் கொட்டும் (mp3, 260 KB). ‘வான் டிராப் குடும்பப் […]
நெஞ்சுக் கூட்டையும் தோள்பட்டையையும் இணைக்கிற பாலமாகப் புறம் ஒன்றாய் ஆளுக்கு இரண்டு எலும்புகள் இருக்கும். உடலுக்கு ஒரு கட்டமைப்புத் தருவதோடு இவை உள்ளிருக்கும் நரம்பு வலைகளுக்கும் பாதுகாப்பை அளிக்கின்றன. ஆங்கிலத்தில் Clavicle அல்லது Collar Bone என்று சொல்வார்கள். “S” வடிவத்தில் இருக்கும் இதனை இணையத் தமிழ் அகரமுதலி காறையெலும்பு அல்லது சவடியெலும்பு என்று கூறுகிறது. முதலில் விலா எலும்பு என்று தமிழ் அறிவிலியாய் எழுதிக் கொண்டிருந்ததை வெட்கத்தை விட்டு ஒத்துக் கொண்டு, தவறைச் சுட்டிக் காட்டிய […]
பெண்களுடன் நடந்து சென்று வந்தபோது வாத்துக்குளம் வறண்டு கிடந்தது. பாளம் பாளமாய் வெடித்துக் கிடந்த குளத்தைப் பார்த்துப் பெரியவளுக்குக் கொஞ்சம் ஏமாற்றம். இந்த வசந்தத்தில் போன வருடம் போல் மழையில்லை. தண்ணீரில்லாத குளத்தில் வாத்துக்கள் வரவில்லை. உள்ளே இறங்கிச் சிறிது நேரம் விளையாடியதில் வருத்தம் கொஞ்சம் மறைந்தது. “வாழ்க்கையிலேயே முதன்முறையாக இப்படிப் பார்க்கிறேன்” என்றாள். “இது என்ன பெருசு? எங்க ஊர்ல பெரிய பெரிய ஆறெல்லாம் தண்ணியில்லாமக் கிடக்குது” என்றேன். “It’s not fair” என்றாள். பேறாற்றைச் […]