இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

Don’t Worry, Be Happy – Bobby McFerrin

May 31st, 2006 · 10 Comments

ஒரு தமிழ்மீடியப் பையனின் பீட்டர் ஸாங்க்ஸ் அனுபவத்தை விட ஆங்கில மிடையவழி வந்த எனது ஆங்கிலப் பாடல் கேள்விஞானம் மிகவும் குறைவு. சற்றேறக்குறையச் சுழி என்றே சொல்லலாம். அமெரிக்கா வந்தபின் சதா பாட்டுக்களில் திளைத்திருந்த அறைத்தோழர்களும் நண்பர்களும் காரணமாய் அங்கங்கு ஒட்டிக் கொண்ட சில பாடல்களில் இரண்டு மட்டும் குறிப்பிடத் தக்கவை. நினைவில் நிற்பவை. ஒன்று மடோன்னாவின் ‘இது என் விளையாட்டரங்காய் இருந்தது’ (This used to be my playground). இரண்டாவது, பாப் மார்லியின் ரெக்கே பாட்டு என்று இத்தனை நாள் தவறாக எண்ணியிருந்த ‘வருத்தம் விடு, மகிழ்ந்து இரு’ (Dont Worry Be Happy). பாடலை எழுதியவர் – பாப் மெக்ஃபெரின் என்னும் ஜாஸ் இசைக் கலைஞர். ‘கெப்பெல்லா’ என்று அதிக இசைக்கருவிகள் இல்லாது வாய்வழியே பாடி இசையமைக்கும் மரபுடையவர். அண்மையில் யூட்யூப் வழியாய் கிடைத்த ஒளிப்படத்துண்டு உந்தியதில் தமிழாக்கம் செய்ய முயன்றேன்.

ஒரு கதையையோ, கட்டுரையையோ, ஏன் ஒரு கவிதையைக் கூடத் தமிழாக்கம் செய்து விடல் எளிதாக இருக்கலாம். ஒரு பாட்டைப் பெயர்ப்பது என்பது மிகவும் சிரமமானது என்பதை உணர்கிறேன். இசையோடு ஒவ்வாத அசைகளும், பாட்டில், பெயர்ப்பில் இருக்கிற குறைகளும், எல்லாமும் என்னையே சேரும்.

Don’t Worry, Be Happy – Bobby McFerrin

வருத்தம் விடு, மகிழ்ந்து இரு
-தமிழில்: செல்வராஜ்.

இதோ நான் எழுதியதோர் சிறிய பாட்டு
வரிக்கு வரி விடாமல் நீயும் பாடிப்பாரு
வருத்தம் விடு, மகிழ்ந்து இரு

நம்ஒவ்வொரு வாழ்விலும் சில சிக்கலுண்டு
நீ வருந்தும்போது அது இரட்டிப்பாகுது
வருத்தம் விடு, மகிழ்ந்து இரு

வருத்தம் விடு, மகிழ்ந்து இரு இப்போது
வருத்தம் விடு, மகிழ்ந்து இரு
வருத்தம் விடு மகிழ்ந்து இரு
வருத்தம் விடு, மகிழ்ந்து இரு
வருத்தம் விடு மகிழ்ந்து இரு

தலை சாய்த்துக்கொள்ள உனக்கொரு இடமும் இல்லே
யாரோ வந்துன் படுக்கையும் எடுத்துக் கொண்டார்
வருத்தம் விடு, மகிழ்ந்து இரு

வீட்டுக்காரன் சொன்னது ‘வாடகை பாக்கி’
வழக்கொன்று பதியட்டும் பிறகு பார்க்கலாம்
வருத்தம் விடு, (ஹஹ்ஹஹ்ஹா) மகிழ்ந்து இரு

என்னைப் பார் நான் மகிழ்ந் திருக்கிறேன்
வருத்தம் விடு, மகிழ்ந்து இரு
என் தொலைபேசி எண்ணை உனக்குத் தருவேன்
வருத்தம் வந்து வாட்டுகையில் என்னை அழைப்பாய்
உன்னை நான் மகிழ்வாக்குகிறேன்.

