பசுமையும் வெண்மையும்
Dec 30th, 2005 by இரா. செல்வராசு
“நாங்க வர்றப்போ தரையெல்லாம் பச்சையா புல் இருந்துச்சு. மரத்துல இலை இருந்துச்சு.
இன்னிக்குக் கிளம்பிப் போனா வெள்ளையா பனி தான் இருக்கும். குளிரும்.
இருந்தாலும் எனக்கு ஜாலி தான்”
இந்தப் பட ஓவியர் நந்திதா. என் மகளே. பெரியவளின் படத்துக்குப் போட்டியாக இவளும் வரைவேன் என்று கிளம்பி MSPaint வழியாய் இப்படி ஒன்றைப் படைத்தது எனக்கும் ஆச்சரியமே. ஆரோக்கியமான போட்டி என்பதை வரவேற்கலாம் தான்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
பயணம் இனிதாகட்டும். இங்கே வந்தவுடன் உங்களை தொடர்பு கொள்கிறேன். குடும்பத்தில் அனைவரும் நலமுடன் வளமும் பெற என் வாழ்த்துக்கள்
பத்மா, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. நலமே வந்து சேர்ந்தோம். பிறகு மடல் எழுதுகிறேன். உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
Selvaraj,
Looks like your daugthers will start their own blogs very soon, as they are already using MS Paint.
நித்யா, அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே வலைப்பதிவு இருக்கிறது. அதிகமாக விளம்பரமாகவில்லை. அவர்களின் முழுக் கட்டுப்பாட்டின் கீழும் இல்லை. தவிர, அவற்றை நிர்மாணித்துப் பராமரிப்பவர் கொஞ்சம் சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை! 🙂