அப்படி ஒன்றும் பெரிய உடல் நலக் கேடில்லை. வருடம் இருமுறை பருவத்திற்கொன்றாய் வந்து போகிற சாதாரணச் சளி மற்றும் மூக்கொழுகல் தான். இருந்தாலும் சற்றே மிதமான தலைவலியும் இருக்க, அலுவலுக்கு விடுப்புச் சொல்லி விட்டு இன்று வீட்டிலேயே இருந்துவிட்டேன். ஒரு நாள் ஓய்வு நலம் பயக்கும் என்று. மகள்கள் பள்ளிக்குச் சென்று வரவும், மனைவி அவர்களை அழைத்துக் கொண்டு சில வகுப்புக்களுக்குக் கொட்டும் பனியில் சென்று வரவுமாய் இருக்க, நான் மட்டும் வீட்டில் சுகமாக அமர்ந்து கொண்டு […]
Category Archive for 'வாழ்க்கை'
வெள்ளிக் கெழம வெளக்கு வச்சு எல்ல மாரிக் கெண்ண ஊத்தி சனிக் கெழம வாரா வாரம் சனீசு வரனுக் கொம்போது சுத்து. முக்குச் சந்துப் புள்ளை யார்க்கு மறக்கா மப்பாலு ஊத்தி – ஊரச் சுத்தி இருக்கும் மலை எல்லாம் சூடம் வச்சேன் முருக னுக்கு. கொல தெய்வங் கோயி லுக்கு கொடுமுடித் தீத்தம் வருசம் ஒருக்கா பழனி மலைச் சாமிக்கு நெத்திப் பட்டை யோடே பூசை. தொண்டத் தண்ணி வத்திப் போகக் கத்தி வச்சேன் அரோ […]
கிறிஸ்துமஸ் கால நினைவுகள்
Posted in வாழ்க்கை on Jan 3rd, 2005
ஒரு கிறித்துவப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்ற போது விவிலியம் கற்றிருக்கிறேன். பெரிதாய் ஒன்றும் நினைவில் இல்லை என்றாலும், “ஆதியிலே கடவுள் சொர்க்கத்தையும் பூமியையும் படைத்தார்” என்னும் ஜெனிஸிஸ் (1:1) வாசகம் மட்டும் மறவாதிருக்கிறேன். அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிகளும், இன்ன பிறவும் கடவுளின் இருப்பையே இப்போது கேள்வி கேட்க வைத்தாலும், அந்த நாட்களில் கடவுளின் குழந்தை கிறிஸ்து கட்டுத்தறியில் பிறந்தார் என்று நட்சத்திரங்கள் வழிகாட்டிய நாடகங்களில் மண்டிபோட்டுக் கொண்டு நடித்திருக்கிறேன். காணாமல் போன ஆட்டுக் குட்டியின் மீது […]
இந்தியாவுக்குப் போயிடலாமா?
Posted in வாழ்க்கை on Dec 19th, 2004
“நந்து… இந்தியாவுக்குப் போயிடலாமா?” நண்பர் ஒருவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததன் தாக்கத்தில் நான்கு வயதினளிடம் கேட்டேன். திரையில் ‘லயன் கிங்’ பார்த்துக் கொண்டிருந்தனர் மகள்கள். பெரியவள் ஊன்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘லயன் கிங்’ படம் கூட இன்னும் சிறிது அச்சத்தைத் தருவதாய் இருக்க, சின்னவள் என்னுடன் பேசும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தன் பார்வையைத் தொலைக்காட்சித் திரையில் இருந்து விலக்கிக் கொண்டாள். “நந்து… இந்தியாவுக்குப் போயிடலாமா?” “யேய்” என்று உற்சாகமான பதில் வந்தது.
குழந்தை வளர்ப்பும் அன்பும்
Posted in வாழ்க்கை on Dec 14th, 2004
பார்க்கின்ற எவரையும் கவர்ந்திழுக்கும் அழகான கண்கள் அங்கும் இங்கும் அலைந்தபடி, ‘இனி எல்லாமும் உங்கள் கையில்’ என்று முழு நம்பிக்கையையும் நம்மில் வைத்து, நம் கைகளில் ஒரு பிஞ்சு தவழ வருவது ஒரு உன்னத அனுபவம். ‘உங்கள் அருகாமையில் நான் நிறைவாய் இருக்கிறேன்’ என்று காட்ட விழைவதைப் போல் விரிந்த விரல்களோடு சிறு கரங்களும் கால்களும் மேலும் கீழும் உதற, அவசர அவசரமாய் மூச்சுக் காற்று உள்ளும் வெளியுமாகத் ததும்பும். விரல் நீட்ட, தளிர்க்கரங்கள் இறுகப் பற்றும். […]