Posted in பயணங்கள் on Jun 18th, 2004
“அமெரிக்காவில் எங்கு சென்றாலும், எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கிறது” என்று குறைபட்டுக் கொள்பவர்களைப் பார்த்தால், “ஏனுங்க, ஒரு நடை கொலராடோ பக்கம் போயிட்டு வந்து அப்புறம் பேசுங்க” என்று தான் கூற வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். ஒரே மாதிரி இருக்கும் இடங்களுக்கு மட்டும் போய் விட்டு வந்து “எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கிறது” என்றுஅலுத்துக் கொண்டால், அது போய் வந்தவர்களின் குறையா அல்லது அந்த இடங்களின் குறையா? கொலராடோ நிச்சயம் வித்தியாசமான பகுதி. […]
Read Full Post »
Posted in பயணங்கள், வாழ்க்கை on Jun 15th, 2004
கொலராடோ என்ற பெயர் “Colo-Rado” என்பதில் இருந்து வந்திருக்கிறது. Colo-Rado என்றால் “சிகப்பு நிறம்” (Color-Red ) என்று பொருள். ஆக, இந்த மண்ணுக்கும் மலைக்கும் நிலத்துக்கும் தக்கதொரு அருமையான காரணப் பெயர் இது. இந்த விவரத்தைப் பயணம் முடியும் தருவாயில் தான் தெரிந்து கொண்டேன் என்றாலும் வந்த முதல் சில நாட்களிலேயே,’இங்கே இயற்கை சற்றே செம்மையை அதிகமாகப் பூசிக் கொண்டிருக்கிறது’என்று நான் எண்ணியது சரியாகத் தான் இருக்கிறது. அதனால் எனக்கு இந்தப் பெயர் இன்னும் கூடுதலாகப் […]
Read Full Post »
Posted in பயணங்கள் on Jun 8th, 2004
கொலராடோ ஸ்பிரிங்ஸ்- டென்வரை விட இன்னும் ஓராயிரம் அடி அதிக உயரத்தில் இருக்கிறது. ராக்கி மலைத்தொடரின் பள்ளத்தாக்குகளில் அமைந்திருக்கிற இந்த ஊரைச் சுற்றி அந்த அழகான மலைத்தொடர் அருமையான பின்னணியை அமைத்துக் கொடுத்திருக்கிறது. “மறக்காமல் தண்ணீர் நிறையக் குடியுங்கள்” என்று பலரும் அறிவுறுத்தினர். அதிக உயரத்தில் இருக்கிற இடங்களில் நம் உடல் நீர் சுண்டிவிடும் வாய்ப்புக்கள் உண்டு என்றும் அது தலைவலி, தூக்கமின்மை போன்ற உபத்திரவங்களைத் தரவல்லது என்றும் கூறினர். பெயரிலே ஸ்பிரிங்ஸ் இருந்தாலும் இந்த ஊரில் […]
Read Full Post »
Posted in பயணங்கள் on Jun 7th, 2004
டென்வர் விமான நிலையம் சற்றே ஊரை விட்டுத் தள்ளி இருந்தது. அங்கிருந்து வெளியேறிய போது காரில் இருந்து திரும்பிப் பார்த்தபோது அந்த விமான நிலையம்ஏதோ காட்டுக்கிடையே கட்டப்பட்ட ஒய்யாரக்கூடாரம் போலிருந்தது. ஊரே ஒரு பரவலாய்ப் படர்ந்திருந்தது போன்ற உணர்வு. அந்த அடர்த்திக் குறைவு ஊருக்கு வெளியே மட்டுமாக இருக்கலாம். முக்கிய ஊர்ப்பகுதிக்குச் செல்லாமலே கொலராடோ ஸ்ப்ரிங்ஸ் நகர் நோக்கி விரைந்தோம். இந்தப் பகுதி கடல் மட்டத்தில் இருந்து சுமார் ஒரு மைல் அளவில் மேலே உள்ளதாம். அதனால் […]
Read Full Post »