வருத்தம் விடு, மகிழ்ந்து இரு

ஒருபணங்காசு இல்லே, ஒரு ஒயிலும் இல்லே – உனக்குச்
சிரிப்பூட்டவும் பெண்ணொன்று இல்லே – ஆனாலும்
வருத்தம் விடு, மகிழ்ந்து இரு

எனில்நீ வருந்துகையில் உன்முகம் கடுக்கும் – அது
எல்லோரையுமே கீழே யிறக்கும் – அதனால்
வருத்தம் விடு, மகிழ்ந்து இரு

வருத்தம் விடு, மகிழ்ந்து இரு இப்போது

வருத்தம் விடு, மகிழ்ந்து இரு
வருத்தம் விடு மகிழ்ந்து இரு
வருத்தம் விடு, மகிழ்ந்து இரு
வருத்தம் விடு மகிழ்ந்து இரு

வருத்தம் விடு, விடு வருத்தத்தை, வேண்டாம் விடு
மகிழ்ந்திரு, முகத்திலே நகைப்பொன்று பூட்டு
இதுபோல் அனைவரையும் கீழிறக்காதே

வருந்தாதே, விரைவில் விலகி விடும் எதுவானாலும்
வருத்தம் விடு, மகிழ்ந்து இரு

நான் வருந்தவில்லை
நான் மகிழ்ந்திருக்கிறேன்

Tags: கவிதைகள் · பொது

10 responses so far ↓

 • 1 -/பெயரிலி. // May 31, 2006 at 11:12 pm

  பழைய ஞாபகத்தினைக் கிளறியிருக்கின்றீர்கள்.. நான் சீனாவிலேயிருந்தபோது, பொப்மாலியின் பாடல்களூடன் கூடவே சேர அறிந்துகொண்ட பாடல்களிலே ஒன்று. நான் இதை வெகுகாலம்வரை UB40 இன் பாடலென நினைத்திருந்தேன். இதற்கு இணையாக இன்னொரு பாடலும் இதே போக்கிலே வரும். Beatles இன் “Let it be”

 • 2 கார்திக்வேலு // Jun 1, 2006 at 7:48 am

  I have always suspected our “take it easy oorvasi” song being inspired by this one 🙂

  bob marleys buffalo soldier was inspired into “akila akila ” in nerukku ner.Imagine the rastafarian dancing with simran 🙂

  “What a wonderful life” of Louis Armstrong is also a similar self-inspiring piece.

  நல்ல மொழிபெயர்வு.

 • 3 செல்வராஜ் // Jun 1, 2006 at 9:10 pm

  பெயரிலி, கார்திக்வேலு, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பிற ஆங்கிலப் பாடல்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியவில்லை.

 • 4 பொடிச்சி // Jun 1, 2006 at 9:46 pm

  நன்றி செல்வராஜ். அருமையான பாடல்.
  இவரது இந்தப் பாட்டும் மிகவும் பிடித்திருந்தது.

 • 5 -/. // Jun 1, 2006 at 11:18 pm

  கார்த்திக்வேலு, ‘It’s a wonderful life’ ப்ராங்க் காப்ராவின் படம். ‘What a wonderful world’தான் ஆம்ஸ்ரோங்கின் பாடல். நீங்கள் சொல்வதுபோல, மிகவும் அருமையானது.

  அள்ளிப்போட்ட பாடல்களென்றால், பலவுண்டு… நானதானே ஒரு புதுக்கவிதை By the rivers of Babylon இலிருந்து உருவப்பட்டதாகத் தோன்றும். நமக்குச் சங்கீதசங்காத்தமில்லை. அறிந்தவர்கள் உருவல்மூலம் குறித்த பட்டியலே இட்டு இணையத்திலே கிடைக்கிறது.

