Feed on
Posts
Comments

Category Archive for 'வாழ்க்கை'

மூன்று நாட்களாக மட்டுமே ஒரு ஊரில் இருப்பவர்கள் அந்த ஊரைப் பற்றி எழுதக் கூடாது என்று ஒரு சட்டம் இருந்தால் முதலில் என்னைத் தான் பிடித்து உள்ளே தள்ளுவார்கள். அப்படி ஒன்றும் இல்லாத காரணத்தால் பெங்களூர் பற்றிய சில அனுபவ மற்றும் எண்ணக் குறிப்புகள். பெங்களூரின் சர்வதேச விமான நிலைய அனுபவம் வழமைக்கு மாறாய் இனிமையாய் இருந்தது. சரியாகப் படிவங்கள் பூர்த்தி செய்யாது வரிசையில் நின்ற போதும் குடிவரவு அதிகாரிகள் முறைப்புக் காட்டாமல் பொறுமையாய் இருந்தார்கள். வெளியே […]

Read Full Post »

ஒரு நீல வண்ணக் கட்டியை எடுத்து நந்திதா படம் வரைந்திருந்தாள். எலிக்குட்டி நன்றாக இருக்கிறது என்று நல்ல வண்ணப் பேனா ஒன்றைக் கொடுத்து மீண்டும் வரைந்து தருமாறு கூறினேன். மீண்டும் வரைந்த எலியோ உட்கார்ந்து கொண்டது. “இல்ல நந்து. எனக்கு அதே மாதிரி வேணும்” இப்போது எலி எழுந்து நின்றது. இருந்தாலும் முதல் எலி மாதிரி இல்லை. “நந்து. இதுவும் நல்லா இருக்கு. ஆனா எனக்கு இன்னொன்னும் வேணுமே” இது உங்களுக்கு; இது அம்மாவுக்கு; இது சகோதரிக்கு […]

Read Full Post »

மூன்று வாரங்களுக்கு முந்தின நிகழ்வொன்று. முதலில் நினைத்தது போல் டொராண்டோவுக்குப் போக முடியாது போலிருக்கிறது என்று நயாகரா வரையாவது போய்விட்டு வரலாமா என்று எண்ணம். சிறியவள் கூட ஆசைப் பட்டாளே! இரண்டு வருடங்களுக்கு முன் சென்ற நயாகராப் பயணம், எடுத்து வந்த படங்களால் மட்டுமே அவள் நினைவில் இருக்கும். இப்போது கொஞ்சம் பெரியவளாகி விட்டதில் (இரண்டில் இருந்து நான்கு என்றாலும் பெரிய வயது தானே:-) ) இன்னும் அதிக அளவில் ரசிக்கக் கூடியதாய் அமையலாம். சரி அவ்வளவு […]

Read Full Post »

வாஸ்டெராஸில் நகர்நடுச் சதுக்கத்தில் இருந்த மிதிவண்டியோட்டிகள் சிலை என்னைக் கவர்ந்தது. இப்படியொரு சிலையமைக்க இங்கு ஒரு கலாச்சாரம், பாரம்பரியம் இருந்திருக்க வேண்டும். சுவீடனின் ஆறாவது பெரிய ஊர் என்றாலும், அப்படி ஒன்றும் பெரியதாகத் தெரியவில்லை. மாலை ஆறு மணிக்கு மேல் வெறிச்சோடிப் போகும் ஊர். இருந்த கொஞ்சம் மக்களில் பலர் மிதிவண்டிகள் வைத்திருக்கிறார்கள். உணவகங்களின் முன்னாலோ பிற குழுமலிடங்கள் முன்னாலோ ஓட்டுனர்களுக்காக வண்டிகள் காத்துக் கிடந்தன. முன்பெல்லாம் சரியான நேரத்திற்குப் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தபோது […]

Read Full Post »

ஒரு வீட்டுல ரெண்டு குரங்கு இருந்துச்சாம். ஒண்ணு பெரிய குரங்கு, பேரு நந்திதா. இன்னொன்னு ரொம்பச் சின்னக் குரங்கு நிவேதிதான்னு பேரு. நிவேதிதாக் குரங்கு இத்துளியூண்டு இத்துக்குளியூண்டு தான் இருக்குமாம். அந்த நந்திதா குரங்குக்குப் பசிச்சா நிவேதிதாக் குரங்கச் சாப்பிட்டுடுமாம். ஆனா அதுல ஒரு சிறப்பு என்னன்னா, நிவேதிதாக் குரங்கச் சாப்பிட எடுத்துட்டோம்னா அந்த இடத்துல இன்னொரு நிவேதிதாக் குரங்கு வந்துடுமாம். ஒன்னு ஒன்னா எத்தனை எடுத்துச் சாப்பிட்டாலும் இன்னொன்னு மாயமா வந்து உட்கார்ந்துக்குமாம். தீந்தே போகாதாம். […]

Read Full Post »

« Prev - Next »