Feed on
Posts
Comments

Category Archive for 'வாழ்க்கை'

பொதுவாய்க் குளிர்காலத்தின் உச்சம் என டிசம்பர், சனவரி மாதங்களில் பனிமழைப் பொழிவுகளைப் பார்ப்பது வழக்கம். அதற்கு முன்னும் பின்னும் இரண்டு மாதங்கள் என்று கொண்டு அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை க்ளீவ்லாண்டில் பனி என்பதும் கூடப் பழகிய ஒன்றே. மார்ச் மாதத்தில் இருந்து இம்மி இம்மியாய் மேலேறும் வெப்ப நிலையில் கனத்த குளிராடைகளை விடுத்து சுமை குறைந்திருந்தன தோள்கள். வந்து கொண்டிருக்கும் வசந்தத்தின் அறிகுறியாய்ப் புள்ளினங்கள் அதிகாலையில் ட்வீட் ட்வீட்டிக் கொண்டிருந்தன. புல்வெளிகள் உறக்கம் கலைந்து […]

Read Full Post »

சிகாகோ விமான நிலையத்தில் விறைப்பான குரலில் இம்மிகிரேஷன் (தமிழில்?) குடியேற்ற அதிகாரி ‘எவ்வளவு காலம் வெளியே போயிருந்தீர்’ என்று வரவேற்புத் தந்தார். மாற்றல் விமானத்திற்காகக் காத்திருக்கையில் தாமதமாகிவிட்ட முன்விமானத்தில் மாற்றிக் கொண்டதில் க்ளீவ்லாண்டிற்கு நினைத்ததை விட ஒரு மணி நேரம் முன்னரே வந்து சேர முடிந்தது. அகன்ற நெடுஞ்சாலைகளின் ஓரம் மிச்சமிருந்த பனியின் வெண்மையும், மேலெழும்பிய மணற்குன்றில் இலையிழந்த குச்சி மரங்களும் ஒரு பழகிய உணர்வைத் தந்தன. பலகாலம் இருந்து பழகிய ஊரும் நாடும் ஒரு சொந்தத்தைத் […]

Read Full Post »

இரண்டு வார மும்முரமான வேலைகளுக்குப் பிறகு ஓய்வான ஒரு வெள்ளி மாலை. கிடைத்த சில மணி நேரத்தில் பொது நூலகத்தில் கொஞ்சம் தமிழ்மணம் பிடித்துக் கொண்டேன். அவசரமாய்ப் படித்த சிலவற்றில் பிடித்தது பெயரிலியின் புனைவு ஒன்று. கழியும் பழையது புதினத்தை ரசித்துப் படித்தேன். இன்னும் 3 நிமிடத்தில் இந்த நூலகக் கணிணி துரத்தி விட்டுவிடும். நாளை காலை கிளம்பி ஊர் நோக்கிப் பயணம். bmi என்கிற விமான நிறுவனம் bmi-baby என்றும் சில குறும்பயண விமானங்களை ஓட்டுகிறது […]

Read Full Post »

அமெரிக்க வடபகுதியின் குளிரும் பனியும் இவ்வளவு ஆண்டுகளில் பழகிப் போனவையாகவே இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் இயற்கையின் பிரம்மாண்டத்தை உணர வைப்பதாகவே இருக்கின்றன. மக்களின் அன்றாட இயக்கங்களுக்குச் சில இடையூறுகளை விளைவித்தாலும் பனிக்காலம் ஒரு வகையில் பார்த்தால் மிகவும் அழகானது. புதிதாய்க் கொட்டிக் கிடக்கிற பனியின் யாரும் கால்பதியாத வெண்மைப் பின்னணியில், அவற்றைத் தம்மில் தாங்கி இலையில்லா மரங்கள் சிறப்பொளி பொருந்தி நிற்பது கண்கொள்ளாக் காட்சி. கனடிய நகரங்கள் மற்றும் கடற்கரையோரங்கள் போலில்லை என்றாலும் க்ளீவ்லாண்டும் பனிக் குவியலுக்குப் […]

Read Full Post »

ஏதேனும் மெக்ஸிக்கோ வகை உணவகத்துக்குப் போயிருக்கிறீர்களென்றால் கேஸடியா (Quesadillas) என்று ஒன்று சாப்பிட்டிருப்பீர்கள். இரு புறமும் சுட்ட சப்பாத்திக்கு இடையே உதிர் பாலாடைக்கட்டியும்(?) (சீஸ்), தக்காளிக் கார சல்சாவும், கொஞ்சமாய் வெங்காயமும், இன்னும் சில இலைதழைகளும், வேண்டுமானால் வறுத்த/பொரித்த கோழித் துண்டுகளும் சேர்ந்து ஒரு தனிச்சுவையாய் இருக்கும். அதையும் சிறு சிறு முக்கோணத் துண்டுகளாக்கி சவர் க்ரீம் (Sour Cream) என்னும் செயற்கைத் தயிர் வகையறா ஒன்றில் தொட்டுச் சாப்பிடுவது பற்றி இங்கே எழுதும்போது எனக்கே உண்டாவதைப் […]

Read Full Post »

« Prev - Next »