எங்கூர்ப் பக்கம் புள்ளைக மாசமா இருக்கறப்போ கட்டுச் சோத்து விருந்துன்னு ஒண்ணு போடுவாங்க. புளிச் சோறு, எலுமிச்சாங்காச் சோறு, தக்காளிச் சோறுன்னு விதம் விதமா கட்டுச் சோறு ஆக்கிக்கிட்டு பொண்ணூட்டுக்காரங்க பையனூட்டுக்கு வந்து விருந்து போட்டுச் சாப்பிட்டுட்டு அப்புறம் புள்ளையக் கூட்டிக்கிட்டு அவங்க வீட்டுக்குப் போயிடுவாங்க. பிரசவ காலத்தில அம்மா ஊட்டுக்குக் கூட்டீட்டுப் போற விருந்துன்னு வச்சுக்கலாம். சிலசமயம் வளையல் எல்லாங் கூடப் போடுவாங்க. ஆனா இதத் தவிரப் பெருசா ஒண்ணும் இருக்காது. (சந்தனத்தக் கன்னத்துல இலுக்கிக்கறது, […]
Category Archive for 'வாழ்க்கை'
பாம்பி (இது மாண்ட்ரீஸர் ஊட்டுக்காரி பேரு இல்லீங்க:-) ) பேம்பின்னு எல்லாம் பேரு வச்சு இந்த டிஸ்னிக்காரங்க மானுங்கள ஒரு செல்லப் பிராணியாக்கிட்டாங்க. நான் ரொம்ப நாள் பேம்பின்னா பொண்ணு பேருன்னு நெனச்சிருந்தேன். ஆனா போன வருசம் பெரிய புள்ளை வச்சிருந்த ஒரு புத்தகத்தப் பாத்தப்போ தான் அது ஆம்பளப் பேருன்னு தெரிஞ்சுது! ஆம்பளயோ பொம்பளயோ, மானுங்க அப்படி ஒண்ணும் பஞ்சு மாதிரி மெதுமெது மிருகங்க இல்லீன்னு தான் நான் நெனக்கிறன். அதுங்க கொஞ்சம் எரும மாதிரி […]
நெஞ்சுக் கூட்டையும் தோள்பட்டையையும் இணைக்கிற பாலமாகப் புறம் ஒன்றாய் ஆளுக்கு இரண்டு எலும்புகள் இருக்கும். உடலுக்கு ஒரு கட்டமைப்புத் தருவதோடு இவை உள்ளிருக்கும் நரம்பு வலைகளுக்கும் பாதுகாப்பை அளிக்கின்றன. ஆங்கிலத்தில் Clavicle அல்லது Collar Bone என்று சொல்வார்கள். “S” வடிவத்தில் இருக்கும் இதனை இணையத் தமிழ் அகரமுதலி காறையெலும்பு அல்லது சவடியெலும்பு என்று கூறுகிறது. முதலில் விலா எலும்பு என்று தமிழ் அறிவிலியாய் எழுதிக் கொண்டிருந்ததை வெட்கத்தை விட்டு ஒத்துக் கொண்டு, தவறைச் சுட்டிக் காட்டிய […]
பெண்களுடன் நடந்து சென்று வந்தபோது வாத்துக்குளம் வறண்டு கிடந்தது. பாளம் பாளமாய் வெடித்துக் கிடந்த குளத்தைப் பார்த்துப் பெரியவளுக்குக் கொஞ்சம் ஏமாற்றம். இந்த வசந்தத்தில் போன வருடம் போல் மழையில்லை. தண்ணீரில்லாத குளத்தில் வாத்துக்கள் வரவில்லை. உள்ளே இறங்கிச் சிறிது நேரம் விளையாடியதில் வருத்தம் கொஞ்சம் மறைந்தது. “வாழ்க்கையிலேயே முதன்முறையாக இப்படிப் பார்க்கிறேன்” என்றாள். “இது என்ன பெருசு? எங்க ஊர்ல பெரிய பெரிய ஆறெல்லாம் தண்ணியில்லாமக் கிடக்குது” என்றேன். “It’s not fair” என்றாள். பேறாற்றைச் […]
ஓவியக் கண்காட்சி பார்க்கவென்று பெரிதாக ஒரு ஆர்வத்துடன் எங்கும் சென்றதில்லை. பள்ளி கல்லூரி நாட்களில் ஒருமுறை திருவனந்தபுரத்துக்குச் சுற்றுலா போயிருந்த போது எப்படியோ ‘மழைக்கு ஒதுங்கி’ ஒரு ஓவியக் கண்காட்சிக்குள் நுழைந்துவிட்ட கும்பலில் நானும் ஒருவனாய் இருந்துவிட்டேன். பொழுதைப் போக்கியவண்ணம் உள்ளே அலைந்து கொண்டிருந்தேன். ஒரு பக்கத்தில் இருந்த ஓவியக் கூட்டம் அப்படியே பிடித்து நிறுத்தி வைத்து விட்டது. என் அசிரத்தையைப் போக்கி ஆர்வத்தைத் தூண்டியது ஓவியர் ரவிவர்மாவின் எண்ணெய் வண்ணக்கலவைப் படங்கள். பிரகாசமான வண்ணங்களில் பலவகை […]