SharpReader
Mar 4th, 2004 by இரா. செல்வராசு
RSS பற்றிப் பல காலமாய்ப் படித்து ஆய்ந்து கொண்டிருந்தாலும், இத்தனை நாட்களாய் ஒரு திரட்டியைப் பயன்படுத்தாமல் இருந்தேன். ஒரு நல்ல திரட்டியாக வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருக்கையில் குமரகுரு SharpReaderன் புதிய வெளியீடு பற்றி எழுதி இருந்தார். Atom ஓடைகளையும் அது இப்போது படிக்கிறது என்றார். BlogSpot இப்போது இலவசப் பதிவுகளுக்கு Atom ஓடையைத் தருவதால் இனி SharpReaderஐப் பாவித்துப் பெரும்பாலான தமிழ்ப் பதிவுகளைப் பார்க்க முடியும் என்று இன்று தான் இறக்கிக் கொண்டேன்.
எனக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் எந்த பைட்-குதறல்களுக்கும் ஆளாகாமல் அழகாக வருகிறது. அதோடு ஒவ்வொரு தளத்திற்காகச் சென்று பார்க்காமல் ஒரே இடத்தில் பார்த்துக் கொள்ள முடிவதில் எவ்வளவு நேரம் மிச்சமாகிறது ! WBeditor என்று ஒரு சொருகல்-நிரலியும் கிடைக்கிறது. இதை வைத்துக் கொண்டு இந்தத் திரட்டியில் இருந்தே வலைப்பதிய முடியுமாம். நான் பாவிக்கும் movableType தளத்திற்கு எப்படி இணைப்பது என்று இன்னும் துருவிப் பார்க்க வேண்டும்.
குறிப்பு 1: SharpReader பெருவதற்கு முன் மைக்ரோசாஃப்டின் .Net Framework 1.1 என்பதை முதலில் இறக்கிக் கொள்ள வேண்டும்.
குறிப்பு 2: RSS பற்றி எளிமையாய் ஒரு பதிவைக் காசியும் இன்று எழுதி உள்ளார்.
ஃபயர் ஃபாக்ஸ் உலாவியின் சொருகுநிரல்(plugin) கொண்டு உங்கள் ஓடையைப் படிப்பதில் பிரச்சினை.
எந்தப் பதிவைச் சுட்டினாலும், அந்தப் பதிவிற்கு முந்தைய பதிவுதான் தெரிகிறது. உதாரணத்திற்கு இதைச் சுட்டினால், ‘சில சீர்திருத்தங்களும்…’ வருகிறது. மற்ற MT பதிவுகளில் பிரச்சினை இல்லை.
WBeditor சுட்டிக்கு நன்றி… ஷார்ப்ரீடருடன் அற்புதமாக இயங்குகிறது. பிடித்த செய்திகளை சேகரிப்பதற்கு இன்னொரு பயனுள்ள நிரலி.
RSS செய்தியோடைத் திரட்டு
RSS/Atom செய்தியோடைகள், ஓடைத் திரட்டுகள், ஷார்பĮ…
பின்தொடரும் நிழலின் குரல்
இந்தப் பதிவு ஜெயமோகனைப் பற்றியில்லை. RSS பற…