 • 6 prakash // Jun 2, 2006 at 7:47 am

  http://www.itwofs.com/

 • 7 இளவஞ்சி // Jun 2, 2006 at 8:07 am

  செல்வராஜ்,

  இதே அண்ணாத்தேவோட Buffalo Soldier கேட்டுப்பாருங்க! அதுவும் உங்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடிக்கக்கூடும்!

  http://www.lyricsfreak.com/b/bob+marley/buffalo+soldier_20021701.html

  படிச்சி முடிச்சதும் இதைத்தான் சொல்லலாம்னு வந்தா கார்த்திக்வேலு முந்திக்கிட்டாரு! :)))

 • 8 கார்திக்வேலு // Jun 2, 2006 at 8:55 am

  பெயரிலி ,
  பின்னிரவில் தட்டச்சும் போது ,தவறிவிட்டது 🙂

  இதையும் கேட்டுப் பாருங்கள்,

  1.quizas , quizas , quizas –(perhap perhaps perhaps )
  .
  http://youtube.com/watch?v=sAZza6Ix5NA&search=quizas%20
  (Ignore the video , its has no link to song)

  2.B.B King is all time Blues God-with a magnetic emotive voice and guitar picking

  Rock me Baby—http://youtube.com/watch?v=vBd6XhQ-kCQ&search=BB%20king
  When love comes to town (with U2 )
  Thrill is gone –http://youtube.com/watch?v=_L1Ajv3A6qc&search=BB%20king

  3.Blue grass pieces ,this one from Alison Krauss (easy listening)

  http://youtube.com/watch?v=owqy-l1XrOo&search=go%20to%20sleep%20little%20baby%20

  frm the soggy bottom boys

  http://youtube.com/watch?v=APjeR_3pn0c&search=man%20of%20constant%20sorrow%20

 • 9 செல்வராஜ் // Jun 2, 2006 at 12:04 pm

  கார்திக்வேலு (ஏன் ஒரு ‘க்’ விட்டுடறீங்க?), இளவஞ்சி, Buffalo Soldier-அக் கேட்கவே முடியலே – ‘அகிலா அகிலா’ தான் கேட்குது. இப்படியுமா சுடுவாங்க? சுட்ட பாட்டுத் தொகுப்பு பற்றி பிரகாஷ் விவரம் கொடுத்திருக்காரு.

  கார்திக், நீங்க கொடுத்திருக்கிற பிற பாடல்களையும் அப்புறமா கேட்டுப் பார்க்கிறேன்.

  பெயரிலி, வொண்டர்ஃபுல் லைஃப் பாட்டும் அந்தப் படமும் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில சில வருடங்கள் இருந்துவிட்டால், அந்தப் பாட்டக் கேட்பதில் இருந்து தப்ப முடியாது என்று நினைக்கிறேன். Rivers of Babylon என்னவோ சொல்லியிருக்கீங்க. அறிமுகம் இல்லைன்னு நினைக்கிறேன். …rivers of dream… என்று வரும் ‘in the middle of the night…’ கேட்டு ரசித்திருக்கிறேன். U2?

  பொடிச்சி, இவரோட யோயோமாவுடனான இணைப்பு பற்றிப் படித்திருந்தேன். பாடலை, முக்கியமா இசையைக் கேட்க நன்றாக இருந்தது.சுட்டிக்கு நன்றி. அதையும் மீறி அந்தக் காட்சியில் தெரிந்த மகிழ்வும் புன்னகையும் தொற்றிக் கொள்கிறது.

  டோண்ட் வொர்ரி – பாடலில் இருக்கிற ராபின் வில்லியம்ஸ் உடனான நடனமும் வேடிக்கையாய் இருந்து என் பெண்களைக் கவர்கிறது. அதனாலும் இங்கு போட்டு வைத்திருக்கிறேன். 🙂 முதலில் The Simpsons நக்கலடித்திருந்த ஒரு படம் YouTubeல் கிடைத்தது. அதைப் பிறகு கண்டுபிடிக்கமுடியவில்லை. தேடிக் கொண்டிருக்கிறேன் இன்னும்.

 • 10 முகமதலி ஜின்னா // Feb 14, 2010 at 1:08 pm

  வித்தியாசமானதாகவும் அற்புதமானதாகவும் உள்ள கட்டுரை