Feed on
Posts
Comments

Category Archive for 'வாழ்க்கை'

நேற்று என்அப்பாவுடன் தொலைபேசியில் பேசினேன். அவருடைய வாழ்வின் இன்னொரு பாகத்தின் முடிவு, இன்று ஈரோடு நீதிமன்றத்தின்வருகைப் பதிவேட்டில்கடைசியாகப் போடும் கையொப்பத்தோடு நிகழ்ந்திருக்கும். பணியில் இருந்து இன்று முதல் அவருக்குஓய்வு. “எத்தனை வருஷம் ஆச்சுங்க அப்பா?” கொக்குமடைப்பாளையம் என்னும் சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவர் பார்த்த முதலும் கடைசியுமான வேலை இது தான். இளவயதில் தந்தையை இழந்தபின் தாயின் வளர்ப்பிலே மூன்று மகன்களில் இவர் மட்டும் பள்ளியிறுதி ஆண்டு (?) வரை கல்வி கற்றதே பெரிய விஷயமாகத் […]

Read Full Post »

சில நாட்களுக்கு முன்தோழியர் வலைப்பதிவில் ரங்கமீனா அவர்கள் எழுதி முடித்த”அப்பச்சி” தொடர் அருமையான ஒன்று. பத்து நாட்களுக்கு முன்னரே அவர் முடித்திருந்தாலும் விரிவாய் எனது கருத்துக்களைப் பதியவேண்டும் என்று எண்ணி இருந்தமையால் இந்தத் தாமதம். சுமார் பத்து வயதுச் சிறுமியின் பார்வையிலே,அவருடையவாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளைத் துல்லியமாய்ப் படம் பிடித்து எழுதியிருக்கிறார். தான்அதிகம்எழுதியதில்லைஎன்றுஅவர்கூறினாலும்”அப்பச்சி” ஒருஇனியநடையில்நன்றாகஅமைந்திருக்கிறது. அதில்கலந்திருந்தஉணர்ச்சிகளும்பெரும்பிடிப்பைஏற்படுத்துகின்றன. என்றுமேஉணர்ச்சிபூர்வமானஎழுத்துக்கள்சிறப்பாகஅமைந்துவிடுகின்றன.

Read Full Post »

  “அக்காவின் படம் மட்டும் போட்டால் எப்படி? என்னையும் கண்டு கொள்ளுங்கள்” என்றாற் போல் தானும் ஒரு படம் போட்டு என்னிடம் நீட்டினாள் நந்திதா. எதற்கெடுத்தாலும், எல்லாவற்றிலும் பெரியவளுடன் போட்டி. அல்லது நகலெடுத்தாற் போல் நிவேதிதா செய்வதையே இவளும் செய்வது பல சமயம் வேடிக்கையான ஒன்று. போட்டிகள் தகராறுகள் அவ்வப்போது நிறைந்திருந்தாலும் பல நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் உற்ற துணையாய் நட்புடன் விளையாடும் இவர்களைக் காண்பது பேரின்பம். அவசர வாழ்க்கையில் சில சமயம் இது போன்ற இன்பங்களை […]

Read Full Post »

சென்ற வாரம் நிவேதிதா ஒரு ஓவியம்வரைந்து கொண்டிருந்தாள். வசந்த-விடுப்பு என்று பாலர்பள்ளி இரண்டு வாரமாய் விடுமுறை. ஈரி ஏரியோரம் இருக்கும் க்ளீவ்லாண்டில் தான்வசந்தம் இன்னும் முழுதாய்வந்த பாட்டைக் காணோம். தமிழ்ப்புத்தாண்டு (எல்லோருக்கும் தாமதமான வாழ்த்துக்கள்) அன்று30 (F) டிகிரிக் குளிர். இந்த ஓரிரண்டு நாட்களாய்ப் பரவாயில்லை. வசந்தம் வந்து கொண்டிருக்கும் அறிகுறிகள் தெரிகின்றன. விடுமுறை என்றுவீட்டில் இருக்கும் மக்கள் இருவரையும் மேய்க்கும் வேலை மனைவிக்கு. தினமும் ஓவியமும், நடனமும், பிறகலைகளும், வெட்டி ஒட்டுதல்களும், பசையைக் கார்ப்பெட் தரையெங்கும் […]

Read Full Post »

சாதாரணப் பாட்டுக்கே வழி தெரியாத எனக்குக் கர்னாடக சங்கீதம் என்பது பலகாத தூரம். ஆனால் இந்த வாரம்க்ளீவ்லாண்டிலேயே தியாகராஜர் ஆராதனை விழா நடந்துகொண்டிருக்கிறது. தொடர்ந்து இருபத்தேழாவது வருடமாக இங்கிருக்கிற ஆர்வலர்கள் இந்தியாவிலும் இங்கும் உள்ள  இசைக்கலைஞர்களை வைத்துச் சிறப்பாக நடத்தி வருகிறஒரு விழா. சுற்று வட்டாரத்தில் இருந்து சுமார் நாலாயிரம் பேர் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார்களாம். நாற்பதே நிமிடங்கள் காரோட்டிச் சென்றால் நிகழ்ச்சிக்குச் சென்று விடலாம். ஆனாலும் ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவிற்கு நான் […]

Read Full Post »

« Prev - Next »