புது வீட்டுக்கு வந்தாச்சு !
Feb 18th, 2004 by இரா. செல்வராசு
இத்தனை நாட்களாய் bloggerல் குடி இருந்து விட்டு இப்போது வீடு மாறி இங்கு வந்தாயிற்று. இது இரண்டாவது மாற்றம், மூன்றாவது வீடு. ஒவ்வொரு முறை மாறும் போதும் சற்றுக் கடினமாகத் தான் இருக்கிறது. ஆனாலும் இங்கு கொஞ்சம் சுதந்திரம் அதிகம் என்று தோன்றுகிறது.
உதாரணத்திற்கு, பின்னூட்டப் பகுதிக்கு மூன்றாம் ஆள் யாரையும் நம்ப வேண்டியதில்லை. (மொத்த வீடே இன்னும் மூன்றாம் ஆளை நம்பித் தான் இருக்கிறது என்பது வேறு விஷயம்!).
செய்தியோடை அழகாய் வேலை செய்கிறது. Atom ஓடை வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். உண்மையில் அதுவும் ஏற்கனவே இருக்கிறது. தேவைப்பட்டால் பிரசுரித்துக் கொள்ளலாம்.
பதிவுப் பகுதிகள் அமைத்துக் கொள்ளலாம். அவற்றை இன்னும் முழுமையாய் அமைக்கவில்லை.
இந்தப் புதிய வீட்டின் மற்ற சீரமைப்பு விஷயங்களை ஓரளவு செய்து விட்டேன். இன்னும் இருப்பதை நாளடைவில் பார்த்துக் கொள்கிறேன். இதையே செய்து கொண்டிருந்தால் வேறு எதுவும் படைக்க (!!) இயலாது போய்விடும்.
அதனால், இனிமேல் எல்லோரும் இந்தப் புது வீட்டுக்கு வாங்க. பழைய பதிவுகளையும் பின்னூட்டங்களையும் இங்கு எடுத்துப் போட்டிருக்கிறேன். அதிகம் இருக்கவில்லை. ஆனாலும் ஒரு இடத்திலேயே எல்லாம் இருப்பதும் ஒரு சௌகரியம். பதிவுகளுக்குச் சரியான தேதியைப் போட முடிந்தாலும், பின்னூட்டங்களுக்குத் தேதியைச் சரி செய்ய முடியவில்லை. தெரியவில்லை. அதனால் அப்படியே விட்டு விடப் போகிறேன்.
புது வீடு MovableType கொண்டு தயாரானது. இன்னும் சற்றுக் கடினமாக இருந்தாலும், இதில் இருக்கும் ஒரு சுதந்திரம் நன்றாக இருக்கிறது. புது நுட்பங்கள் கற்றுக் கொள்ள இது ஒரு வாய்ப்பாகவும் அமைகிறதே என்று ஒருபக்கம் எனக்கு ஆர்வ மிகுதியும் ஏற்படுகிறது.
இந்தப் பக்கம் வந்து போகும் அனைவருக்கும் நன்றி. மீண்டும் விரைவில் சந்திப்போம்.
அன்பு செல்வராஜ்,
வந்து கொடுத்த ஊக்கத்துக்கு நன்றி. நீங்க ஊருக்குப் போனதா முந்தி யாரோ பேசிக்கிட்டாங்க. அப்போ நான் போயிப் படிச்சது ஆத்தாவும் தொலைபேசியும். அதன் பின் எதுவும் படிக்கவில்லை. உங்கள் புது வீட்டுக்கு அடிக்கடி வருகிறேன். i will try to get the comments box fixed!
சொட்டு நீலம் போட்ட மாதிரி வெள்ளை வெளேர்! காசி மாதிரி மெதுவா நாள், தேதி இத்யாதி எல்லாம் தமிழ் படுத்திடுங்க. அழகா கண்ணுக்கு உறுத்தாமல் இருக்கிறது 🙂
செல்வராஜ்,
வாழ்த்துக்கள்!
1. ஃபான்ட் வரிசையில் முதலில் ‘லதா’வைப் போடுங்கள். மொசில்லாவில் யுனிகோட் இன்னும் முழுமையாக அமைக்கப்படவில்லை என்று அறிகிறேன். சில எழுத்துக்கள் சரியாகத் தெரியவில்லை. (இப்போதுதான் இ.எ.பற்றிக் குறை சொன்னேன். ஆனால் காசு கொடுத்து வாங்குவதன்மேல் குறை சொல்ல உரிமை உண்டல்லவா;)
2. வண்ணங்களைச் சற்று மாற்றி அமையுங்கள். முடிந்தால் வேறு ஸ்கின் கிடைத்தால் போடுங்கள். வெங்கட், பரி ஆகியவற்றை பார்த்த கண் குழம்புகிறது:-)
Å¡úòиû
Å¡úòиû
காசி, பாலாஜி, ஆலோசனைகளுக்கு நன்றி.
உஷா, உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி.