பெங்களூர் – சென்னை விமானம் அரை மணி நேரப் பயணம் தான் என்றாலும் அருமையாய் நொறுக்குத் தீனி கொடுக்கிறார்கள். இப்போதெல்லாம் ஓரிரு மணி நேரம் செல்லும் அமெரிக்க விமானப் பயணங்களில் கடலைக்கொட்டை கூடக் கிடைப்பதில்லை. அதற்கு மேல் செல்லும் பயணங்களில் கூட, கிடைக்கிற சாப்பாட்டுக்கு ஐந்து டாலர் கேட்கிறார்கள். ஜெட் ஏர்வேஸ்-இல் இரவு தூங்குகிற நேரத்தில் எதற்கு குளிர்துண்டு கொடுக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் வியர்வை அழுக்கைத் துடைத்துக் கொள்கையில் அயர்வு நீங்கி ஒரு புத்துணர்வு வருகிறது. […]
Category Archive for 'பயணங்கள்'
புறாக்கள் பார்க்க அழகாக இருக்கின்றன. மாண்ட்ரீஸரிடம் சொன்னால் இந்த ஒற்றை வரியை வைத்துக் கொண்டு ஒரு நவீன கதை கட்டித் தலையைப் பிய்த்துக் கொள்ள வைப்பார் :-). திரைப்பாடல்களையே பெரும்பாலும் போட்டுத் தள்ளும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் கூட ஒருமுறை கூட்டமாய்ப் புறாக்கள் சிறகடித்துப் பறந்து செல்ல அவற்றின் பின்னே ஆடிவரும் செந்நிற ஆடையணிந்த அம்மணியைத் தேடி/நாடி ஒரு அய்யா ஓடி வருவார். இவையெல்லாம் கிடக்க, நேரிலும் புறாக்கள் பார்க்க அழகு தான். ஆனால் அவற்றின் எச்சங்கள் மட்டும் […]
நுகர்வோர் சேவையில் நாம் போக வேண்டிய தூரம் வெகுதூரம் என்று பலமுறை நினைத்துக் கொள்கிறேன். அது மீண்டும் ஒருமுறை இந்தியா வந்த முதல் நாள் இரவு இரண்டு மணிக்கு எங்கள் நிறுவனத்தின் விருந்தினர் இல்லத்தில் என்னைப் பார்த்துத் தூக்கக் கலக்கத்தில் கேட்டது. “என்னங்க, தனியாள் தானே வருவதாய்ச் சொன்னாங்க. ஒரு குடும்பமே வரும்னு யாரும் சொல்லலையே?” இத்தனைக்கும் பல மாதங்களாகப் பேச்சுவார்த்தை. தொலைபேச்சுக்கள். ஏற்பாடுகள். மின்மடல்கள். கையொப்பங்கள். “நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க சார். எல்லாம் நாங்க பாத்துக்கறோம்” […]
மூன்று நாட்களாக மட்டுமே ஒரு ஊரில் இருப்பவர்கள் அந்த ஊரைப் பற்றி எழுதக் கூடாது என்று ஒரு சட்டம் இருந்தால் முதலில் என்னைத் தான் பிடித்து உள்ளே தள்ளுவார்கள். அப்படி ஒன்றும் இல்லாத காரணத்தால் பெங்களூர் பற்றிய சில அனுபவ மற்றும் எண்ணக் குறிப்புகள். பெங்களூரின் சர்வதேச விமான நிலைய அனுபவம் வழமைக்கு மாறாய் இனிமையாய் இருந்தது. சரியாகப் படிவங்கள் பூர்த்தி செய்யாது வரிசையில் நின்ற போதும் குடிவரவு அதிகாரிகள் முறைப்புக் காட்டாமல் பொறுமையாய் இருந்தார்கள். வெளியே […]
சுவீடன் போய் வந்தது பற்றி அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் கேட்டார், “அது ஒரு பெரிய நாடு அல்லவா?” என்று. ஒரு நாடு சிறியது பெரியது என்று எதை வைத்துச் சொல்வது? பரப்பளவை வைத்துப் பார்த்தாலோ, மக்கட்தொகையை வைத்துப் பார்த்தாலோ சுவீடன் அப்படி ஒன்றும் பெரியது அல்ல. இவர்களின் மக்கட்தொகை மொத்தமாய் ஒன்பது மில்லியனுக்கும் குறைவே. ஒப்பிட்டுப் பார்க்க, தமிழகத்தில் மட்டும் சுமார் அறுபத்தி இரண்டு மில்லியன் பேர் இருக்கிறோம். பொருளாதார நிலையை வைத்து, வாழ்க்கைத் […]