Posted in வாழ்க்கை on Feb 26th, 2004
சமீபத்திய இந்தியப் பயணத்தில் ஒருநாள். அது ஒரு ஞாயிற்றுக்கிழமையின் மதிய வேளை. ஏதோ சாமான் வாங்கிவரக் கடைவீதிப் பக்கம் சென்று மூன்று மணிக்கே மூடஇருந்த ‘சங்கீதா’வில் வாங்கிக் கொண்டு அந்தச் சாலை முக்கில் திரும்பும் போதுதான் அவரைப் பார்த்தேன். ‘ஸ்கூட்டி’ மாதிரி இருந்த ஒரு வண்டியை ஓட்டிச் சென்று கொண்டிருந்த அவரைத் துரத்திப் பிடித்து நிறுத்தியபோது உடனே என்னைத் தெரிந்துகொண்டார்.
Read Full Post »
Posted in கண்மணிகள், வாழ்க்கை on Feb 22nd, 2004
கடந்த வாரத்தில் எனது பெரிய பெண்ணை இவ்வருடம் பள்ளியில் சேர்க்கப் பதிவு செய்யும் நாள் என்று போயிருந்தேன். நல்லதொரு அமைப்பு முறையும் அனுபவமுமாய் இருந்தது. ஒருவாரம் முன்னரே அறிமுகநாள் என்று ஒரு கூட்டம் போட்டு அதிலேயே விவரங்கள், படிவங்கள் எல்லாம் கொடுத்துப் பெயர் வரிசைப்படி இரண்டு நாட்களாய்ப் பிரித்து அதன்படி எல்லோரையும் வரச்சொல்லி இருந்தார்கள். ஒரு பெரிய அறையில் நான்கைந்து நிலையங்கள் அமைத்து வரிசையாய் ஒவ்வொரு இடத்திலும் ஒரு விஷயம் சரிபார்த்து வாங்கி வைத்துக்கொண்டு, கேள்விகளுக்குப் பதில் […]
Read Full Post »
Posted in வாழ்க்கை on Feb 7th, 2004
காலையில் இங்குள்ள பொது நூலகத்திற்குக் குழந்தைகளை அழைத்துச் சென்றிருந்தோம். ஏதோ Dino Math என்று எனக்கொன்றும் சுவாரசியமாய் இல்லாத நிகழ்ச்சி. ஆனால் என்ன ? குளிர்காலப் பனிக்குள் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பதை விட இது மேல் தான். தவிர நேரடியாய் எனக்கொன்றும் பிடிப்பில்லை என்றாலும், அங்கு தாள்களில் டைனசோர் அச்சில் வரைந்து வர்ணங்கள் பூசுவதும், வெட்டுவதும் ஒட்டுவதும், பல புதிர்கள் போடுவதும், இன்னும் அங்கிருந்த பல குழந்தைகளோடு விளையாட முடிந்த அந்தச் சூழலில் இருந்த நேரத்தைப் பெரிதும் […]
Read Full Post »
Posted in வாழ்க்கை on Feb 4th, 2004
பூக்கள், செடி கொடிகள், மரங்கள், இவற்றைப் பற்றிய அறிவு பெரிதாய் இல்லாத சிறுநகரவாசி ஆக வளர்ந்தவன் நான். ஒரு முறை ஒரு கிராமத்திற்குச் சென்ற போது சோளத்தட்டைப் பார்த்து, “இது என்ன அரிசிச் செடியா ?” என்று நான் கேட்டதாகப் பல நாள் என்னைக் கிண்டல் செய்திருக்கிறார்கள். இன்னும் கூட எனக்கு வயலில் நெல்லுக்கும் சோளத்திற்கும் வித்தியாசம் எல்லாம் தெரியும் என்று நான் நம்பவில்லை. இம்முறை ஊர் சென்றிருந்தபோது ஒருநாள் மூன்றும் ஐந்துமான மக்களிடம் கதை விட்டுக் […]
Read Full Post »
Posted in வாழ்க்கை on Dec 5th, 2003
வருடா வருடம் ஊர் போகத் தான் ஆசை. ஆனால், பல வருடங்களுக்குப் பின் தான் இப்போது செல்லும்படி அமைந்து விட்டது. பற்பல காரணங்களால். நாளை கிளம்பும் முன் இன்னும் பெட்டி கட்டாமல் இம்முறை அப்படி ஒரு அவசரம், மும்முரம் வேறு. அதனால் ஊர் செல்லுகின்ற தாக்கம் இன்னும் தெரியவில்லை. மும்பை விமான நிலையத்தில் இறங்கும் போது முகத்தில் வந்து மோதப் போகிற இந்தியக் காற்றுத் தான் பரவசத்தை ஏற்படுத்தும் என்று எண்ணுகிறேன். அதன் பிறகு சென்னை வழியாய்ச் […]
Read Full Post »