ததிங்கிணத் தித்தோம்
Sep 22nd, 2006 by இரா. செல்வராசு
‘புதையல் வேட்டை’ என்று சில சமயம் நிவேதிதா எங்களுக்கு சவால் விடுப்பதுண்டு. இன்னும் சிலசமயம் சங்கேத மொழியில் ஏதேனும் எழுதிக் கண்டுபிடிக்கச் சொல்வதுண்டு. சுவாரசியமாகவும் சிலசமயம் சவாலாகவும் சிலசமயம் வியப்பாகவும் இருக்கிறது.
“எங்கிருந்துடா இதெல்லாம் கத்துக்கற?”
“நான் நிறைய மிஸ்டரி புக்ஸ் படிப்பேன் அப்பா!”
பலசமயம் சில துப்புக்கள் கொடுத்து வேலையை இலகுவாக்குவாள். கீழிருப்பது என்னவோ கிழக்கு ஐரோப்பிய மொழி போன்று என்னை நன்கு விழிக்க (முழிக்க 🙂 ) வைத்துவிட்டது.
ஊஹும் தலைகீழாக நின்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அவள் கொடுத்த துப்பு ஒன்றை வைத்துக் கொண்டு தலைகீழாக நின்று கண்டுபிடித்தேன். ஒருவேளை ‘ஐஸ் கிரீம்’ கொடுக்கிறேன் என்று ‘நைஸ்’ பிடித்தால் நேரடியாகச் சொல்லி விடுவாளாய் இருக்கும்.
For evening snack I want Ice cream please !
Good One !!!
அழகோ அழகு இரண்டு பேரும்!!
ரசித்துக் கொண்டிருந்ததில் சொல்ல வந்ததை சொல்ல மறந்து போனேனே!
ஐஸ் க்ரீம் தருகிறேன் உன்னைப் பார்க்க நேரும் போது. சொல்லி விடேன் நிவேதிதா கண்ணம்மா!!
நான் வேறு யாருக்கும் சொல்ல மாட்டேன்.
பி.கு : செல்வராஜ் அவர்களே புண்ணியம் செய்தவர்களுக்குத்தான் பெண்குழந்தைகள் பிறக்குமாம்; நீங்கள் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் நிறைய புண்ணியம் செய்த உங்கள் இரு பெண்குழந்தைகளும்.
யூநோமீ, ஐடோண்ட் திங்க் ஐ நோ யூ :-)! Chocolate விட்டுட்டீங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுட்டீங்க. நன்று.
உதயா, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. யூநோமீ மேலே சொல்லி இருக்காரு பாருங்க. அதே தான்.
Sort of guessed it…didn’t decode it completely though.
Great work ..it keeps them thinking and occupied.