சென்ற வாரம் நிவேதிதா ஒரு ஓவியம்வரைந்து கொண்டிருந்தாள். வசந்த-விடுப்பு என்று பாலர்பள்ளி இரண்டு வாரமாய் விடுமுறை. ஈரி ஏரியோரம் இருக்கும் க்ளீவ்லாண்டில் தான்வசந்தம் இன்னும் முழுதாய்வந்த பாட்டைக் காணோம். தமிழ்ப்புத்தாண்டு (எல்லோருக்கும் தாமதமான வாழ்த்துக்கள்) அன்று30 (F) டிகிரிக் குளிர். இந்த ஓரிரண்டு நாட்களாய்ப் பரவாயில்லை. வசந்தம் வந்து கொண்டிருக்கும் அறிகுறிகள் தெரிகின்றன. விடுமுறை என்றுவீட்டில் இருக்கும் மக்கள் இருவரையும் மேய்க்கும் வேலை மனைவிக்கு. தினமும் ஓவியமும், நடனமும், பிறகலைகளும், வெட்டி ஒட்டுதல்களும், பசையைக் கார்ப்பெட் தரையெங்கும் […]
Category Archive for 'கண்மணிகள்'
நான் ஒரு பெரிய பாடகன் இல்லை. குளியலறையில் கூட எனது இசை ஞானம் அதிகமாய் வெளிவந்ததில்லை. பார்க்கின்ற கேட்கின்றபாடல்கள் என்னையும் அறியாமல் எனக்குள் புகுந்து கொண்டால் தான் உண்டு. ஆனால், தற்செயலாகச்சில பாட்டு வரிகள் மட்டும் என்றாவதுஎன்னுள் எட்டிப் பார்ப்பது உண்டு. அதிலும் பாடல்களின் முதல் நான்கு வரிகளோ, இரண்டு வரிகளோ (பல்லவி?) மட்டும் தான்தப்பும் தவறும் நிறைந்துவெளிவந்து விழுவது வழக்கம். ஆக, நான் ஒரு சிறிய பாடகன் கூட இல்லை என்று தான் சொல்ல வேண்டும். […]
கடந்த வாரத்தில் எனது பெரிய பெண்ணை இவ்வருடம் பள்ளியில் சேர்க்கப் பதிவு செய்யும் நாள் என்று போயிருந்தேன். நல்லதொரு அமைப்பு முறையும் அனுபவமுமாய் இருந்தது. ஒருவாரம் முன்னரே அறிமுகநாள் என்று ஒரு கூட்டம் போட்டு அதிலேயே விவரங்கள், படிவங்கள் எல்லாம் கொடுத்துப் பெயர் வரிசைப்படி இரண்டு நாட்களாய்ப் பிரித்து அதன்படி எல்லோரையும் வரச்சொல்லி இருந்தார்கள். ஒரு பெரிய அறையில் நான்கைந்து நிலையங்கள் அமைத்து வரிசையாய் ஒவ்வொரு இடத்திலும் ஒரு விஷயம் சரிபார்த்து வாங்கி வைத்துக்கொண்டு, கேள்விகளுக்குப் பதில் […]