Feed on
Posts
Comments

Category Archive for 'பயணங்கள்'

வாஸ்டெராஸில் நகர்நடுச் சதுக்கத்தில் இருந்த மிதிவண்டியோட்டிகள் சிலை என்னைக் கவர்ந்தது. இப்படியொரு சிலையமைக்க இங்கு ஒரு கலாச்சாரம், பாரம்பரியம் இருந்திருக்க வேண்டும். சுவீடனின் ஆறாவது பெரிய ஊர் என்றாலும், அப்படி ஒன்றும் பெரியதாகத் தெரியவில்லை. மாலை ஆறு மணிக்கு மேல் வெறிச்சோடிப் போகும் ஊர். இருந்த கொஞ்சம் மக்களில் பலர் மிதிவண்டிகள் வைத்திருக்கிறார்கள். உணவகங்களின் முன்னாலோ பிற குழுமலிடங்கள் முன்னாலோ ஓட்டுனர்களுக்காக வண்டிகள் காத்துக் கிடந்தன. முன்பெல்லாம் சரியான நேரத்திற்குப் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தபோது […]

Read Full Post »

ஐரோப்பாவின் பல நாடுகளுள் நுழைய ‘ஷெஞ்சென்’ நுழைவனுமதிப் பத்திரம் (Schengen Visa) வாங்கியிருக்க வேண்டும். அமெரிக்கக் குடிமகவாய் (குடிமகன்+குடிமகள்=குடிமகவு(?) ) இருந்தால் இது தேவையில்லை. பொதுவாகவே, அமெரிக்கர்களுக்குப் பல நாடுகளுக்குச் செல்லவும் நுழைவனுமதிப் பத்திரம் தேவையில்லை. இதற்காகவே அமெரிக்கக் குடியுரிமை வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்றொரு எண்ணம் மூலையில் எழாமல் இல்லை. ஏதோ ஒரு விநோத நாட்டுப்பற்றுணர்ச்சி வந்து இந்தியக் குடியுரிமையை விடாமலிருக்க வைத்திருக்கிறது. இதனால் இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களுக்கு நாட்டுப்பற்றுக் குறைவு […]

Read Full Post »

ஒரு நாள் முழுக்க நீலமலைப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்துவிட்டுத் திரும்பக் கிளம்பிய நேரம் தான் எங்கள் கதை ஆரம்பிக்கிறது! ஒழுங்காக வந்த வழியிலேயே திரும்பி நெடுஞ்சாலையிலே சென்றிருக்கலாம். ஆனால், எப்போதுமே புதுப் புது வழிகளைத் தேடும் நமது அறிவு அன்றும் கொஞ்சம் விளையாடிவிட்டது. “நெடுஞ்சாலை என்றாலும் மீண்டும் கிழக்கே சிட்னி நோக்கி நூறு கி.மீ போய்ப் பிறகு தென்மேற்காய்ப் போக வேண்டும். அதற்குப் பதிலாக இப்படி நேர் தெற்காக ஒரு வழி இருக்கிறது பார், அப்படியே போய் […]

Read Full Post »

சிட்னியில் இருந்து மேற்கே சுமார் நூறு கி.மீ தூரத்தில் ‘கட்டூம்பா’ என்று ஒரு சிறுநகரம் இருக்கிறது. ஆஸ்திரேலியப் பழங்குடியினரை ‘அபோரிஜனல்ஸ்’ (Aboriginals) என்று வழங்குகிறார்கள். அபோரிஜனல் மொழியில் ‘கெடும்பா’ என்றால் ஒளிக்கும் நீர் வீழ்ச்சி (shining falling waters) என்று பொருளாம். கெடும்பாவில் இருந்து மருவி வந்திருக்கிறது கட்டூம்பா. ஆஸ்திரேலியாவில் பல இடங்களில் இதுபோன்ற பழமையான, பழங்குடியினரின் ஊர்ப் பெயர்களே இன்னும் வழக்கில் இருக்கின்றன. உதாரணத்திற்கு, கேன்பரா (சந்திக்கும் இடம்), வாகா வாகா (காக்கா காக்கா), கூயாங் […]

Read Full Post »

மெல்போர்ன் அருகே இருக்கும் ஒரு கடற்கரைப் பகுதியில் இரவில் கூட்டம் கூட்டமாய்ப் பென்குயின்கள் கரைக்கு வரும் என்று பார்க்கப் பல மணி நேரங்கள் காரோட்டிச் சென்றிருந்தோம். எங்களைப் போன்றே பெருங்கூட்டம் கூடியிருந்தது. சில மணி நேரங்கள் இருட்டட்டும் என்று காத்திருந்து பார்த்தபோது, அவ்வளவாய் ஒன்றும் வரவில்லை. கடைசியாய், போனால் போகிறது என்று ஒரு சில பென்குயின்கள் மட்டும் காட்சி தந்தன. போகிறது போவென்று குளிருக்கு இதமாய் ஒரு தக்காளி சூப் குடித்துவிட்டு, பென்குயின் வேடமணிந்த ஒன்றைக் கட்டிப் […]

Read Full Post »

« Prev - Next »