Feed on
Posts
Comments

Category Archive for 'வாழ்க்கை'

கூட்டம் கூட்டமாய் வௌவால்கள் தொங்கும் மரத்தை அங்கு மட்டும் தான் பார்த்திருக்கிறேன். கோடந்தூர் ராசாக் கோயிலைச் சிலர் வௌவால் கோயில் என்று கூறும் அளவிற்கு அது பிரபலம். யாரோ ஒரு முறை கல்விட்டு எறிய, கோபங்கொண்ட வௌவால்கள் வேறிடம் எங்கோ சென்று விட, பிறகு ஊர் மக்கள் மங்கல இசை முழங்கக் கூட்டமாய்ச் சென்று, சீர் செய்து அப்பறவைகளை மீண்டும் வருமாறு வருந்தி அழைத்து வந்தார்கள் என்று ஒரு பேச்சு வழக்குக் கதை கூட இருக்கிறது. அது […]

Read Full Post »

விருந்தோம்பலுக்குப் பெயர் போன கொங்கு நாட்டின் அமெரிக்க வாரிசு-என் தங்க மகள் நிவேதிதா-அப்படிக் கூறிவிட்டாளே என்று மனம் சற்றே வேதனைப் பட்டது. “அப்பா… நம் வீட்டிற்கு விருந்தினர்யாரும் வரவேண்டாம். அப்படியே வந்தாலும் இரவு நம் வீட்டில் தங்க வேண்டாம்!” அழுதபடி அவள் கூறியதை நண்பர் வீட்டினர் வேற்றறையில் இருந்து கேட்டும் விட்டனர். “நாங்க வேணும்னா பக்கத்து அறையில் படுத்துக் கொள்கிறோம். அவங்க படுக்கையை அவங்களுக்கே குடுத்துடுங்க”, என்று அவர்கள் தர்மசங்கடத்துடன் முன்வந்தது என் கஷ்டத்தை இன்னும் அதிகப் […]

Read Full Post »

கொலராடோ என்ற பெயர் “Colo-Rado” என்பதில் இருந்து வந்திருக்கிறது. Colo-Rado என்றால் “சிகப்பு நிறம்” (Color-Red ) என்று பொருள். ஆக, இந்த மண்ணுக்கும் மலைக்கும் நிலத்துக்கும் தக்கதொரு அருமையான காரணப் பெயர் இது.  இந்த விவரத்தைப் பயணம் முடியும் தருவாயில் தான் தெரிந்து கொண்டேன் என்றாலும் வந்த முதல் சில நாட்களிலேயே,’இங்கே இயற்கை சற்றே செம்மையை அதிகமாகப் பூசிக் கொண்டிருக்கிறது’என்று நான் எண்ணியது சரியாகத் தான் இருக்கிறது. அதனால் எனக்கு இந்தப் பெயர் இன்னும் கூடுதலாகப் […]

Read Full Post »

“என் கண்களுக்கு லேசர் சிகிச்சை பண்ணிக்கலாம்னு இருக்கேன்!” – பாதி யோசனையும் பாதி முடிவுமாகவும் கூறினேன். ஐந்து மாதங்களுக்கு முன் ஒருநாள் ஊருக்குச் சென்றிருந்தபோது, மனைவி, அம்மா மற்றும் பிறரோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஒரு அமைதியான நேரத்தில் தான் இப்படி ஒரு பிரகடனம் செய்தேன்.மெல்ல என்னை ஏறிட்டுப் பார்த்தனர். இவன் உண்மையாகச் சொல்கிறானா,இல்லை விளையாடுகிறானா என்று தீர்மானிக்க முனைந்தவர்கள் போலிருந்தது. கண்ணுள்ளாடியை விட்டுவிட்டு இரண்டாவது இன்னிங்ஸாக மீண்டும் கண்ணாடி அணிய ஆரம்பித்தும் ஒரு நாலரை வருடங்கள் […]

Read Full Post »

கண்ணுள்ளாடியைப் போட்டுக் கொள்ள நன்றாக இருந்தாலும் அதன் பராமரிப்பு வேலைகள் எக்கச்சக்கம். முதலில் கையில் (பையில்) ஒரு சின்னச் சொட்டு மருந்துக் குடுவை ஒன்றை எப்போதும் வைத்திருக்க வேண்டும். அவ்வப்போது கண் ஈரப்பசை காய்ந்து போகும் போது இரண்டு சொட்டு விட்டுக் கொள்ள வேண்டும். கண்களும் மூச்சு விடுமாமே! இந்த உள்ளாடியைப் போட்டுக் கொள்ளும் போது கண்ணின் நுண்ணிய துவாரங்கள்(?) அடைபட்டுக் கொண்டால் காற்று உள்நுழைய முடியாமல் போவதாலும் இப்படிக் காய்ந்து போய் விடுமாம். பிறகு இரவில் […]

Read Full Post »

« Prev - Next »