Feed on
Posts
Comments

Category Archive for 'வேதிப்பொறியியல்'

பகுதி-1 | பகுதி-2 | பகுதி-3 வேதியியலுக்கும் வேதிப்பொறியியலுக்கும் சிறிது சம்பந்தம் உண்டு என்றாலும் இரண்டும் வெவ்வேறானவை. இருந்தும் என்னுடைய முழு வரலாறும் அறிந்துமே, “டேய், நீ என்னடா கெமிஸ்டிரி தானே படிச்ச?” என்று பேச்சுவாக்கில் இன்னும் வினவும் என் பள்ளிக் கால நண்பன் போன்றவர்களுக்காக ‘வேதிப்பொறியியல்’ பற்றியொரு எளிய அறிமுகம் இங்கே. கணியியல், மின்னியல், மின்சாரவியல், எந்திரவியல் போன்ற பொறியியலின் கவர்ச்சிமிகு மற்ற துறைகளைப் போலன்றி வேதிப்பொறியியல் அவ்வளவாகப் பொதுவில் அறியப் படாத ஒன்று. ஏன், […]

Read Full Post »

‘கரும்பொன்’ என்று சொல்வார்கள். தங்கத்தைப் போல நிலத்தடி எண்ணெய் அவ்வளவு விலைமதிப்பு மிக்கதாய் அமைந்து விட்டது. உலகின் சக்தித் தேவைகளில் சுமார் 40 சதவீதத்தைக் கச்சா எண்ணெயே தீர்த்து வைக்கிறது. இன்றைய உலகப் பொருளாதாரத்தின் ஆணிவேராய் அமைந்திருப்பதும் இந்த எண்ணெய் வளமே என்றாலும் மிகையாகாது. சுமார் 90 சதவீதப் போக்குவரத்துக்குக் கச்சா எண்ணெயே ஏதோ ஒரு வகையில் காரணமாய் இருக்கிறது. பல பொருட்களுக்கும் வளங்களுக்கும் அடிப்படையாய் அமைந்திருப்பது கச்சா எண்ணெய் தான். ஏன், இன்றைய மத்தியக் கிழக்குப் […]

Read Full Post »

« Prev