Feed on
Posts
Comments

Category Archive for 'வாழ்க்கை'

நான் ஒரு பெரிய பாடகன் இல்லை. குளியலறையில் கூட எனது இசை ஞானம் அதிகமாய் வெளிவந்ததில்லை. பார்க்கின்ற கேட்கின்றபாடல்கள் என்னையும் அறியாமல் எனக்குள் புகுந்து கொண்டால் தான் உண்டு. ஆனால், தற்செயலாகச்சில பாட்டு வரிகள் மட்டும் என்றாவதுஎன்னுள் எட்டிப் பார்ப்பது உண்டு. அதிலும் பாடல்களின் முதல் நான்கு வரிகளோ, இரண்டு வரிகளோ (பல்லவி?) மட்டும் தான்தப்பும் தவறும் நிறைந்துவெளிவந்து விழுவது வழக்கம். ஆக, நான் ஒரு சிறிய பாடகன் கூட இல்லை என்று தான் சொல்ல வேண்டும். […]

Read Full Post »

ஒரு வாரமாய்ப் பதிவுகளின் பக்கம்வரமுடியவில்லை. “இப்படி ஒரு காரணம்”என்று குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குத் தனியான ஒரு காரணம் இல்லை. ஆனால் பல காரணங்களின் சேர்க்கையால் இந்த நிலை. அலுவலக வேலை எடுத்துக்கொண்ட அதிக நேரம், அழுத்தம் இவற்றுடன் பெண்கள், மனைவி வழியாய் இறுதியில் என்னையும் பிடித்து வாட்டியஒரு வாரச் சளி இருமல். தொலைதூரத்தில் இருந்து வந்திருந்த நண்பர்கள், உறவினர்கள் உடன் கழித்தமூன்று நாட்கள். இப்படி… இவற்றோடு இன்னும் தாக்கல்செய்து முடிக்க வேண்டிய வருமான வரி அறிக்கை இன்னும் […]

Read Full Post »

ஒரு படங் கூடப் போடலேன்னா எப்புடின்னு குரல் கேட்டுதுங்க்ளா, சரி இன்னிக்கு ஒரு படம் போட்டுர வேண்டீது தான்னு நெனச்சேன். எங்க ஊருல இன்னும் குளுரடிக்குதுங்க. ரெண்டு நாளக்கி முன்னால பனிக்கொட்டல் ஒரு ஆறேலு இன்ச்சு இருக்குமுங்க. (“ழ” எல்லாம் கொங்கு நாட்டில கொஞ்சம் தகராறுங்க – நாங்க பலந்தான் சாப்பிடுவோம். வால எலயுல தயிர் சாதம் சாப்பிட்டா ஒரு கூடுதல் சுவை வந்துருமுங்க!) மார்ச்சு பாதியாச்சு இன்னும் இப்படிக் கொட்டுது பனி! சீக்கிரமா வருமா வெய்யக்காலமுன்னு […]

Read Full Post »

குதிரைக்குப் பிடிக்கும் என்பார்கள். ஆனால் நான் குதிரை இல்லையே ! சிலருக்குச் சில வகைகளில் சமைத்தால் தான் இது பிடிக்கும் என்று கேட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு எந்த வடிவமானாலும் கொள்ளுப் பருப்புப் பிடிக்கும். சமைப்பதற்காக வேக வைத்திருப்பார்கள். தண்ணீரை இறுத்து ஊத்தி விட்டுக் குழம்பு செய்யவென்று தனியே வைத்திருக்கும் பருப்பைத் திருடி இளஞ்சூட்டோடு வாயில் போட்டுக் கொள்ளச் சுவையாய் இருக்கும். முழுவதுமாய் வடியாதமெலிதாய் உப்புக் கலந்த கொள்ளு வெந்தநீர் நாவின் நுனியில் முதலில் பட்டு அப்படியே ஓரங்களில் […]

Read Full Post »

“சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…” பாரத நாட்டு ஒருமைப்பாட்டிற்காக ஒரு பாட்டைப் பாடி வைத்தான் பாரதி ! ஆனால் சில நிமிடங்களுக்கு முன் இந்தப் பாட்டைத் தான் என் பெண்களுக்குத் தாலாட்டாய்ப் பாடி (!) உறங்கத் தயார் செய்து விட்டு வந்தேன். பாட்டும்தாலாட்டும்தெரியாதஎனக்குஅவ்வப்போதுகைகொடுப்பதுபாரதிதான். இது ஒரு தாலாட்டுப் பாட்டின் இலக்கணங்களுக்கு உகந்ததாய் இல்லாதிருக்கலாம். ஆனால் எனக்கும் என் பெண்களுக்கும் இடையேயான அந்தச் சிறு […]

Read Full Post »

« Prev - Next »