Feed on
Posts
Comments

Category Archive for 'கணிநுட்பம்'

ஒரு அளவிற்கு மேல் பெரிதாக வளருகிற, நிறுவனப்படுகிற அமைப்புக்களின் மேல் ஐயங்களும் அதிருப்திகளும் ஏற்படுவது இயற்கை என்பதற்கு மைக்ரோசாஃப்ட் ஒரு உதாரணம் என்றால் அண்மைய மாறுதல்கள் கூகுள் நிறுவனத்தையும் அந்தப் பாதையில் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்று கொள்ளலாம். அதன் விளைவு தான் பரவலாய் ஆங்காங்கே எழுந்து கொண்டிருக்கும் அரவங்கள். காரணங்கள் இல்லாமலும் இல்லை. மக்களாட்சிச் சீருக்குக் குந்தகம் வரும் வகையில் நடந்து கொள்ளும் அமெரிக்க அரசின் வேண்டுகோளை எதிர்த்துப் பயனர் தகவல்களைத் தர மறுத்து வீரநிலை எடுத்து […]

Read Full Post »

ரவி ஸ்ரீனிவாஸ், பத்ரி, வெங்கட் முதலானோர் ஒரு புத்தகப் பட்டியல் தரவுதளம் உருவாக்குவது பற்றிக் கருத்துக்களை எழுப்பியும் சோதனை முயற்சிகளை மேற்கொண்டும் இருக்கின்றனர். பலரும் இது போன்ற ஒரு வசதிக்காக ஏங்கி இருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது ஒரு நல்ல முயற்சி. கிடைக்கிற சில நேரத்தில் படிக்க நல்ல (தம் விருப்பத்திற்கேற்ற) புத்தகங்கள் தெரிவு செய்ய இது போன்ற ஒரு தரவுதளம் உதவும் என்பது உறுதி. இப்படியான ஒரு பட்டியலுக்கும், தரவுதளத்திற்கும், விமர்சனங்களுக்கும் நானும் ஏங்கி […]

Read Full Post »

“சும்மா வந்த மாட்டப் பல்லப் புடிச்சுப் பாத்தவன்” கதையாய் எனது முந்தைய இணையதளச் சேவை நிறுவனத்தார் சொல்லாமல் கொள்ளாமல் பெரிய நெற்றிப் பட்டையாய் கூகிள் விளம்பரத் தட்டி வைக்கத் தொடங்கியது பிடிக்காமற் போயிற்று. இலவசமாய்ச் சேவை கொடுக்கிற எங்களுக்குத் தள மாற்றங்கள் செய்ய உரிமை இருக்கிறது என்று தான்தோன்றித்தனமாக அவர்கள் நடந்து கொள்ள, இணையம் ஒரு சுதந்திரமான இடம், நான் வேறிடம் பார்த்துக் கொள்கிறேன் போ என்று மாறிவிட்டேன். அந்த விளம்பரத் தட்டியைத் தூக்கி எறியக் கேட்ட […]

Read Full Post »

செய்தியோடைகள் பற்றிச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. தமிழிலேயே விரிவான கட்டுரைகள் பல உண்டு. உதாரணத்திற்கு இ-சங்கமத்தில் உமர் எழுதிய கட்டுரை. வளர்ந்து வருகின்ற வலைப்பதிவுலகிற்குச் செய்தியோடைகள் முக்கியமான ஒரு நுட்பம். நூறு நாட்களைத் தாண்டி சுகந்தமாய் வீசிக் கொண்டிருக்கிற தமிழ்மணம் கூட செய்தியோடைகளை அடிப்படையாய் வைத்துக் கட்டப்பட்டது தான். அடிப்படையில் செய்தியோடை என்பது ஒரு XML கோப்புத் தான். பலவிதக் குறியீட்டு அடையாளங்களோடு அதனைப் பார்ப்பதற்குக் கூட அவ்வளவு எளிமையாகவோ எழிலாகவோ இராது. காரணம், அது மனிதர்கள் படிக்க […]

Read Full Post »

வருக வருக ! நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு வணக்கம். வலைப்பதிவு தொடங்கி இன்னும் ஒரு வருடம் கூட முழுமையாகத் தாண்டாத நிலையில் மூன்று இடங்கள் மாறி இன்று நான்காவதாக ஒரு இடம் பார்த்து வந்திருக்கிறேன். “எத்தனை நாளைக்குத் தான் சட்டி பானையெல்லாம் தூக்கிக்கிட்டு அலையறது ? நமக்குன்னு ஒரு சொந்த இடம் வேணுமப்பா”, வாடகை வீட்டிலேயே பல வருடங்கள் கழித்துவிட்ட அம்மா சில வருடங்களுக்கு முன் ஒருநாள் இப்படிக் கூறியது நினைவுக்கு வருகிறது.

Read Full Post »

« Prev - Next »