கோணப் புளியங்கா
Dec 9th, 2004 by இரா. செல்வராசு
காட்டு வேலியில மொளச்ச
கொவ்வாப் பழமும் – வெல்லம்
போட்டு இடிச்சுத் தின்ன
புளியங் கொழுந்தும்
மாட்டு வண்டி லாரியில
உருவுன சக்கரக்கரும்பும்
உலுக்குன மரத்துக் கடியில
பொறுக்குன கோணப் புளியங்காவும்
கன்னம் பூராஇலுக்கிக் கிட்டு
ஈச்ச பனம் பழமும்
இன்னும் பெருவெரலு உட்டு
உறுஞ்சுன எளநொங்கும்
எதுவுமே தெரியாம
எம்புள்ளைக வளருது
எல்லாமுங் கெடைக்குற
அமெரிக்கத் தேசத்துல.
* * * *
ஆகா!நெஜந்தான் செல்வராஜ் !
இதெல்லாமும் இப்ப கிராமத்திலேயே
இருந்தாலும் கிடைக்குமா?
கிராமமெல்லாம்தான் நகரம் ஆகிவிட்டதே?
🙂
அந்த காலத்த நெனச்சா பெருமூச்சு மட்டுந்தான் மிஞ்சுதுங்க.
‘கோணப் புளியங்கா’ என்று படித்தவுடனே , கடவாய்ப்பல் கூச, நுனி நாக்கு என்னையறியாமல் சப்புக்கொட்டுகிறது 😉 காலையில் வந்து படித்தவுடன் சிறிது நேரம் பழைய பள்ளிக்கூட ஞாபகங்களை நினைத்துக் கொண்டிருந்தேன்.
Selva,
kalakki teenga…
Arumaiyana pathivu…
Oru nimisham,
Kona puliyangaa( seeni puliyangaa-nnum solvaanga..) aanaa, pollachi-la KP-nnu thaan ennakku arimugam. Ennoda anna thaan kondu vanthu koduththaar mutha muthalaa.
Aiyooo.. Engeyo poitaen…
எல்லோருக்கும் நன்றி.
மெய்யப்பன், ரொம்ப நாளா உங்களப் பார்க்க முடியல்லே. முக்கியமான வேலையில் இருக்கீங்கன்னு உங்க கடைசிப் பதிவு சொல்லுது. சந்தோஷமாய் இருங்க.
பாலாஜி-பாரி, என் மனைவி கூடச் சீனிப் புளியங்கான்னு தான் அதிகம் கேள்விப் பட்டிருப்பதாய்ச் சொன்னார். நான் இந்தத் தலைப்பு வைப்பதற்கு அவரும் ஒரு காரணம்.