Posted in பயணங்கள் on Feb 14th, 2005
விமான நிலையத்தில் எங்கள் நிறுவனப் பெயர்ப்பலகை தாங்கிய ஒருவரைச் சந்தித்து அவருடன் அங்கிருந்து வெளியேறியதைத் தவிர மான்செஸ்டரில் வேறு எங்கும் செல்லவில்லை, எதையும் பார்க்கவில்லை என்பதால் இதை மான்செஸ்டர் பயணம் என்று சொல்வது பொருத்தம் இல்லை தான். இருந்தாலும் இங்கிலாந்து நாட்டில் முதன் முறையாக உள்நுழைவது இந்த நகரின் வழியாகவே என்பதாலும், வந்திருக்கும் இடத்திற்கு அருகிருக்கும் பெருநகரம் இதுவே என்பதாலும் இது மான்செஸ்டர்ப் பயணமாகிறது. லேசாக மழை துளிர்த்துக் கிடந்தது. ஞாயிறு காலை என்பதாலாக இருக்க வேண்டும் […]
Read Full Post »
Posted in தமிழ், பயணங்கள், பொது on Nov 14th, 2004
ஆஸ்டின் பல்கலைக் கழகத்தில் எனக்கு எந்தவித வேலையும் இருக்கவில்லை. ஆனால், சமீபத்திய ஒன்றரை நாள் ஆஸ்டின் பயணத்தின் போது கிடைத்த ஒரு மூன்று மணி நேர இடைவெளியில் அந்தப் பல்கலைக்கழகத்தை நோக்கி நான் சென்று கொண்டிருந்ததன் பின்னணியில் எனது மனவிருப்பம் ஒன்று காரணமாய் இருந்தது. அங்குள்ள ஒரு நூலகத்தில் அருந்தமிழைப் பார்க்க முடியும் என்னும் ஒரு சாத்தியத்தின் பேரில் ஏற்பட்ட ஒரு ஆவல் தான் அது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு அமெரிக்கக் கல்லூரி ஒன்றின் நூலகம் […]
Read Full Post »
Posted in பயணங்கள், வாழ்க்கை on Nov 8th, 2004
க்ளீவ்லாண்டில் இருந்து ஆஸ்டின் செல்லும் விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் மேகக் கூட்டங்களுக்கு மேலெழும்பிப் பறந்து கொண்டிருக்கிறது. சாளரத்தின் வழியே பிரகாசமாய்ச் சூரிய ஒளி சுள்ளென்று உள்ளே பாய்ந்து கொண்டிருக்கிறது. மேலே தெளிந்த நீல வானம், கீழே வெண்பஞ்சுப் பொதிகளாய் மேகக் கூட்டங்கள். விமானம் இன்னும் மேலே செல்லச் செல்ல அந்தப் பஞ்சுப் பொதிகள் வெகு தொலைவில் இப்போது மிருதுவாய் வெறும் அலைகளாகத் தெரிகின்றன. இது வேறு உலகம். சிலுசிலுவென்று மழை தூறி மப்பும் மந்தாரமுமாய் ஒளி […]
Read Full Post »
Posted in பயணங்கள் on Jun 24th, 2004
பயணத்தின் இறுதிக் கட்டமாய் இரண்டு நாள் டென்வர் நகரில்- குறிப்பாகப் பதினாறாம் தெருவில் (16th Street) என்று சொல்லும் அளவிற்கு அந்தப் பகுதியிலேயே சுற்றிக் கொண்டிருந்தோம். டென்வர் டவுண்டவுன்(downtown என்பதை அப்படியே தமிழில் எழுதுவதற்கு வேடிக்கையாக இருக்கிறது!) பகுதியில் அமைந்துள்ள இந்தத் தெரு கோலாகலமாய் இருந்தது. சுமார் ஒரு மைல் நீளத்திற்கு மேலும் கீழுமாய் ஒரு பேருந்து சில நிமிடத்திற்கு ஒரு முறை சுற்றிக் கொண்டிருந்தது. அதில் எந்தக் கட்டணமும் இன்றி எங்கு வேண்டுமானாலும் ஏறி எங்கு […]
Read Full Post »
Posted in பயணங்கள் on Jun 20th, 2004
மலையின் மறுமுனைக்குச் செல்லப் பாலம் தவிர,கம்பித் தொங்கு வண்டியொன்றும் (Cable Car) இருந்தது. இதன் வழியே செல்லும் போது தூரத்தில் தெரியும் தொங்குபாலம் அழகாகக் காட்சியளிக்கிறது. ஆனால், இந்தப்பயணம் சுமார் மூன்றே நிமிடங்களில் முடிந்து விடுகிறது. எங்கிருந்தோ ஒரு சிகப்புஹெலிக்காப்டர் உயரத்தில் பறந்து சென்றது. மறுமுனையில் பெரிதாய் ஒன்றும் இல்லை. Petting Zoo என்று ஒரு சிறுவர் மிருகக் காட்சி சாலை. ஒருபட்டியிலே கடவைச் சாத்தி ஒரு ஐந்தாறு செம்மறி ஆடுகளை சுற்ற விட்டிருந்தார்கள். பட்டியும் மேய்கிற […]
Read Full Post »