ஓவியக் கண்காட்சி பார்க்கவென்று பெரிதாக ஒரு ஆர்வத்துடன் எங்கும் சென்றதில்லை. பள்ளி கல்லூரி நாட்களில் ஒருமுறை திருவனந்தபுரத்துக்குச் சுற்றுலா போயிருந்த போது எப்படியோ ‘மழைக்கு ஒதுங்கி’ ஒரு ஓவியக் கண்காட்சிக்குள் நுழைந்துவிட்ட கும்பலில் நானும் ஒருவனாய் இருந்துவிட்டேன். பொழுதைப் போக்கியவண்ணம் உள்ளே அலைந்து கொண்டிருந்தேன். ஒரு பக்கத்தில் இருந்த ஓவியக் கூட்டம் அப்படியே பிடித்து நிறுத்தி வைத்து விட்டது. என் அசிரத்தையைப் போக்கி ஆர்வத்தைத் தூண்டியது ஓவியர் ரவிவர்மாவின் எண்ணெய் வண்ணக்கலவைப் படங்கள். பிரகாசமான வண்ணங்களில் பலவகை […]
Category Archive for 'கண்மணிகள்'
அப்படி ஒன்றும் பெரிய உடல் நலக் கேடில்லை. வருடம் இருமுறை பருவத்திற்கொன்றாய் வந்து போகிற சாதாரணச் சளி மற்றும் மூக்கொழுகல் தான். இருந்தாலும் சற்றே மிதமான தலைவலியும் இருக்க, அலுவலுக்கு விடுப்புச் சொல்லி விட்டு இன்று வீட்டிலேயே இருந்துவிட்டேன். ஒரு நாள் ஓய்வு நலம் பயக்கும் என்று. மகள்கள் பள்ளிக்குச் சென்று வரவும், மனைவி அவர்களை அழைத்துக் கொண்டு சில வகுப்புக்களுக்குக் கொட்டும் பனியில் சென்று வரவுமாய் இருக்க, நான் மட்டும் வீட்டில் சுகமாக அமர்ந்து கொண்டு […]
ஏதோ வேலையாகக் கீழ்த்தளத்திற்குச் சென்றபோது, என் வீட்டுக் கண்மணிகள் ஒரு செந்நிற நூல்கண்டை உருவி விளையாடிச் சிக்குப் போட்டு வைத்திருந்தது கண்ணில் பட்டது. அதைப் பார்த்துவிட்டு தலையை ஆட்டிவிட்டு அகன்றிருக்கலாம். இன்னும் கொஞ்சம் உருவிச் சிக்கிய பாகத்தை வெட்டி எறிந்துவிட்டு எஞ்சியதைச் சேர்த்து வைத்திருக்கலாம். ஆனால் இன்றைய தேதியில் மனம் வேறு வழியில் சிந்தித்து விட்டது. அந்தச் சிக்குகளை எல்லாம் நீக்கி மீண்டும் சுற்றி வைக்கலாம் வா என்று என்னை அணைத்துக் கொண்டது. அழைத்துச் சென்றது. சட்டைப் […]
எனது பெரிய மகளின் (Kinder Garten) பள்ளியில் இன்று முதன் முறையாக ஆசிரியர்-பெற்றோர் சந்திப்பு. நான் செல்லவில்லை எனினும் மனைவி கூறத் தெரிந்துகொண்டேன். எல்லா மதிப்பீடுகளிலும் பெரும் பாராட்டுக்களைப் பெற்றிருந்தாள் நிவேதிதா. வகுப்பிலேயே சிறப்பானவர்களுள் ஒருவராய் அடையாளம் காட்டப் பட்டிருக்கிறாள் என் மகள். நுழைவு மதிப்பீட்டின் போதே திறமையானவர்களுள் ஒருவர் என்று தனக்குச் சுட்டிக் காட்டப் பட்டதாகவும் வகுப்பில் இவளுக்குச் சுவாரசியக் குறைவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தனக்குச் சொல்லப் பட்டதாகவும் ஆசிரியை கூறியிருக்கிறார். […]
“அக்காவின் படம் மட்டும் போட்டால் எப்படி? என்னையும் கண்டு கொள்ளுங்கள்” என்றாற் போல் தானும் ஒரு படம் போட்டு என்னிடம் நீட்டினாள் நந்திதா. எதற்கெடுத்தாலும், எல்லாவற்றிலும் பெரியவளுடன் போட்டி. அல்லது நகலெடுத்தாற் போல் நிவேதிதா செய்வதையே இவளும் செய்வது பல சமயம் வேடிக்கையான ஒன்று. போட்டிகள் தகராறுகள் அவ்வப்போது நிறைந்திருந்தாலும் பல நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் உற்ற துணையாய் நட்புடன் விளையாடும் இவர்களைக் காண்பது பேரின்பம். அவசர வாழ்க்கையில் சில சமயம் இது போன்ற இன்பங்களை […]