“அப்பா… ஒய் ஆர் யுவர் மாம் அண்ட் டேட் ஓல்ட்?” என்று கேட்டது குழந்தை. எட்டிக் குதித்து மேலே விழுகிறவளைத் தாங்கிக் கொண்டு தூக்கிச் சுற்றும் தெம்பு இன்றைக்கு அவருக்கு இல்லை. ஈரோடு நிலையத்திற்கு வந்து நின்ற இண்டர்சிட்டி ரயிலில் ஏற்றிவிடப் பெரியவளின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து வந்த அந்த இரு நிமிடங்கள் கூட அவருக்கு ஒரு நிறைவைத் தந்திருக்கக் கூடும். ஒரு காலத்தில் இறுக்கி வைத்துக் கொள்பவரின் வயிற்றைக் குத்திப் பார்த்து விட்டு, ‘கல்லு […]
Category Archive for 'வாழ்க்கை'
‘நவகிஸ்’ என்றால் கன்னடத்துல எதாவது அர்த்தம் இருக்கிறதா என்று கன்னட ஓட்டுனரைக் கேட்டேன். தமிழும் பேசுகிறார் அவர். ‘முடிவதில்லை’ என்கிற அர்த்தத்தில் அவர் சொல்லும் ‘ஆவுறதில்லே’ கேட்க நன்றாக இருக்கிறது. அவருக்கும் தெரியவில்லை. “நவ என்றால் புதிது, நவகிஸ்னா தெரியல்லியே” என்று தான் பதில் கிடைத்தது. எம். எஸ். ராமய்யா என்பவர் இந்த ஊரில் பெரிய ஆள் போலிருக்கிறது. அவர் பெயரில் வகைக்கு ஒன்றாய்க் கல்லூரி, பள்ளி எல்லாம் இருக்கிறது. பொறியியற் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பல்மருத்துவக் […]
பெங்களூர் – சென்னை விமானம் அரை மணி நேரப் பயணம் தான் என்றாலும் அருமையாய் நொறுக்குத் தீனி கொடுக்கிறார்கள். இப்போதெல்லாம் ஓரிரு மணி நேரம் செல்லும் அமெரிக்க விமானப் பயணங்களில் கடலைக்கொட்டை கூடக் கிடைப்பதில்லை. அதற்கு மேல் செல்லும் பயணங்களில் கூட, கிடைக்கிற சாப்பாட்டுக்கு ஐந்து டாலர் கேட்கிறார்கள். ஜெட் ஏர்வேஸ்-இல் இரவு தூங்குகிற நேரத்தில் எதற்கு குளிர்துண்டு கொடுக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் வியர்வை அழுக்கைத் துடைத்துக் கொள்கையில் அயர்வு நீங்கி ஒரு புத்துணர்வு வருகிறது. […]
புறாக்கள் பார்க்க அழகாக இருக்கின்றன. மாண்ட்ரீஸரிடம் சொன்னால் இந்த ஒற்றை வரியை வைத்துக் கொண்டு ஒரு நவீன கதை கட்டித் தலையைப் பிய்த்துக் கொள்ள வைப்பார் :-). திரைப்பாடல்களையே பெரும்பாலும் போட்டுத் தள்ளும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் கூட ஒருமுறை கூட்டமாய்ப் புறாக்கள் சிறகடித்துப் பறந்து செல்ல அவற்றின் பின்னே ஆடிவரும் செந்நிற ஆடையணிந்த அம்மணியைத் தேடி/நாடி ஒரு அய்யா ஓடி வருவார். இவையெல்லாம் கிடக்க, நேரிலும் புறாக்கள் பார்க்க அழகு தான். ஆனால் அவற்றின் எச்சங்கள் மட்டும் […]
நுகர்வோர் சேவையில் நாம் போக வேண்டிய தூரம் வெகுதூரம் என்று பலமுறை நினைத்துக் கொள்கிறேன். அது மீண்டும் ஒருமுறை இந்தியா வந்த முதல் நாள் இரவு இரண்டு மணிக்கு எங்கள் நிறுவனத்தின் விருந்தினர் இல்லத்தில் என்னைப் பார்த்துத் தூக்கக் கலக்கத்தில் கேட்டது. “என்னங்க, தனியாள் தானே வருவதாய்ச் சொன்னாங்க. ஒரு குடும்பமே வரும்னு யாரும் சொல்லலையே?” இத்தனைக்கும் பல மாதங்களாகப் பேச்சுவார்த்தை. தொலைபேச்சுக்கள். ஏற்பாடுகள். மின்மடல்கள். கையொப்பங்கள். “நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க சார். எல்லாம் நாங்க பாத்துக்கறோம்” […]