Feed on
Posts
Comments

Category Archive for 'வாழ்க்கை'

“ஏம்ப்பா, எதுக்கும் ஒரு கண்ணுல பண்ணிக்கிட்டு, அதுக்கப்புறம் கொஞ்சம் நாள் கழிச்சு ரெண்டாவதப் பண்ணிக்கலாமில்ல? என்னாலும் ஆயிட்டா என்ன பண்றது?”, கவலையை வெளிப்படுத்தினார் அம்மா. “ஆமாம். எங்கப்பா கூட நல்லா விசாரிச்சுப் பாத்துட்டு முடிவு பண்ணச் சொன்னாங்க. திடுதிப்புன்னு இப்படி முடிவு பண்ணிட்டீங்களேங்கறாங்க”, என்று மனைவி. பல்லாயிரக் கணக்கில் மக்கள் இந்தச் சிகிச்சையைச் செய்து கொண்டு இருந்தாலும் ‘நமது கண்’ என்று வருகையில் ஒரு எச்சரிக்கை உணர்வு வருவதில் வியப்பேதுமில்லை. பல காலமாய் இது பற்றி யோசித்து […]

Read Full Post »

“ராஜகுமாரா, கதையில் எனக்குச் சொல்ல இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது”, என்றன கண்கள். உறங்கும் நேரம் ஆகிக் கொண்டிருந்தாலும் அவை இன்னும் விழித்துக் கொண்டிருந்தன. பூப்பூவாய் வெளியே பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. சில நிமிடங்கள் முன் வெளியே சென்று வந்தபோது ஒரு பனிப்பூ விழுந்ததில் நனைந்து குளிர்ச்சி அடைந்திருந்ததாய்க் காட்டிக் கொண்டிருந்தன. சற்றே அவநம்பிக்கையுடன் கேட்டேன். “நீங்கள் சொல்லித் தான் ‘தொடரும்’ போட்டேன். ஆனால் இரண்டு வருடமாய் மௌனமாய் இருந்துவிட்டு… இப்போது நீங்கள் சொல்வதை நம்பச் சொல்கிறீர்களா?” “நீ […]

Read Full Post »

இரண்டு புள்ளிகளை வைத்து அவற்றினிடையே ஒரு நேர்க்கோடு வரையச் சொன்னால் சிறு குழந்தை கூட அழகாக வரைந்து விடும். நேர்க்கோடு எளிமையானது. அதனை வரைவதும் எளிமையானது. வரைகோட்டைப் பல வண்ணங்களால் அமைக்கலாமே தவிர வடிவம் என்பது அதற்கு ஒன்றே தான். அதே இரண்டு புள்ளிகளிடையே ஒரு நேரிலிக் கோட்டை வரையக் கிளம்பினால், வரம்பிலியாகக் கோடுகளை வரைந்து கொண்டே இருக்கலாம். நேரிலிக் கோடுகளின் சாத்தியங்கள் கணக்கில் அடங்காதவை. வாழ்க்கையும் அதனையொட்டிய அனுபவங்களும் ரசனைகளும் கூட இப்படித் தான். ஆரம்ப […]

Read Full Post »

“நாங்க வர்றப்போ தரையெல்லாம் பச்சையா புல் இருந்துச்சு. மரத்துல இலை இருந்துச்சு. இன்னிக்குக் கிளம்பிப் போனா வெள்ளையா பனி தான் இருக்கும். குளிரும். இருந்தாலும் எனக்கு ஜாலி தான்” இந்தப் பட ஓவியர் நந்திதா. என் மகளே. பெரியவளின் படத்துக்குப் போட்டியாக இவளும் வரைவேன் என்று கிளம்பி MSPaint வழியாய் இப்படி ஒன்றைப் படைத்தது எனக்கும் ஆச்சரியமே. ஆரோக்கியமான போட்டி என்பதை வரவேற்கலாம் தான். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Read Full Post »

உறக்கம் கலைந்தும் கண் விழிக்காத காலைப் பொழுதில் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். இரவு ஒரு மணி வரை வலைப்பதிவுகளில் உழன்று கொண்டிருந்ததன் விளைவுச் சோம்பல் இன்னும் முறிக்கப் படாமல் என்னுடனேயே படுத்துக் கிடந்தது. “அது ஏழே கால் மணின்னு போடுங்க”, கிண்டலாய் ஒலிக்கும் மனைவியின் குரலைத் தாண்டி மேலே செல்வோம். ஏற்கனவே குளித்துவிட்ட மகளின் மீது பூத்துக் கிடந்த நீர்த்துவாலைகளைத் துவட்டி விட்டபடி இருந்த என் மனைவியிடம் முன் தினப் பள்ளி நிகழ்வுகள் பற்றி நிவேதிதா பேசிக் […]

Read Full Post »

« Prev - Next »