வெஜினி அங்க்கிள் -நிவேதிதா
Aug 27th, 2006 by இரா. செல்வராசு
வெஜினி அங்க்கிள் -நிவேதிதா
(தமிழில்: செல்வராஜ்)
முன்ன ஒரு காலத்தில ஒரு குட்டிபூதம் இருந்துச்சாம். அது எப்பப் பாத்தாலும் காய்கறில்லாம் சாப்பிட மாட்டேன்னு அடம் புடிச்சுட்டே இருக்குமாம்.
அவுங்கம்மா அதுக்கிட்ட, “சாப்பிடுரா செல்லம். காய்கறில்லாம் உன் உடம்புக்கு ரொம்ப நல்லது” ன்னு சொன்னாங்களாம்.
அறிவுக்குறும்பு பண்றதுக்கு ரொம்பப் புடிச்ச குட்டிபூதம் ஒரு ‘ஜீபூம்பா’ போட்டுத் தன்னயே மொத்தமா காய்கறிகளா மாத்திக்கிச்சாம்.
“ஆமாம்மா! காய்கறில்லாம் என் உடம்புக்கு நல்லாத் தான் இருக்கு” 🙂 🙂
ஒரு குட்டிபூதம் (ஜீனி) காய்கறிபூதம் (வெஜினி) ஆன கதை இது தான்!
பி.கு.:
1. எங்களின் புறநகர்ப்பகுதியின் வேனிற்திருவிழாவில் ‘வெஜ்ஜி மான்ஸ்டர்’ போட்டியில் முதல் பரிசு பெற்ற படைப்பு. ஆக்கம்: நிவேதிதா (உதவி: நந்திதா)
2. பயன்படுத்தப் பட்டவை:
- முடி: ஒருவகை அவரை, ‘Indian Store’ Beans
- தலை: பாகற்காய், Bitter Gourd
- முகம்: முட்டைக் கோசு, Cabbage
- கண்: வெள்ளரிக்காய், Cucumber
- கருவிழி: ப்ளூபெர்ரீ, Blueberry
- காது/கொம்பு: ப்ராக்களி, Broccoli
- மூக்கு: ??, Tindora
- வாய்: சிகப்பு வெங்காயம், Red Onion
- கால்கள்: ப்ராக்களித் தண்டு, Broccoli (Stem)
3. பல காய்கறிகளும், அவற்றின் தமிழ்-ஆங்கிலப் பெயர்களும், அவை குறித்த ‘சுவை’யான ( 🙂 ) உரையாடலுக்கும் இராம.கியின் காய்கறிகளும் கலப்பு வழக்கமும் பார்க்க.
4. காலிஃபிளவருக்குப் பூக்கோசு என்றால் ப்ராக்களிக்கு என்ன? பச்சைப்பூக்கோசு? :-). Berry=? Tindora=வாய்ப்பே இல்லை!
குழந்தை கலைஞர்களுக்கு என் பாராட்டுக்கள். பெர்ரி என்பது ஒருவகை நெல்லிக்கனி வகை (gooseberry) vakai என்றூம் tindooraa கோவைக்காய் என்றும் நினைக்கிறேன்.
ஆகா..கதையும் vegenie-படமும் அருமை..குழந்தைக்கு(களுக்கு) என் மனமுவந்த வாழ்த்துக்கள்!!
..aadhi
வாழ்த்துக்கள். என் இனத்தவர் வெற்றி பெற்றதை அறிந்து மிக மகிழ்ந்தேன்.
சில நேரங்களில் மாசிலனுக்கும் இந்த மாதிரி வித்தைகள் விளையாட்டுக்கள் செய்தால்த்தான் காய்கறி உள்ளிறங்கும். அருமையான முயற்சி. குட்டிகளுக்கு வாழ்த்த்க்கள்.
நிவேதிதாவுக்கும், நந்திதாவுக்கும் வாழ்த்துக்கள்!
மிக்க மகிழ்ச்சி செல்வராஜ், குட்டிகளின் கைவண்ணம் பார்க்க. வாழ்த்துக்கள் அவர்களுக்கு. இங்கும் காய்கறி சாப்பிடவைக்க ஒரே போராட்டம்தான்:(( இந்தப்படத்தை அச்சுநகல் எடுத்து மாட்டிவைக்கப்போகிறேன் :)) உங்களின் வேனிற்காலக் கூட்டக் குறிப்புகளும் சுவாரசியமாக இருந்தன. பயன்படுத்திப் பார்க்கும் ஆர்வம் தந்தனவாகவும். நன்றி.
அருமை!
வாழத்துக்கள்…
Vegenie….Good Imagination and great work by the sisters(!!)
வெஜினி கதி என்ன ஆச்சு கடைசியிலே? 🙂
Vegenie is very cool…or is it vecool? 🙂
So cute!!!!
வெஜினிக்கு சிகப்பு நிறமும் கொடுத்திருக்கலாமே.. எனக்குப் பிடித்த தக்களிகளுடன்?!
நிவேதிதா, நந்திதா மற்றும் வெஜினி அங்கிளுக்கும் வாழ்த்துக்கள்.. 🙂
Tindora என்னது? பார்க்க வெள்ளரிக் காய் மாதிரி இருக்கிறது
நண்பர்களின் வாழ்த்துக்கள் அனைத்திற்கும் நன்றி.
பொன்ஸ், Tindora என்பது கோவைக்காய் (நன்றி பத்மா) என்று தான் என் மனைவியும் நினைத்தார். எனக்குச் சரியாகத் தெரியவில்லை. நம் ஊர் வேலியில் கிடைக்கிற கோவைப்பழம் சம்பந்தப்பட்டதா? அமெரிக்காவில் பல ஊர்களிலும் இந்திய மளிகைக்கடைகளில் கிடைக்கிறது.
தக்காளியோ கேரட்டோ கன்னம் வைக்கப் பயன்பட்டிருக்கும். ரொம்ப அதிகமாகப் போய்விடும் என்று விட்டுவிட்டோம். தவிர வெஜினியைக் காரில் கூட்டிப் போய் விழாத்திடலில் பார்வைக்கு வைக்க வேண்டியிருந்ததால் கவனமாகக் கையாள வேண்டியிருந்தது.
ப்ராக்களி பூபூ (பேர் நல்லா இருக்கு), அப்புறம் என்ன ஆச்சு? பொரியல், குழம்பு தான் 🙂 ப்ராக்களி உடம்புக்கு நல்லதாம். பூபூன்னு ஒதுக்காம புளிக்குழம்பு வச்சு சாப்பிடுங்க!
ஜானா, செல்வநாயகி, இங்கேயும் சாப்பாட்டு நேரத்தில் சண்டைகள் உண்டு தான். எல்லா உணர்ச்சிகளையும் அந்நேரத்தில் பார்க்கலாம் 🙂 (என்ன செய்ய வேண்டும் என்னும் எங்களின் சண்டை உட்பட!)