Feed on
Posts
Comments

Category Archive for 'கவிதைகள்'

மொடா அண்டாத் தண்ணி காச்சி மொழங் கால்மேல குப்புறப் போட்டு முதுகுல எண்ண வச்சுச் சூடான தண்ணியூத்தி நீவிக் குளிச்சுட்டப்போ சலதாரையில் வழுக்கி உழுந்து – நான் வீல்வீல்னு கத்துனதச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பீங்க. மங்கிலியம் கோத்திருந்த மஞ்சக்கயிறு மக்கிப்போயி அந்தும்போக புதுக்கயிறு கோத்துத்தான்னு நீங்களே சொல்லீட்டு, சலதாரையில் கிடந்த பையன் தாலிகட்ட வந்துட்டான்னு கிண்டல் வேற செஞ்சீங்க. பொக்கைவாய்க் கன்னம் குழி உழுகச் சிரிச்சுக்கிட்டு என் வளர்ச்சிய வியந்தீங்க.

Read Full Post »

« Prev