Feed on
Posts
Comments

Category Archive for 'பயணங்கள்'

சிட்னி சுற்றுலாவிற்கு ஏற்ற ஒரு நகரம். நடுநகர்ப் பகுதியிலேயே பார்க்கவென்று நிறைய இடங்கள் இருக்கின்றன. சில ஆண்டுகள் ஆனபின்னும் இன்னும் நினைவில் இருக்கிற இடங்கள் ஓல்ட் சிட்னி, டார்லிங் ஹார்பர் பகுதிகள். சிட்னி என்றவுடன் அடையாளச் சின்னங்களாய் முதலில் படுவது ‘ஆபரா ஹவுஸ்’ – இன் எழில்மிகு வடிவமும் ‘ஹார்பர் பிரிட்ஜ்’ எனப்படும் துறைமுகப் பாலமுமாகத் தான் இருக்கும். ஓல்ட் சிட்னி என்னும் பழைய சிட்னிப் பகுதியில் தங்கினால் நடந்து போகும் தூரத்தில் விசைப்படகுத் துறை இருக்கிறது. […]

Read Full Post »

குறைந்தது மாநிலத்துக்கு ஒன்று என்று ஆஸ்திரேலியாவில் மிகப் பெரிய நகரங்கள் இருக்கின்றன. அவற்றுள் கிழக்குக் கரையோரம் இருக்கும் சிட்னி, மெல்போர்ன் இவை முக்கியமானவை. இவை போன்ற பெரிய நகரங்களை விட்டால் இடையில் குறுநகரங்கள் தான் இருக்கின்றன. அப்புறம் எங்கும் நிறைந்த காடு. அவ்வளவு தான். குறுநகரங்கள் சொல்லி வைத்தாற் போல் ஒரு இலக்கணத்துக்கு உட்பட்டவையாக இருக்கின்றன. குறுக்கும் நெடுக்குமாக நாலைந்து தெருக்கள். நகரின் நடுப்பகுதியில் கடைவீதி. தவறாமல் இந்திய உணவகம், தாய்லாந்து, சீன உணவகங்கள். இப்படி. வழியில் […]

Read Full Post »

இவ்வார நட்சத்திர நிலவு வசந்தன் கங்காரு என்று ஒரு படம் போட்டிருப்பது ஒரு பகிடிக்குத் தான் என்று நினைக்கிறேன். நிச்சயமாக நான் பார்த்த கங்காருக்கள் அப்படி அணில் மாதிரி இருக்கவில்லை :-). குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு முன்னர் அவை அப்படி இருக்கவேயில்லை! மூன்றே வாரங்களுக்கு என்று சென்ற ஒரு பயணம் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு இழுத்து விட ஆஸ்திரேலிய அனுபவத்திற்கும் அரிய காட்சிகளைக் காணவும் ஒரு அருமையான வாய்ப்பாய் அமைந்தது. (அட! அது பற்றிக் கூட […]

Read Full Post »

இங்கிலாந்தின் ரயில் பயணங்களிலும் ரயில் நிலையங்களிலும் ஒரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. உலகிலேயே பெரிய நிறுவனமான “இந்திய ரயில்வே”விற்கு வித்திட்டவர்களின் நாட்டிலே கிழக்கு-மேற்கு ரயில்பயணத்திற்குப் பெரும் சிக்கல். மேற்குக் கரையில் இருந்து கிழக்குக் கரையோரம் இருக்கிற நண்பன் ஒருவனைச் சந்திக்க இரண்டு மூன்று இடங்களில் வண்டி மாற்றிச் செல்ல வேண்டும் என்ற காரணத்தால் இடையில் சந்திக்கவேண்டியிருந்தது. அதிலும் வார இறுதிகளில் சில பகுதிகளில் ரயில் நிறுத்தப் படும் என்று பாதி தூரம் ரயிலிலும் மீதி ஒரு பேருந்திலும் […]

Read Full Post »

மீண்டும் ஒருமுறை இங்கிலாந்துப் பயணமாகச் சுருக்கமாய் ஒரு வாரம் சென்றுவிட்டுத் திரும்பி வந்து இரு வாரங்களாகி விட்டது. அதே வழியில் அதே விமானங்களில் பயணித்து அதே ஊருக்குச் சென்றாலும் இம்முறை சற்று வித்தியாசமாய் இருந்தது பயணம். உடன் இன்னும் இருவர். வாரம் முழுதும் அலுவலகத்தின் அதே கட்டிடத்தில் சந்திப்புகள்; அதே காலை உணவு; அதே மதிய உணவு. ஊர் திரும்புவதற்குச் சனி, ஞாயிறு, இரண்டு நாட்களுக்கும் இடையே விமானக் கட்டணத்தில் இருந்த நாலாயிரம் டாலர் வித்தியாசம் ஒரு […]

Read Full Post »

« Prev - Next »