இன்று என் மச்சினிக்கு, மனைவியின் தங்கைக்கு, தமிழகத்திலேதிருமணம். வானத்துக் கோள்களின் வேகத்துக்கு ஈடுகொடுத்து எங்களால் விமானம் ஏறிப் போக முடியவில்லை. தொலைதூரத்தில் இருந்து வாழ்த்து மட்டுமே சொல்ல முடிந்தது. அய்யர் வரும் வரையில் அமாவாசை காத்திருப்பதில்லை. அருமைக்காரர் நடத்தி வைக்கும் திருமணம், அக்கா வரும் வரை எல்லாம்காத்திருப்பதில்லை. எங்கிருந்தாலும் எங்களின் அன்பு வாழ்த்துக்களைச் சுமந்து கொண்டு எங்கள் எண்ணங்கள் அவர்களைச் சென்றடையும். இப்படித்தான் இளவேனிற்காலத்தில் ஒரு நாள் – இதேவைகாசிமாதம்- நானும் என் மனைவியும் மணம் செய்துகொண்டோம். […]
Category Archive for 'வாழ்க்கை'
கண்கள் சொல்லும் கதை – 3
Posted in வாழ்க்கை on May 15th, 2004
புதிய நாட்டிற்குக் குடி பெயர்ந்துஒரிரு வருடங்கள் ஓடிவிட்டன. மீண்டும் ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்ளும் நேரம் வந்தபோது, “அட, நாமும் ஏன் இந்தக் கண்ணுக்கு உள்ளே ஒரு ஆடியைப் போட்டுக் கொள்ளக் கூடாது?” என்று ஒரு ஆசை தோன்றியது. Contact lens (கண்ணுள்ளாடி?) பற்றி எப்படி யோசனை வந்தது என்று தெரியவில்லை. ஒருவேளை ஒரு அறுபது டாலருக்குப் பரிசோதனை, கண்ணுள்ளாடி, அதற்கு வேண்டிய சாமான்கள் இவை எல்லாம் தருவோம் என்று பார்த்த விளம்பரமாய்க் கூட […]
கண்கள் சொல்லும் கதை – 2
Posted in வாழ்க்கை on May 9th, 2004
“ஒரு வருடம் கழித்து வந்து பாருங்க. மறுபடியும் பரிசோதித்துக் கொள்ளலாம்”, என்று கண் மருத்துவர் அனுப்பி விட, பிறகு அவர் சொல்லிவிட்டாரே என்று தினமும் பாலும் கீரையும் தவறாமல் எனது உணவில் சேர்க்கப்பட்டது. ஏதாவது சிறப்பு நாளன்று மட்டுமே விசேஷமாய் முட்டை சாப்பிட்ட காலம் போய், தினமும் ஒன்றிற்கு பதிலாய் இரண்டு, சிலசமயம் ஒருநாளில் மூன்று வேளையும் முட்டைசேர்ந்துகொள்ளும். வளரும் பருவத்தில் இப்படிச் சத்துணவு சாப்பிட்டதால், ‘குள்ளையனாக’ இருந்த நான் கிடுகிடுவென வளரத் தொடங்கினேன். “பாத்துங்க. மூணு […]
கண்கள் சொல்லும் கதை – 1
Posted in வாழ்க்கை on May 7th, 2004
சாதாரணமாகவே பெரிய கண்கள் எனக்கு என்று பலரும் கூறக் கேட்டிருக்கிறேன். சிறு வயதில் எனக்கு அழகான சிரிப்பும் விரிந்த கண்களும் என்று பிறர் கூறியது உண்டு. அதைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன் (ஹி..ஹி..). திருமணத்தின் பிறகு, உண்மை விளம்பிகளான மச்சான் மச்சினிகள் எனக்கு MKM (முட்டைக் கண்ணு மச்சான்) என்று பெயர் வைக்கும் அளவிற்குப் பெரியதாக இருந்தது என்று அப்போது தெரிந்திருக்கவில்லை. பெரிய கண்ணுடையவர்களுக்குக் கிட்டப்பார்வைப் பிரச்சினைகள் வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்று எந்த அறிவியல் அடிப்படையும் […]
தையிலே தீபாவளி
Posted in வாழ்க்கை on May 6th, 2004
நிவேதிதாவின் பாலர்பள்ளியில் இந்த வாரம் பல நாடுகளைப் பற்றி அறிந்து கொள்ளும் வாரம். தினமும் ஒரு நாடு பற்றி. அதில் இந்திய நாள் ஒன்று. சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது தான் என்ன என்ன செய்தாள் என்று காட்ட வேண்டிச் சில படங்கள் தேவை என்று சொன்னாள். அவசர அவசரமாக முன் தின இரவு கோர்த்துத் தந்த படம் கீழே. தை மாசமா இருந்தா என்ன? பேத்திகள் வந்தால் தான் ஊரிலே தீபாவளி. ஆன மேல சவாரி. […]