ஊர் திரும்பு படலம்
Feb 25th, 2005 by இரா. செல்வராசு
இரண்டு வார மும்முரமான வேலைகளுக்குப் பிறகு ஓய்வான ஒரு வெள்ளி மாலை. கிடைத்த சில மணி நேரத்தில் பொது நூலகத்தில் கொஞ்சம் தமிழ்மணம் பிடித்துக் கொண்டேன். அவசரமாய்ப் படித்த சிலவற்றில் பிடித்தது பெயரிலியின் புனைவு ஒன்று. கழியும் பழையது புதினத்தை ரசித்துப் படித்தேன். இன்னும் 3 நிமிடத்தில் இந்த நூலகக் கணிணி துரத்தி விட்டுவிடும்.
நாளை காலை கிளம்பி ஊர் நோக்கிப் பயணம். bmi என்கிற விமான நிறுவனம் bmi-baby என்றும் சில குறும்பயண விமானங்களை ஓட்டுகிறது பற்றி எங்கோ படித்தேன்.
மர்பியின் சட்டம் என்று சொல்வது போல இங்கு வந்த பின் என் கணிணி வன் தகடில் சில பக்கங்கள் கெட்டுப் போய்ப் பெரிதாய் உபயோகிக்க முடியவில்லை. நல்ல வேளை ஒரு வாரத்திற்குத் தாக்குப் பிடித்தது. எழுத நினைத்து முடியாமற் போனவையும், தாளில் எழுதித் தட்டச்ச முடியாதவையும் இருக்கின்றன. ஊர் வந்த பிறகு பார்ப்போம்.
தொலைபேசியில் பேசினேன். வரவேற்புப் பரிசொன்று வைத்திருப்பதாய் அருமை மகள் சொல்லி இருக்கிறாள். ஆனந்தம்.
கொஞசம் போனது எந்தூரு? வந்தது எந்தூருன்னு சொல்லியிருக்க்லாம். எப்படி இருந்தாலும் வருக வருக
மான்செஸ்டர் என்று பின்னால் போய் தெரிந்துகொண்டேன். 🙂
செல்வராஜ், ஊருக்கு என்று படித்தவுடன் அலறியடித்து ஓடி வந்து படித்தேன். வந்த ஊருக்குத்தானே திரும்ப வாரீக. நாங் காசிமாறி நீங்க சொந்தஊருக்குப் பொறப்படுறீகளோன்னு பயந்துட்டேன். இந்தக் கோடைல உங்களோட கொஞ்சம் வெசயம் இருக்கு. ஊருக்கு வந்து நேரம் கெடக்கைப்ப ஒருவரி கடுதாசி போடுங்க. கொஞ்சம் வெசயம் பேசனும். (இயற்பியல் தளத்துல போய் நேரடியா எளுத முடியும்).