Feed on
Posts
Comments

Category Archive for 'பயணங்கள்'

ஊரைச் சுற்றும் நகரப் பேருந்துகளில் ஏறி ஈரோட்டில் வலம் வந்தீர்களானால் பூங்காவின் சுவடே இல்லாத பன்னீர் செல்வம் பூங்காவை அடைவீர்கள் (எப்போதோ பூங்கா இருந்த இடத்தில் இப்போது ஒரு கட்டணக் கழிப்பிடம் மட்டுமே இருக்கும்). அதைத் தாண்டிச் சில நிமிடங்களில் “மணிக்கூண்டெல்லாம் எறங்குங்க” என்ற நடத்துனரின் குரல் கேட்டு இறங்கி ‘அங்கியும் இங்கியும் அன்னாந்து’ பார்த்தீர்களானால் மணியையும் பார்க்க முடியாது; ஒரு கூண்டையும் பார்க்க முடியாது. ஆனால் இங்கிலாந்தின் ஃப்ரொட்ஷம், செஸ்டர் போன்ற சிற்றூர்களில் நூற்றாண்டுக் கட்டிடங்களாய் […]

Read Full Post »

இரண்டு நாளாய் மீண்டும் பனி கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்கிறது. நியாயமாகப் பார்த்தால் க்ளீவ்லாண்டுப் பகுதியில் இருந்து வருபவனுக்கு இங்கிலாந்தின் பருவநிலை அப்படியொன்றும் குளிரைத் தரக் கூடாது. ஆனால், கடுங்காற்று வீசிக் குளிரை அதிகப் படுத்தியதால் எப்போதும் முக்காட்டைப் போட்டுத் தலையை மூடியபடியே தான் சென்று கொண்டிருந்தேன். இந்தக் குளிரிலும் தலையை மொட்டையடித்துக் கொண்டு நடப்பவர்களைப் பார்த்தால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. பொது இடமென்றும் பாராமல் மேலை நாட்டுக் காதலர்கள் கட்டிப் பிடித்துக் கொள்வது புரிந்து கொள்ளக் […]

Read Full Post »

விமான நிலையத்தில் எனக்கு முன்னிருந்த பல பேர் ஆறேழெட்டடி உயரப் பைகள் வைத்திருந்தார்கள். பனிச்சறுக்கு உபகரணங்களை எடுத்துக் கொண்டு விடுமுறைக்குப் போகிறவர்களாய் இருக்கும். பக்கத்து இருக்கைக்காரர் கூட ‘எல்.ஏ’ சென்று அங்கிருந்து ‘ஹவாய்’ செல்கிறாராம். அவர் இருக்கும் இடத்தில் நிறையப் பாகிஸ்தானியர்கள் இருக்கிறார்கள் என்றார். இங்கிலாந்து முழுதுமே பாகிஸ்தானியர்கள் நிறைய இருப்பார்களோ? பங்களாதேசத்தவரையும் இவர்கள் பாகிஸ்தானியர்கள் என்றே சேர்த்து வழங்குகிறார்கள் என்று நினைக்கிறேன். என்ன மொழியில் எழுதுகிறேன் என்று கேட்டுத் தமிழைத் தெரிந்து கொண்டு தன் வாழ்க்கைக்கு […]

Read Full Post »

சிகாகோ விமான நிலையத்தில் விறைப்பான குரலில் இம்மிகிரேஷன் (தமிழில்?) குடியேற்ற அதிகாரி ‘எவ்வளவு காலம் வெளியே போயிருந்தீர்’ என்று வரவேற்புத் தந்தார். மாற்றல் விமானத்திற்காகக் காத்திருக்கையில் தாமதமாகிவிட்ட முன்விமானத்தில் மாற்றிக் கொண்டதில் க்ளீவ்லாண்டிற்கு நினைத்ததை விட ஒரு மணி நேரம் முன்னரே வந்து சேர முடிந்தது. அகன்ற நெடுஞ்சாலைகளின் ஓரம் மிச்சமிருந்த பனியின் வெண்மையும், மேலெழும்பிய மணற்குன்றில் இலையிழந்த குச்சி மரங்களும் ஒரு பழகிய உணர்வைத் தந்தன. பலகாலம் இருந்து பழகிய ஊரும் நாடும் ஒரு சொந்தத்தைத் […]

Read Full Post »

தார்ச்சாலைகளும், அதிவேகம் செல்லும் கார்களும், ஊர்மத்தியில் பல வங்கிகளும் கடைகளும் இருப்பதால் ஃப்ரொட்ஷம்மைச் சிறு நகர் என்று சொல்லிவிட்டேன். ஆனால் இங்கிருப்போர் இதனை ஒரு கிராமம் என்று தான் வழங்குகிறார்கள். கிராமம் என்பதன் இலக்கணத்தை ஒரு இந்தியக் கிராமத்தை வைத்துப் பார்ப்பதால் உண்டாகும் விளைவு இது. நகர்ப்புறத்தில் இருக்கும் வசதிகள் பெரும்பாலும் கிடைக்கும், ஆனால் அளவில் சிறியதாய் ஒரு ஊர் – இது தான் இங்கே கிராமம். நகர்ப்புறத்து வசதிகளை கிராமப்புறங்களில் வழங்கும் புறத்திட்டு ஒன்றை (PURA?) […]

Read Full Post »

« Prev - Next »