ஒரு தட்டுக் கோழிப் பிரியாணி ஓட்டல் சரோவரில் ஐம்பத்தெட்டு ரூவாய். முக்குக் கடையில் வாங்கிய வாடிலால் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஐந்து ரூவாய். தண்ணீர் என்று நினைத்துத் தெரியாமல் வாங்கிய கின்லீ பாட்டில் சோடா பன்னிரண்டு ரூவாய். தள்ளுவண்டிப் பெரியவரிடம் புரியாத மொழியில் பேரம் பேசி வாங்கிய மூன்று பச்சை நிற வாழைப்பழங்கள் ஐந்து ரூவாய். இருட்டைக் கிழிக்க முயன்று தோற்று விகசித்துப் போன தெருவிளக்கொளியில் மாடு கன்றுகளோடு வித்தியாசம் பாராமல் திரிந்து கொண்டிருக்கும் தாராப்பூர்-பொய்சர் மக்களூடே நடந்து […]
Category Archive for 'வாழ்க்கை'
அவளுக்கு வயது சுமார் இரண்டு இருக்கும். பச்சை நிறப் பொட்டு வைத்திருந்தாள். தீர்க்கமாய்ப் பார்வையைச் செலுத்தும் கண்கள். கொக்கி மாதிரி தலையின் இரு புறங்களில் கொண்டைகள். அப்போது தான் உறங்கி எழுந்து வந்தவள் தன் தந்தையின் மீது ஏறிக் கொண்டாள். அவரின் சட்டையை இறுகப் பற்றிக் கொண்ட ஒரு பாதுகாப்பு உணர்வோடு என்னைச் சந்தேகமாகப் பார்க்கிறாள். ஒரு அன்புப் பொட்டலமாய் இருந்த அவளையும் கொஞ்சுகிற பெற்றோரையும் பார்க்கையில் இரண்டு வயதினளோடு இருப்பது என்ன ஒரு சுகம் என்று […]
வார இறுதியில் தஞ்சாவூர் விரைவு வண்டி ஈரோடு ரயில் நிலையத்தில் என்னை இறக்கிவிட்டபோது இரவு மணி ஒன்று. பெங்களூரில் முன்பதிவு செய்யாத ரயில்வண்டியில் ஏறி மூட்டைமுடிச்சு வைக்கும் இடத்தில் கிடைத்த இடத்தில் படுத்துக் கொண்டே வந்துவிட்டேன். கீழே உட்கார்ந்திருந்தவர்களும் இடையில் ஏறியவர்களும் இடத்திற்காக சிறு சிறு சச்சரவுகளும், விட்டுக் கொடுத்தல்களும், சமாதானமான பின் சுமூகமான பயணமுமாய் இருந்த ஊடாடல்களைக் கவனித்துக் கொண்டே வந்தேன். சுவாரசியமாய் இருந்தது. யாராவது கேட்டால் மேலே இடம் கொடுக்கவும் சித்தமாய் இருந்தேன். ஆனால் […]
குரங்கே கோபமா?
Posted in வாழ்க்கை on Aug 19th, 2005
“என்ன கோபமா இருக்கியா?” என்று கேட்டது குரங்கு. “ம்ம்…, நீ?” “எனக்குக் கோபம் தான்” “எனக்கும் கோபம் கன்னாபின்னான்னு இருக்கு” என்றேன். “நெறயா எம் மேல. கொஞ்சம் உம் மேலயும். ‘ரௌத்திரம் பழகு’ன்னு மீசைக்காரன் ரெண்டு வார்த்தைல சொல்லிட்டுப் போய்ட்டார். ஆனா என்ன பண்றதுன்னு தெரியலே!” “சரி. விடு. இப்போ எதுக்குக் குதிக்கறே?” “விடா? நீதானே நான் குதிக்கவே இல்லைன்னு சொன்னே?” “ஆமா. அதுக்காக என்ன பண்றது? நீ சொல்றதுக்குப் பெரும்பாலும் மாற்றுச் சொல்லத்தானே நான்? எதுவுமே […]
அப்புடியே புதுசாச் செக்குல ஆட்டுன எண்ணெய் இருந்தா நல்லா இருக்குமேன்னு எங்கூட்டுக்காரிக்குத் திடீர்னு ஒரு ஆசை வந்துருச்சுங்க. பெத்த புள்ள கேட்டுருச்சேன்னு அவங்கப்பா எங்களயும் கூட்டிக்கிட்டு கெளம்பீட்டாரு. செக்கெண்ணயத் தேடிக்கிட்டு ஊரு தேடி ஊரு தாண்டிக் கடசில கொளப்பலூருக்கு வந்து சேந்தோம். மாடு வச்சுச் செக்காட்டி எண்ணெய் எடுக்கிறதெல்லாம் இப்போ இல்லைன்னு சொல்லீட்டாங்க. மிசினுத் தானாம். ரோட்ட ஒட்டி இருக்குற சந்துல கொஞ்சம் உள்ளுக்கால போனோம். ஓரமா இருந்த சாலக்கொட்டாயில மாடு ரெண்டு அச போட்டுக்கிட்டு இருந்துச்சு. […]